Load Image
Advertisement

புயலை எதிர்கொள்ள தயாராகுங்கள்: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு

Prepare to face the storm: CM Stalin orders  புயலை எதிர்கொள்ள தயாராகுங்கள்: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு
ADVERTISEMENT
சென்னை : 'புயல் சின்னத்தின் தாக்கத்தை திறம்பட எதிர்கொள்ள, பொதுமக்களுக்கு ஏற்படக்கூடிய சிரமங்களை குறைக்க, தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும், அனைத்து அலுவலர்களும் ஒருங்கிணைந்து மேற்கொள்ள வேண்டும்' என, முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தி உள்ளார்.

வங்கக்கடலில் உருவாக உள்ள, புயல் சின்னத்தின் தாக்கத்தை எதிர்கொள்ள, எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து, சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கடலுார், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், வேலுார், ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர்களுடன், 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக, நேற்று தலைமை செயலகத்தில் ஆய்வுக் கூட்டம் நடந்தது.

அப்போது, முதல்வர் ஸ்டாலின் தலைமை வகித்து பேசியதாவது:* கடந்த மாதம், 27ம் தேதி உருவான, காற்றழுத்த தாழ்வு பகுதி, தற்போது தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலவுகிறது. இதனால், நாளை, நாளை மறுதினம், தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களின் கனமழை பெய்யலாம்.

Latest Tamil News
* புயலின் தாக்கத்தை எதிர்கொள்ள, சம்பந்தப்பட்ட துறைகளின் செயலர்கள், துறைத் தலைவர்கள், மாவட்ட கலெக்டர்கள், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

* பாதிப்புக்கு உள்ளாகக்கூடிய மக்களுக்கு, முன் கூட்டியே எச்சரிக்கை வழங்கி, அவர்களை நிவாரண மையங்களில் தங்க வைக்க வேண்டும்.

* நிவாரண முகாம்களில், உணவு, பாதுகாப்பான குடிநீர், மின்சார வசதி உட்பட, தேவையான அனைத்து அடிப்படை வசதிகள் உள்ளதை, கலெக்டர்கள் உறுதி செய்ய வேண்டும்.

* மழை, வெள்ள காலங்களில், மின் கசிவால் ஏற்படும் விபத்துகளை தடுக்க, மின்சார வாரியம் கட்டாயம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

* புயலின் சீற்றம் காரணமாக, மரங்கள் விழும் என்பதால், புயலின் போது விழக்கூடிய மரங்களை, உடனடியாக அகற்ற, குழுக்கள் போதிய உபகரணங்களுடன் தயார் நிலையில் இருக்க வேண்டும்.

* அரசு மருத்துவமனைகளில், 24 மணி நேரமும், அவசர சிகிச்சை பிரிவு செயல்படுவதை உறுதி செய்ய வேண்டும்.

* பாதிப்புக்குள்ளாகும் பகுதிகளில், பல்துறை மண்டல குழுக்களை, கலெக்டர்கள் முன்கூட்டியே நிலைநிறுத்த வேண்டும்.

* பாதிப்புக்கு உள்ளாகும் மக்களுக்கு உணவு வழங்க, உணவு தயாரிக்கும் சமையல் கூடங்களை, தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.

* கனமழையின் போது போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. காவல்துறை இதில் சிறப்பு கவனம் செலுத்தி, அதிக அளவில் போக்குவரத்து காவலர்களை ஈடுபடுத்தி, போக்குவரத்து நெரிசலை விரைந்து சரி செய்வதை, உறுதி செய்திட வேண்டும்.

* மழை காலத்தில், மாவட்ட நிர்வாகம், மாநகராட்சி மற்றும் உள்ளாட்சி அமைப்புகள், காவல் துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை ஆகியவை ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.

* ஒரு சில நாட்களுக்கு முன், மழை நீர் அதிகம் தேங்கிய பகுதிகளில் கூடுதல் கவனம் செலுத்தி, அங்கு தேங்கும் மழை நீரை, அதிக அளவில் மோட்டார் பம்புகளை பயன்படுத்தி, உடனடியாக அகற்ற வேண்டும்.

* புயல் சின்னத்தின் தாக்கத்தை, திறமையாக எதிர்கொள்ள, பொதுமக்களுக்கு ஏற்படக்கூடிய சிரமங்களை குறைக்க, தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும், அனைத்து அலுவலர்களும் ஒருங்கிணைந்து மேற்கொள்ள வேண்டும்.

* மழைக்கால நிவாரணப் பணிகளை மேற்கொள்ள, உங்கள் தேவைகளை, உடனடியாக உங்கள் மாவட்ட அமைச்சர்கள், தலைமைச் செயலர் மற்றும் துறை செயலர்களுக்கு தெரிவிக்கவும். அதை அரசு செய்து தரத் தயாராக உள்ளது. இவ்வாறு, முதல்வர் பேசினார்.

கூட்டத்தில், அமைச்சர் ராமச்சந்திரன், வருவாய் நிர்வாக ஆணையர் பிரபாகர், சென்னை மாநகராட்சி கமிஷனர் ராதாகிருஷ்ணன், டி.ஜி.பி., சங்கர் ஜிவால் மற்றும் அலுவலர்கள் பங்கேற்றனர்.


வாசகர் கருத்து (26)

 • Anand - chennai,இந்தியா

  உடன்பிறப்பே....ஏதோ ஒரு வகையில் கல்லா கட்ட தயாராகுங்கள்

 • Krismoo - Vellore,இந்தியா

  2024 இல் ஏப்ரல் மாசத்துல இன்னொரு புயல் வரப்போகுது. அந்த புயலுக்கு நீ தாக்கு பிடிக்கிறாயா பார்க்கலாம். அந்த புயலுக்கு ஸ்டா வாஷ் அவுட் னு இந்தியா பேரு விச்சிருக்காங்களாம்.

 • hari -

  சிறப்பு.... முட்டு குடுக்க யாரையும் காணோமே

 • g.s,rajan - chennai ,இந்தியா

  நாங்க ரெடி ,நீங்க ரெடியா ...???

 • அருண் குமார் - ,

  அப்படியே ஆகட்டும் தலைவரே நாங்கள் கைகளை கொண்டே புயலை தடுத்து நிறுத்துவோம்

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement