Load Image
Advertisement

ஆன்மிகவாதிகளின் மனதை நோகடிக்காதீர்கள்!

Do not offend the minds of spiritualists!  ஆன்மிகவாதிகளின் மனதை நோகடிக்காதீர்கள்!
ADVERTISEMENT

முனைவர் மீனாட்சி பட்டாபிராமன், மதுரையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:தி.மு.க., மூத்த அமைச்சர் துரைமுருகன் சமீபத்தில், 'கருணாநிதி தொட்ட சிகரத்தை யாராலும் தொட முடியாது. அடி முடி காண முடியாதவர் அருணாசலேஸ்வரர்; அதுபோல் தான் கருணாநிதியும். அரசியல், சினிமா, இலக்கியம் என்று, பல துறைகளில் சாதனை படைத்துள்ளார்; பண்பாடு மிக்கவர். தொல்காப்பியத்துக்கு உரை எழுதியவர்' என்று, புகழ்ந்து தள்ளியுள்ளார்.

அவர் கூறியது போல, கருணாநிதி பல துறைகளில் சிகரம் தொட்டவர் என்பதில் யாருக்கும் சந்தேகம் இருக்காது. ஆனால், பரம நாத்திகரான துரைமுருகனுக்கு, கருணாநிதியோடு ஒப்பிட வேறு உதாரணங்கள் கிடைக்கவில்லையா?

தமிழகத்தை ஆண்டவரை, உலகையே காக்கும் ஆண்டவரோடு ஒப்பிடுவதா? அருணாசலம் எனும் நெருப்புக்கு அடி, முடி கிடையாது. ஆனால், கருணாநிதியின் அரசியல் ஆரம்ப அடியும், அதன் தொடர்ச்சியும், முடிவும் தமிழகமே அறியும். துரைமுருகன் கூறியது போல, அவர் ஒரு அறிவாளி என்பதில் சந்தேகமில்லை. ஆனால், அந்த அறிவை நல்ல விஷயங்களுக்கு மட்டும் பயன்படுத்தினாரா?

விஞ்ஞான பூர்வமாக ஊழல் செய்ய பாதை வகுத்தவர், சந்தர்ப்பவாத அரசியல் செய்தவர், முகஸ்துதிக்கும், புகழ்ச்சிக்கும் அடிமையானவர் என்பது, அவருடன் நெடுநாள் பயணித்த துரைமுருகனுக்கு தெரியாதா?

திருக்குறளே, இறைவனை பற்றி, 'தனக்குவமை இல்லாதான்...' என்று தான் சொல்கிறது. அந்த பொய்யாமொழியை உயிரென மதிக்கும், 'திராவிட மாடல்'காரர்கள், தனி மனிதனை கடவுளுடன் ஒப்பிடுவது சரியல்ல. இதிகாச புராணங்களில், இவர்களுக்கு நம்பிக்கை கிடையாதாம்; ஆனால், கறிவேப்பிலை போல, அவற்றை மேற்கோள் காட்ட மட்டும் பயன்படுத்துவராம்.

மேலும், 'கருணாநிதியை பண்பாடு மிக்கவர்' என்கிறார் துரைமுருகன். இந்திரா, அனந்தநாயகி, ஜெயலலிதா போன்ற பெண் தலைவர்களையும், காமராஜர் உள்ளிட்ட பெருந்தலைவர்களையும், கருணாநிதி எந்த அளவு தரக்குறைவாக விமர்சித்திருந்தார்... அதில், பண்பாடு எங்குள்ளது?

திராவிட செம்மல்களே... நீங்கள், உங்கள் தலைவர்களை பணம், பதவிக்காக எப்படி வேண்டுமானாலும் புகழ்ந்து தள்ளுங்கள்; ஆட்சேபனை இல்லை. ஆனால், கடவுளுடன் அவர்களை ஒப்பிட்டு, ஆன்மிகவாதிகளின் மனதை நோகடிக்காதீர்கள்.


வாசகர் கருத்து (29)

 • DARMHAR/ D.M.Reddy - Los Angeles,யூ.எஸ்.ஏ

  தமிழ் நாட்டின் முதல்வர் ஆவவதற்கு முன்னர் ஒரு காலத்தில் ரயில்பயணம் செய்த போது டிக்கட் வாங்காமல் பயணம் செய்தவர் என்ற புகழும் அண்ணாமலை பல்கலைக்கழக வேந்தர் திரு முத்தைய செட்டியாரை வற்புறுத்தி தனக்கு டாக்டர் பட்டம் வாங்கிக்கொண்டதும் தமிழ் நாட்டிற்கான இவரது அரிய தொண்டுகள்.

 • விடியல் - ,

  அவர் சொன்னது சரிதான்.ஊழல்செய்வதிலும் அதிலிருந்து தப்பிக்கும் முறைகளில் அடியும் முடியும் காணாத வாறு குடும்பமும் கட்சிகா ரர்களுக்கு கற்பித்தார் நாட்டில் உள்ள அரசியல் கட்சிகள் பல இவரிடம் கற்றுக் கொண்டதை மறுக்க முடியாது

 • vbs manian - hyderabad,இந்தியா

  அருணாலாச்சேஸ்வர் அக்னி பிழம்பு. கிட்டே போனால் பொய்ம்மை வஞ்சகம் சிறுமை கயமை எல்லாவற்றையும் பொசுக்கி விடும்.

 • pandit - Madurai,இந்தியா

  விக்ஞான ஊழலில் சிகரம் தொட்டது பற்றி துரை முருகன் சொல்லி இருக்கலாம்.

 • g.s,rajan - chennai ,இந்தியா

  ஆன்மீக வாதிகள் எல்லாம் பதிலுக்குத் திருப்பித் தாக்கினா பகுத்தறிவுவாதிகள் எல்லாம் தாங்கமாட்டாங்க ...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement