Load Image
Advertisement

கொரோனாவில் இறந்த மனைவிக்கு கோயில் கட்டி வழிபடும் கணவர் 

 Husband builds temple for wife who died in Corona   கொரோனாவில் இறந்த மனைவிக்கு கோயில் கட்டி வழிபடும் கணவர் 
ADVERTISEMENT
ராமநாதபுரம்: ராமநாதபுரம் அருகே பாண்டியூர் பகுதியில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்த செவிலியரான மனைவி கலைச்செல்விக்கு கணவர் இளையராஜா கோயில் கட்டி வழிபட்டு வருகிறார்.

ராமநாதபுரம் மாவட்டம் பாண்டியூரை சேர்ந்தவர் இளையராஜா 50. இவர் மருந்துக்கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி கலைச்செல்வி 40. ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் செவிலியராக பணிபுரிந்து வந்தார்.

கடந்த 2020 ல் கொரோனா தொற்று அதிகரித்த நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஏராளமான நோயாளிகளுக்கு இன்முகத்துடன் மருத்துவ சேவை செய்து வந்தார் கலைச்செல்வி. இதில் பல உயிர்களையும் காப்பாற்றியுள்ளார்.

அனைவரின் அன்பையும், பாராட்டையும் பெற்று பிறர் உயிர்களை காப்பாற்றிய கலைச்செல்வி தனது உயிரை காக்க மறந்து விட்டார். கொரோனா எனும் கொடிய அரக்கன் அவரது இன்னுயிரை பறித்தான்.

கணவன், மனைவியும் மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வந்த நிலையில் மனைவி கலைச்செல்வியின் இறப்பு இளையராஜாவை மிகவும் பாதித்தது. மனைவியின் மீது கொண்ட மாறாத அன்பால் அவரது நினைவாக ஏதாவது செய்ய வேண்டும் என எண்ணினார்.

இதன் காரணமாக பாண்டியூர் அருகே மனைவிக்கு கோயில் கட்டி அதில் அவரது உருவ சிலையை அமைத்தார்.

அதோடு தினமும் மனைவியின் சிலையை வணங்கி தனது தொழிலை நடத்தி வருகிறார். மனைவியின் கோயில் மட்டும் அல்லாமல் அந்த பகுதியில் சிவன் கோயில் ஒன்றையும் உருவாக்கி அதில் இஷ்ட தெய்வங்களின் சிலைகளை வைத்துள்ளார். அதோடு மனைவியின் சிலையையும் இணைத்துள்ளார்.

இளையராஜா கூறியதாவது: பொதுமக்களுக்கு மருத்துவ சேவை செய்த மனைவி கலைச்செல்வி கடவுளிடம் சென்றுள்ளார். அங்கும் அவர் மருத்துவ உதவி செய்வார் என நம்புகிறோம். அவரின் நினைவாக கோயில் கட்டிவணங்கி வருகிறேன்.

பவுர்ணமி, கார்த்திகை உள்ளிட்ட முக்கிய தினங்களில் இப்பகுதியில் வரும் வழிப்போக்கர்களுக்கு அன்னதானம் வழங்கி வருகிறேன். இதற்கு எனது மகன் ஸ்ரீஹரி பாண்டியனும், மகள் சவுந்தர்யாவும் உறுதுணையாக உள்ளனர்.என் மனைவி செய்த சேவையை விட இது சிறியது தான் என்றார்.

மனைவிக்கு கோயில் கட்டி கணவர் வணங்கி வருவது இப்பகுதி மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.


வாசகர் கருத்து (7)

  • Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா

    "இதுபோன்ற கணவன் அமைவதெல்லாம், அதுபோன்ற மனைவி செய்த வரம்".

  • Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா

    இது போன்ற பாசமிகு கணவரை இந்த காலத்தில் காண்பது அரிது.

  • LAX - Trichy,இந்தியா

    நல்ல.. சிறப்பான விஷயம்தான்.. என்றாலும், தனி கோயில்தான் வைக்கணுமேதவிர.. பொதுவான வழிபடும் தெய்வங்களுடன் சேர்த்து சிலையை வைக்கக் கூடாது.. அவர் மட்டுமே வழிபடுவதாக இருந்தாலும்..

  • GANESUN - Chennai,இந்தியா

    ஏன் இவ்வளவு வெறுப்பான கருத்துக்கள்... கூவம் சாமாதியில் தயிர்வடையும், முரசொலியும் வைக்கற கேவலத்தைவிட இவர் செயல் இழிவானதில்லை.

  • அப்புசாமி -

    தன்னோட சொந்த நிலத்தில்தானே கட்டுனாரு?

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement