Load Image
Advertisement

காதலி கழுத்தை நெரித்து கொலை: தப்பி செல்ல முயன்ற காதலன் கைது

Girlfriend strangled to death: The boyfriend who tried to escape was arrested   காதலி கழுத்தை நெரித்து கொலை: தப்பி செல்ல முயன்ற காதலன் கைது
ADVERTISEMENT
கேரள மாநிலம் கொல்லம், தென்மலாவை சேர்ந்தவர் பவுசியா, 20. குரோம்பேட்டை, நியுகாலனியில் உள்ள மகளிர் விடுதியில் தங்கி, குரோம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவ கல்லுாரியில், நர்சிங் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார்.

கேரளா மாநிலம் கொல்லத்தை சேர்ந்தவர் ஆஷிக், 20. இருவரும் காதலர்கள். இந்நிலையில், மூன்று நாட்களாக கல்லுாரிக்கு செல்லாத பவுசியா, காதலனுடன் சேர்ந்து, குரோம்பேட்டை, சி.எல்.சி., சாலையில் உள்ள ஹோட்டலில் அறை எடுத்து தங்கியிருந்தார்.

நேற்று, அவர்களுக்குள் ஏற்பட்ட தகராறில், ஆத்திரமடைந்த காதலன் ஆஷிக், தன்னுடைய டீ சர்ட்டை கொண்டு, பவுசியாவின் கழுத்தை நெரித்து கொலை செய்தார். இதை தனது, வாட்ஸ் ஆப் ஸ்டேட்டசில் ஆஷிக் பதிவு செய்து வைத்திருந்தார்.

பவுசியாவுடன் தங்கியுள்ள சக மாணவியர், இதைபார்த்து அதிர்ச்சியடைந்து, ஹோட்டலுக்கு சென்றனர். அங்கு பவுசியாக கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. உடலை போலீசார் கைப்பற்றி, குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். தப்பி செல்ல முயன்ற ஆஷிக்கை, பல்லாவரத்தில் போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர்.


கல்லுாரி மாடியில் இருந்து குதித்து மாணவர் தற்கொலை





சென்னை அசோக் நகர் ஆர்.வி., நகரை சேர்ந்தவர் ரகுராமன் மகன் கோகுல் ராம், 19. பொத்தேரி பகுதியில் உள்ள தனியார் பல்கலைக்கழகத்தில், பி.இ., கம்ப்யூட்டர் சயின்ஸ் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். நேற்று, இவருக்கு சாப்ட்வேர் இன்ஜினியரிங் தேர்வு நடைபெற்றதால், கல்லுாரியின் ஐந்தாவது மாடியில் தேர்வு எழுதிக்கொண்டிருந்தார்.

கோகுல்ராம் தேர்வில் காப்பி அடித்ததை, பெண் பேராசிரியர் ஒருவர் கண்டுபிடித்து, கண்டித்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த கோகுல்ராம், தேர்வு முடிந்த பின், கல்லுாரி கட்டடத்தின் 11வது மாடியில் இருந்து குதித்தார். இதில், கோகுல்ராம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


வெடிபொருள் கடத்திய டிரைவர் கைது




சேலம், கருப்பூர் சுங்கச்சாவடியில் நெடுஞ்சாலை ரோந்து வாகன போலீசார், கடந்த 29ம் தேதி நள்ளிரவு வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஒரு லாரியில், ஜெலட்டின் ஜெல், எலக்ட்ரிக் டெட்டனேட்டர், ஒயர் என, 3,000 கிலோ வெடிபொருட்கள் இருந்தன. லாரியுடன் வெடிபொருட்களை பறிமுதல் செய்து, லாரி டிரைவரான இளையராஜாவை கைது செய்தனர்.


மான் வேட்டை 4 பேர் கைது




ராமநாதபுரம் மாவட்டம் தேவிப்பட்டினம் அருகே புல்லங்குடி பகுதியில் சிலர் மான் கறியை சமையல் செய்வதாக வனத்துறை அதிகாரிகளுக்கு புகார் சென்றது. வனத்துறையினர் புல்லங்குடி பகுதியில் நடத்திய சோதனையில், மஞ்சள் ஓடை பகுதியில் மான்கறியை சமைத்தவர்களை பிடித்தனர்.

அப்பகுதியில் புதைக்கப்பட்டிருந்த மானின் தோல், சமைத்த கால்கள், கறிக்குழம்பு ஆகியவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக, புல்லங்குடி செங்கல் சூளை தொழிலாளர்கள் நான்கு பேரை கைது செய்தனர். தப்பிய ஒருவரை தேடி வருகின்றனர்.


ரூ.25 லட்சம் நகைகள் துணிகர கொள்ளை




துாத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கணேஷ்நகரைச் சேர்ந்தவர் சந்திரமோகன், 62. இவர் மதுரையில் ேஹாட்டல் நடத்தி வருகிறார். இவர் தனது மனைவியுடன் தேனியில் உள்ள தனது மகன் வீட்டுக்கு நவ., 27ல், சென்றார்.

கோவில்பட்டி வீட்டில் உள்ள செடிகளுக்கு தண்ணீர் ஊற்ற வரும் வாட்ச்மேன் நடராஜன் நேற்று வந்த போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருந்தது. அந்த தகவலை அவர் சந்திரமோகனிடம் தெரிவித்தார். அவர் வந்து பார்த்தபோது வீட்டில் பீரோவில் இருந்த 25 லட்சம் ரூபாய் மதிப்பில் 62 சவரன் நகைகள், வெள்ளி பொருட்கள், பட்டு சேலைகள் உள்ளிட்டவை கொள்ளையடிக்கப்பட்டிருந்தன. கொள்ளையர்களை போலீசார் தேடி வருகின்றனர்.


சிறுமி பலாத்காரம்: வாலிபருக்கு 'போக்சோ'




பெரம்பலுார் மாவட்டம், முருக்கன்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜா, 25. இவர், நவ., 30ம் தேதி, பெரம்பலுார் மாவட்டத்தைச் சேர்ந்த, 16 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தார். குழந்தை நல உறுப்பினர் ராமு, மங்கலமேடு போலீசில் புகார் செய்தார். போலீசார் விசாரித்து, ராஜா மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து, ராஜாவை கைது செய்தனர்.


பயங்கரவாதி சுட்டுக்கொலை




ஜம்மு - காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் நடத்திய 'என்கவுன்டரில்' தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பான, லஷ்கர் - இ - தொய்பாவைச் சேர்ந்த பயங்கரவாதி சுட்டு கொல்லப்பட்டார்.


பெங்களூரில் 60 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்




பெங்களூரில் நேற்று ஒரே நாளில், அரசு மற்றும் தனியார் என, 60 பள்ளி களுக்கு, 'இ - மெயில்' வாயிலாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. தகவலறிந்த பெற்றோர் அலறி அடித்து பள்ளிக்கு சென்று, தங்களது பிள்ளைகளை அழைத்துச் சென்றனர்.


வங்கியில் ரூ.18 கோடி கொள்ளை




வடகிழக்கு மாநிலமான மணிப்பூரின் உக்ருலில் பொதுத்துறை வங்கியான பஞ்சாப் நேஷனல் வங்கியின் கிளை இயங்கி வருகிறது. நேற்று முன்தினம் மாலை, 10க்கும் மேற்பட்ட மர்ம நபர்கள், முகமூடி அணிந்தபடி ஆயுதங்களுடன் வங்கிக்குள் நுழைந்து, துப்பாக்கி முனையில், 18.80 கோடி ரூபாயை, கொள்ளை அடித்து சென்றனர்.


இந்திய மாணவருக்கு அடி, உதை: அமெரிக்காவில் 3 பேர் கைது




அமெரிக்காவில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த, 20 வயது மாணவரை கடத்தி, அடித்து துன்புறுத்திய வழக்கில், சக இந்தியர்கள் மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். பாதிக்கப்பட்ட மாணவருக்கு பல இடங்களில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதால், மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.



வாசகர் கருத்து (5)

  • kulandai kannan -

    பெயர் பொருத்தம், கன கச்சிதம்.

  • Pandi Muni - Johur,மலேஷியா

    மூர்க்க லவ் ஜிஹாத்.

    • தஞ்சை மன்னர் - Tanjore,இந்தியா

      பண்டி முனி ஹி ஹி

  • LakshmiNarasimhan KS - Chennai,இந்தியா

    Why not mention the college name? Scared

  • Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா

    நான் மீண்டும் மீண்டும் கூறுகிறேன் தமிழகம் ஒரு அமைதி பூங்கா. தமிழகத்தின் பெயரை கெடுப்பதற்காக இப்படி பொய் செய்திகளை வெளியிடுகிறார்கள். நம்பாதீர்கள். இப்படி யார் கூறுவார்....

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement