Load Image
Advertisement

முதல்வரை அழைத்து பேசி தீர்வு காணுங்கள்: கவர்னருக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்

Call the Chief Minister and find a solution: Supreme Court instructs the Governor  முதல்வரை அழைத்து பேசி தீர்வு காணுங்கள்: கவர்னருக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்
ADVERTISEMENT
புதுடில்லி: 'கவர்னர் - முதல்வர் இடையே பல்வேறு விவகாரங்களுக்கு தீர்வு காண வேண்டியுள்ளது. எனவே, முதல்வரை கவர்னர் அழைத்து பேசி தீர்வுகாண வேண்டும்; இல்லையெனில் உத்தரவு பிறப்பிக்க நேரிடும்' என தமிழக கவர்னருக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

தமிழக சட்டசபையில் கடந்த இரண்டரை ஆண்டுகளாக பல்வேறு சட்ட மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டு கவர்னரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டன. ஆனால், அதிமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட 2 மசோதாக்கள் உட்பட 10க்கும் மேற்பட்ட மசோதாக்களுக்கு கவர்னர் ஒப்புதல் அளிக்கவில்லை. சட்ட மசோதாக்களுக்கு அனுமதியளிப்பதற்கு கவர்னருக்கு கால நிர்ணயம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி, கவர்னர் ஆர்.என்.ரவிக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மனு தாக்கல் செய்தது.

இந்த வழக்கு இன்று (டிச.,1) விசாரணைக்கு வந்தது. வாதத்தின்போது நீதிபதிகள் கூறியதாவது: சட்டத்தை செயலிழக்க செய்யவோ, முடக்கவோ கவர்னருக்கு அதிகாரம் இல்லை. தற்போதைய முட்டுக்கட்டையை கவர்னர் தரப்புதான் தீர்க்க வேண்டும் என விரும்புகிறோம். கவர்னர் - முதல்வர் இடையே பல்வேறு விவகாரங்களுக்கு தீர்வு காண வேண்டியுள்ளது. எனவே, முதல்வரை கவர்னர் அழைத்து பேசி தீர்வுகாண வேண்டும்; இல்லையெனில் உத்தரவு பிறப்பிக்க நேரிடும். ஒருவேளை கவர்னர் முதல்வரை அழைத்து பேசி தீர்வுகாண முயற்சித்தால் அதனை நாங்கள் வரவேற்போம்.

கவர்னர் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கலாம், அளிக்காமல் வைக்கலாம் அல்லது ஜனாதிபதிக்கு அனுப்பலாம். முதல்முறை மசோதா அனுப்பப்பட்டபோதே ஜனாதிபதிக்கு அனுப்பி இருக்கலாமே. ஒரு முறை திருப்பி அனுப்பிய பின் அதை மறுநிறைவேற்றம் செய்து அனுப்பிய பிறகு ஜனாதிபதிக்கு அனுப்ப முடியாது. Withheld என முடிவெடுத்த பின் மசோதாக்களை ஏன் ஜனாதிபதிக்கு அனுப்ப வேண்டும்?. இவ்வாறு பல கேள்விகளை எழுப்பினர். பின்னர் வழக்கு விசாரணையை டிசம்பர் 11ம் தேதிக்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது.

பல்லடம்: பிரதமர் மோடியின் முழு பேச்சின் வீடியோவாசகர் கருத்து (51)

 • Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா

  நீதிமன்றமே, முதல்வர் மற்றும் கவர்னரை அழைத்து, தங்கள் முன்னிலையில் இந்த தொடர்பிரச்சினைக்கு ஒரு முடிவுகாணவேண்டும். அது வழக்கமில்லை என்று கூறமுடியாது. இவர்கள் இருவர் மனஸ்தாபத்தால் பாதிக்கப்படுவது மக்கள். முதல்வர், கவர்னர், பிரதமர், நீதிமன்றங்கள் இவர்கள் எல்லாம் இருப்பதே மக்களுக்கு உதவி செய்யத்தான். இதில் யார் பெரியவர் என்கிற பேச்சுக்கே இடமில்லை. ஒரு ஜனநாயக ஆட்சியில், மக்கள்தான் எல்லோரையும் விட பெரியவர்கள்.

 • Anbuselvan - Bahrain,பஹ்ரைன்

  “200. Assent to Bills.- When a Bill has been passed by the Legislative Assembly of a State or, in the case of a State a Legislative Council, has been passed by both Houses of the Legislature of the State, it shall be presented to the Governor and the Governor shall either that he assents to the Bill or that he withholds assent therefrom or that he reserves the Bill for the consideration of the President: Provided that the Governor may, as soon as possible after the presentation to him of the Bill for assent, return the Bill if it is not a Money Bill together with a message requesting that the House or Houses will reconsider the Bill or any specified provisions thereof and, in particular, will consider the desirability of introducing any such amendments as he may recommend in his message and, when a Bill is so returned, the House or Houses shall reconsider the Bill accordingly, and if the Bill is passed again by the House or Houses with or without amendment and presented to the Governor for assent, the Governor shall not withhold assent therefrom: Provided further that the Governor shall not assent to, but shall reserve for the consideration of the President, any Bill which in the opinion of the Governor would, if it became law, so derogate from the powers of the High Court as to endanger the position which that Court is by this Constitution designed to fill.” How the court expressed that the bill now cannot be sent to President of India is to be waited and seen on 11th December.

 • தாமரை மலர்கிறது - தஞ்சை,இந்தியா

  முதல்வரை கூப்பிட்டு, சுப்ரிம் கோர்ட் உத்தரவுப்படி நீட்டை நடத்துவோம் என்று மசோதா நிறைவேற்ற கவர்னர் வற்புறுத்துங்கள். கேட்காவிடில் கோர்ட்டிற்கு எதிரான மசோதா பாசாகாது என்று சொல்லி, மூடி வைத்துவிடுங்கள்.

 • sankar - Nellai,இந்தியா

  ஒருமைப்பாட்டுக்கு ஊறு விளைவிக்கும் மசோதாக்களை என்ன செய்யலாம் சார்

 • Balaji - Chennai,இந்தியா

  எல்லோருக்கும் அறிவுரை வழங்குவதில் தீவிரமாயிருக்கிறது நீதித்துறை. தங்களின் குப்பைகளை எப்போது சரி செய்வார்கள் இவர்கள்? நீதித்துறை முழுவதும் குடும்பங்களின் ராஜ்ஜியமாமே?

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்