Load Image
Advertisement

8 பிள்ளைகளை பெத்துக்கோங்க: ரஷ்ய அதிபர் புடின் கெஞ்சல்

Vladimir Putin Urges Russian Women To Have "8 Or More" Children 8 பிள்ளைகளை பெத்துக்கோங்க: ரஷ்ய அதிபர் புடின் கெஞ்சல்
ADVERTISEMENT
மாஸ்கோ: ரஷ்யாவில் மக்கள் தொகை சரிவை சந்தித்துவரும் சூழலில் ஒவ்வொரு பெண்களும் 8 குழந்தைகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் வலியுறுத்தியுள்ளார்.

மக்கள் தொகை, அந்நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் முக்கிய பங்காற்றுகிறது. ஆனால், உலகின் பெரும்பாலான நாடுகளில் மக்கள் தொகை சரிவு மிகப்பெரிய பிரச்னையாகி உள்ளது. அந்த வகையில் ரஷ்யாவும், இப்போது மக்கள் தொகை சரிவால் பிரச்னையை எதிர்கொள்ள ஆரம்பித்துள்ளது. அங்கு 1990 முதல் பிறப்பு விகிதம் சரிந்து வருகிறது. மேலும், உக்ரைன் நாட்டுடனான போரால் ரஷ்யாவிலும் பலர் கொல்லப்பட்டனர். இதனால் மக்கள் தொகையை அதிகரிக்க ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் சில கருத்துகளை தெரிவித்துள்ளார்.

உலக ரஷ்ய மக்கள் கவுன்சில் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அந்நாட்டின் அதிபர் புடின் பேசியதாவது: நாட்டில் இருக்கும் ஒவ்வொரு பெண்களும் 8 குழந்தைகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும். பெரிய குடும்பங்களே பொதுவான ஒன்றாக இருக்க வேண்டும். வரும் காலத்தில் ரஷ்யாவின் மக்கள்தொகையை அதிகரிப்பதே எங்கள் இலக்கு.

Latest Tamil News
நமது நாட்டில் ஒவ்வொரு குடும்பத்தில் நான்கு, ஐந்து அல்லது அதற்கு மேல்தான் குழந்தைகள் இருக்கும். அதுதான் பல தலைமுறைகளாக நமது பாரம்பரியமாக இருந்தது. அதிலும் நமது பாட்டிகள் ஏழு, எட்டு குழந்தைகளைப் பெற்றனர். இது அனைவருக்கும் நினைவில் இருக்கும். இந்த சிறந்த பாரம்பரியத்தை நாம் பாதுகாக்க வேண்டும். அதற்கு நாம் புத்துயிர் தர வேண்டும்.

பெரிய குடும்பங்கள் தான் ரஷ்ய மக்களின் வாழ்க்கை முறையாக இருக்க வேண்டும். குடும்பம் என்பது அரசு மற்றும் சமூகத்தின் அடித்தளம் மட்டுமல்ல, அதற்கு ஒரு ஆன்மிக தொடர்பு இருக்கிறது; அதுதான் ஒழுக்கத்தின் ஆதாரம். ரஷ்யாவின் மக்கள்தொகையைப் பாதுகாப்பதும், அதிகரிப்பதும் தான் அடுத்து வரும் காலத்தில் எங்கள் இலக்காகும். பல்லாயிரம் ஆண்டுகள் பழமையான ரஷ்யாவின் எதிர்காலம் இதில் தான் அடங்கி இருக்கிறது. இவ்வாறு அவர் பேசினார்.


வாசகர் கருத்து (10)

 • jayvee - chennai,இந்தியா

  ஆளாளுக்கு எட்டு குழந்தையை பெத்து அதுங்கள வளர்த்து எப்போ ராணுவத்துல சேக்குறது .. எப்போ உக்ரைனை ஜெயிக்கிறது.. கம்யூனிஸ்ட் மண்டையெல்லாம் ஒரே மாதிரிதான் போல ..

 • Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா

  ரஷ்யா ராணுவத்தில் ஆட்கள் இல்லைபோல் தெரிகிறது. ஆகையால் இப்பொழுதுள்ள மக்கள் தொகை கம்மியாக இருப்பது பயம் அவருக்கு. ஆகையால் குழந்தைகளை பெற்றுக்கொள்ளுங்கள் என்று கெஞ்சுகிறார். ஆனால் அது என்ன 8 குழந்தைகள் மட்டும்.

 • Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா

  பெத்துக்க தயார். ஆனால் அவர்களுக்கு சோறுபோட்டு, படிக்கவைக்கும் செலவை அரசு கொடுக்குமா?

 • Palanisamy T - Kuala Lumpur,மலேஷியா

  அப்பாடா, 8 குழந்தைகளா சிரிப்புதான் வருகின்றது. அவர்களையும் நாளைக்கு தேவையில்லாத போரை உருவாக்கிபோருக்கு அனுப்பி கொல்லவா? உங்கள்மீது அனைத்துலக போர்க் குற்றச்சாட்டும் உள்ளதே உங்களை புரிந்துக் கொண்டஉங்கள் மக்கள், நிச்சயமாக உங்கள் பேச்சை கேட்கமாட்டார்கள். உக்ரைன் நாட்டோடு neengal நடத்திய போரில் ஈவு இரக்கமின்றி விதி முறைகளையும் மீறி காட்டுமிராண்டித் தனமாக நடந்துக் கொண்டு பெரியவர் முதல் குழந்தைகள் வரை கொன்று குவித்தது போதாதா? ஏற்க்கெனவே உங்கள் நாட்டு ராணுவ வீரர்களை தேவையில்லாத போர் நடத்தி தேவை யில்லாமல் கொன்றதுப் போதும் தயவுச் செய்து இப்போதாவது மனோத்தத்துவ வைத்தியரை நாடி கொஞ்சம்

 • அப்புசாமி -

  அதுக்குன்னு ஆளுங்க இங்கே நிறைய்ய இருக்காங்க. ஒரு கோடி பேரை அழைச்சுக்கோங்க.

  • Barakat Ali - Medan

   கிளம்ப துடிக்கிறே போலிருக்கே ????

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement