Load Image
Advertisement

அமலாக்கத்துறை அதிகாரிக்கு டிச.,15 வரை நீதிமன்ற காவல்

திண்டுக்கல்: லஞ்சம் வாங்கியதாக கைது செய்யப்பட்டு்ளள அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி யை டிச.,15ம் தேதி வரையில் நீதிமன்ற காவலில் வைக்க திண்டுக்கல் முதன்மை நீதித்துறை நடுவர் நீதிபதி உத்தரவிட்டு உள்ளார்.

திண்டுக்கல்லில், வழக்கை முடித்து தருவதாக ரூ.20 லட்சம் லஞ்சம் வாங்கிய அமலாக்கத்துறை அதிகாரியை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து லஞ்ச ஒழிப்புத்துறை யினர்மதுரை துணை மண்டல அமலாக்கத்துறை அலுவலகத்தில்4 மணி நேரத்திற்கும் மேலாக சோதனை நடத்தி வருகின்றனர்.இதனையடுத்து மத்திய பாதுகாப்பு படையினர் வருகை தந்துள்ளதால் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.
Latest Tamil News


திண்டுக்கல் மாவட்டத்தில் அமலாக்கத்துறை பெயரில் தொழிலதிபர்களை மிரட்டி பணம் பறிப்பதாக லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. திண்டுக்கல் - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, சந்தேகத்துக்கு உரிய நபர் ஒருவர் வந்த வாகனத்தை நிறுத்தி சோதனையிட்டனர். அதில் ரூ.20 லட்சம் பணம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக அவரிடம் விசாரணை நடந்தது.

அதில், பணத்தை கொண்டு வந்தது அமலாக்கத்துறையைச் சேர்ந்த அங்கித் திவாரி என்பதும், திண்டுக்கல்லை சேர்ந்த டாக்டர் ஒருவர் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளதும், அந்த வழக்கை முடித்து வைக்க டாக்டரிடம் இருந்து ரூ.20 லட்சம் லஞ்சத்தை பெற்றதும் தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர்.


அலுவலகத்தில் சோதனை



இந்த விவகாரம் தொடர்பாக மதுரை அமலாக்கத்துறை அலுவலகத்தில் 10 க்கும் மேற்பட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். அதேபோல், அங்கித் திவாரியின் வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டது.


Latest Tamil News

மத்தியபடையினர் வருகை



லஞ்சு ஒழிப்பு சோதனையையடுத்து அமலாக்கத்துறை மத்திய படையினர் மதுரை வந்தனர்.
தமிழ்நாட்டில் அமலாக்கத்துறை அதிகாரி ஒருவர் லஞ்ச ஒழிப்புத்துறையால் கைது செய்யப்பட்டிருப்பது முதல் முறை என கூறப்படுகிறது. மாநில அரசின் துப்பாக்கி ஏந்திய போலீசாார் 50 பேரும், மத்திய அரசின் இந்தோ திபெத் படையினர் வருகையாலும் அமலாக்கத்துறை அலுவலகத்தில் பரபரப்பு நிலவி வருகிறது.

தி.மு.க., அரசின் 'கிரீன்' சிக்னல்



சமீபகாலமாக தமிழக அமைச்சர்கள், உறவினர்கள், பினாமிகள் வீடு, அலுவலகங்களில் அமலாக்கத்துறை தொடர்ந்து சோதனை நடத்தி வருகிறது. மணல் குவாரி முறைகேடு தொடர்பாக 10 மாவட்ட கலெக்டர்களிடம் விசாரிக்க வேண்டும் என சம்மன் அனுப்பியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தடை உத்தரவு பெற்றது.

முதல்வர் ஸ்டாலின் உட்பட தி.மு.க.,வினர் அமலாக்கத்துறையை மத்திய பா.ஜ., அரசின் 'ஏவல் துறை' என அழைத்து வரும் நிலையில், திண்டுக்கல் டாக்டரிடம் லஞ்சம் பெற்ற விவகாரத்தில் இந்தியாவிலேயே முதன் முறையாக மதுரை அமலாக்கத்துறை அலுவலகத்தில் தமிழக லஞ்சஒழிப்பு போலீசார் சோதனை நடத்தியுள்ளனர். பொதுவாக சம்பந்தப்பட்ட அதிகாரி வீட்டில் மட்டுமே சோதனை நடத்தப்பட்டு வரும் நிலையில், அமலாக்கத்துறை அலுவலகத்திலும் தங்களால் சோதனை நடத்த முடியும் என தி.மு.க., அரசு தனது 'பவரை' காட்டியுள்ளது. ஏற்கனவே பா.ஜ., அரசுக்கும், தி.மு.க., அரசுக்கும் அரசியல் ரீதியாக விரோத போக்கு இருக்கும் நிலையில் 'எரிகிற தீயில் எண்ணெய் ஊற்றியது போல்' சோதனை விவகாரம் சூடுபிடித்துள்ளது

தி்ண்டுக்கல் நீதிமன்றத்தில் ஆஜர்



லஞ்சம் வாங்கியதாக கைது செய்யப்பட்டு்ளள அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி திண்டுக்கல் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டார். தொடர்ந்து அவரை டிச.,15ம் தேதி வரையில் நீதிமன்ற காவலில் வைக்க திண்டுக்கல் முதன்மை நீதித்துறை நடுவர் நீதிபதி உத்தரவிட்டு உள்ளார்.

எஸ்.பி.ஐ., வங்கி அதிகாரிகள் அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு வருகை?



மதுரை அமலாக்கத்துறை அலுவலக அதிகாரியிடம் பறிமுதல் செய்யப்பட்ட ரூ.20 லட்சம் பணத்தை எண்ணுவதற்காக வங்கி அதிகாரிகள் இரண்டு பேர் வந்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் அங்கித் திவாரியின் பண பரிமாற்றம் குறித்து விளக்கம் அளிக்கவும் வநதுள்ளதாகவும் கூறப்படுகிறது.

மத்திய ரிசர்வ் பாதுகாப்பின் கீழ் வந்தது சாஸ்திரி பவன்



சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்திலும் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்த உள்ளதாக தகவல்கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது. இதனையடுத்து மத்திய ரிசர்வ் பாதுகாப்புபடையின் கீழ் வந்தது சாஸ்திரி பவன் கொண்டு வரப்பட்டுள்ளது. இதனால் பெரும் பரபரப்பு நிலவிவருகிறது.

பல்லடம்: பிரதமர் மோடியின் முழு பேச்சின் வீடியோ



வாசகர் கருத்து (196)

  • Just imagine - ஷாங்காய் ,சீனா

    லஞ்சம் யார் வாங்கி இருந்தாலும் தவறு தான் .............அனைத்து வித ரூபாய் நோட்டுகளை முற்றிலும் தடைவிதித்து எல்லா பரிவர்தனைகளும் 100% டிஜிட்டலில் (டிஜிட்டல் பணம் மூலமாக மட்டுமே) செயல்பாட்டில் வரும் நாளே......... இவைகள் அனைத்திற்கும் (லஞ்சம்,ஊழல்,கமிஷன்,கொள்ளை,திருட்டு) நிரந்தர தீர்வாக இருக்கும் ......

  • Saai Sundharamurthy AVK -

    மணல் கொள்ளையை விசாரிக்க நேரமில்லையாம் ! அமைச்சர் துரைமுருகனை கைது செய்ய நேரமில்லையாம். அவரது மகன் மற்றும் மணல் மாபியாக்களை கைது செய்ய நேரமில்லையாம். ஆக, திமுக அரசுக்கு 60,000 கோடி மணல் கொள்ளை சாதாரண விஷயமாம் ! ஆனால் லஞ்சமாக பெற்ற இந்த 20 லட்சம் பெரிய விஷயமாம் ??? 😁சரி, லஞ்சம் வாங்கியவரை கைது செய்து விசாரிப்பது தானே முறை ! அதற்காக ஏன் அமலாக்க துறை அலுவலகத்தில் சோதனை செய்ய வேண்டும் !!! அதிலும் அவசர அவசரமாக !!!!! 😊 ஒரு தமிழக அதிகாரி லஞ்சம் வாங்கினால் அவர் மீது மட்டும் தானே விசாரணை நடைபெறுகிறது. அதற்காக தலைமை செயலகத்திலா சோதனை செய்யப்படுகிறது ??? இது புது திருட்டு தனமாக உள்ளதே !!! பொதுவாக திமுக செய்வதெல்லாம் சதி நாடகம் என்று நன்கு தெரியும். எதுவுமே இயற்கையாக இருக்காது. எல்லாமே செயற்கை என்பது வெளிப்படையாக தெரியும். இப்போது செய்ததும் அது போன்ற சதி நாடகம் தானோ !! சந்தேகமாக உள்ளதே !!!😊 ஸ்டாலின் செய்யும் கிறுக்கு தனத்தினால் அவரது அமைச்சர்கள் பாதிக்கப்படப் போவது நிச்சயம். 😮

  • Dharmavaan - Chennai,இந்தியா

    லஞ்சம் கொடுத்தவனை தண்டிக்காமல் அதிகாரிக்கு சிறைகொடுத்த நீதி கேவலம்

  • காத்தமுத்து,சிறுமுகை -

    தமிழக லஞ்ச ஒழிப்புத் துறையை ரொம்ப நேர்மையானவங்கன்னு நம்புற அந்த மனசு இருக்கே, அதுதான் சார் எழுத்துக் கூட்டி படிக்கும் சமச்சீர் உபிஸ்களோட கள்ளங் கபடமில்லாத மனசு.😀😆

  • அப்புசாமி -

    20 லட்ச ரூவா லஞ்சம் குடுத்த அந்த அரசு மருத்துவர் சுரேஷ் பாபு எத்தனை கோடி சுருட்டியிருப்பார்? அவரை தூக்கி உள்ளே வெச்சு நொங்கெடுங்க.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement