Load Image
Advertisement

மஹூவா மொய்த்ராவுக்கு எதிராக: டிச.04-ல் பார்லி.,லோக்சபாவில் அறிக்கை

Mahua Moitra Issue: Statement in Parli.Lok Sabha on Dec.04     மஹூவா மொய்த்ராவுக்கு எதிராக: டிச.04-ல் பார்லி.,லோக்சபாவில் அறிக்கை
ADVERTISEMENT
புதுடில்லி: பார்லிமென்டில் கேள்வி எழுப்ப லஞ்சம் வாங்கிய விவகாரத்தில் சிக்கியுள்ள திரிணமுல் காங்கிரஸ் எம்.பி.,யான மஹூவா மொய்த்ரா மீதான அறிக்கை டிச. 04 ம் தேதி பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பார்லிமென்டில் கேள்வி எழுப்ப திரிணமுல் காங்கிரஸ் எம்.பி.,மஹூவா மொய்த்ரா லஞ்சம் வாங்கியதாக பா.ஜ.,வைச் சேர்ந்த நிஷிகாந்த் துபே புகார் தெரிவித்து இருந்தார். இந்த கடிதத்தை பா.ஜ.,வை சேர்ந்த சோன்கர் தலைமையிலான லோக்சபா ஒழுங்கு நடவடிக்கை குழுவின் ஆய்வுக்கு சபாநாயகர் ஓம்பிர்லா அனுப்பி இருந்தார். இதனை விசாரித்த குழுவானது, மஹூவா மொய்த்ராவின் பதவியை பறிக்க பரிந்துரை செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்த விவகாரத்தில் மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி எந்த கருத்தும் சொல்லாமல் நீண்ட நாட்களாக மவுனம் காத்து வந்தார்.

இந்நிலையில், மஹூவா மொய்த்ரா மீதான விவகாரத்தில் லோக்சபா ஒழுங்க நடவடிக்கை குழு தனது அறிக்கையை லோக்சபாவில் வரும் டிச.04-ல் கூட உள்ள குளிர்கால கூட்டத் தொடரில் தாக்கல் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


வாசகர் கருத்து (8)

  • சண்முகம் -

    நம்மூரான்களுக்கு பணம் சம்பாதிக்க இப்படி ஒரு வழி இருப்பது தெரியாதா?

  • J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்

    இப்போதாவது சசி தரூர் இவர் உதவிக்கு வருவாரா?

  • தாமரை மலர்கிறது - தஞ்சை,இந்தியா

    ம்ஹுவா மொய்த்ராவின் பதவி முதலில் பறிக்கப்படும். அடுத்து ராகுலின் பதவிக்கு ஆப்பு விரைவில் வரும்.

  • Thetamilan - CHennai,இந்தியா

    டுபாதையிலிருந்து இந்திய பாராளுமன்றத்திற்கு எதிராக செயல்பட்டவர்களைப் பற்றி மோடி துபாய் அரசுடன் எதுவுமே பேசாமல் வந்துவிட்டது மோடியின் இரட்டைவேடம் மட்டுமல்ல அரசியல் காழ்ப்புணர்ச்சியால் தன உலகளாவிய கும்பலை ஏவிவிட்டு நாட்டுக்கு எதிராக நடத்திய நாடகம்தான்

  • Vijay D Ratnam - Chennai,இந்தியா

    கடைசில அக்காயிய பஞ்சராக்கிட்டாய்ங்க.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்