Load Image
Advertisement

பெங்களூருவில் 28 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

28 schools in Bengaluru get bomb threat; students, staff evacuated பெங்களூருவில் 28 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்
ADVERTISEMENT

பெங்களூரு: பெங்களூருவில் வெவ்வேறு பகுதிகளில் உள்ள 28 பள்ளிகளுக்கு இ மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. இதனை அறிந்த பெற்றோர்கள் பள்ளி முன்பு கூடினர்.


இது தொடர்பாக பெங்களூரு போலீஸ் கமிஷனர் தயானந்தா கூறுகையில், ‛‛ பள்ளிகளில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளது. எப்போது வேண்டுமானாலும் வெடிக்கும் என மிரட்டல் செய்தியில் கூறப்பட்டுள்ளது, தகவல் அறிந்த வெடிகுண்டு தடுப்பு பிரிவு படையினர் பள்ளிகளில் தீவிர சோதனை நடத்தினர். ஆனால், சந்தேகப்படும்படியான பொருட்கள் எதுவும் கிடைக்கவில்லை. வெடிகுண்டு மிரட்டல் புரளியாக இருக்கக்கூடும். பெற்றோர்கள் பீதியடைய தேவையில்லை. கடந்தாண்டும், சில சமூக விரோதிகள் இது போன்று மிரட்டல் விடுத்தனர் என்றார்.

மிரட்டல் செய்தி வந்த உடன், சில பள்ளிகள் குழந்தைகளை பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு சென்றனர். சில பள்ளிகள் பெற்றோருக்கு தகவல் தெரிவித்து குழந்தைகளை அழைத்து செல்லும்படி அறிவுறுத்தின. ஆசிரியர்கள், ஊழியர்களும் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் பள்ளிகள் முன்பு குவிந்தனர்.

பல்லடம்: பிரதமர் மோடியின் முழு பேச்சின் வீடியோ



வாசகர் கருத்து (13)

  • Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா

    ஒன்று ஒரு மனநிலை பாதிக்கப்பட்டவன் செய்த செயலாக இருக்கலாம். அல்லது காங்கிரஸ் ஆட்சியை எதிர்த்து, காங்கிரஸ் கட்சியின் எதிர்ப்பாளர்கள் செய்த செயலாக இருக்கலாம். அல்லது வேலை வெட்டி இல்லாத ஒருவன் செய்த செயலாக கூட இருக்கலாம். யாராக இருதாலும், அவனை (அவர்களை) கண்டுபிடித்து கடுமையாக தண்டிக்கவும். ஏன் பள்ளி குழந்தைகளை வைத்து இந்த விபரீத விளையாட்டு அவனுக்கு (அவர்களுக்கு).

  • NicoleThomson - chikkanayakanahalli , tumkur dt and Bangalore, ,இந்தியா

    அது எப்படி எல்லா பள்ளிகளின் ஈமெயில் அட்ட்ரஸும் கலெக்ட் பண்ணி ஒரே மாதிரி மர்மமாய் ஈமெயில் பண்ணியிருக்காங்க , எனது குழந்தைகளின் பள்ளிக்கும் இப்படி வந்தது , வந்து அழைத்து சேல்லுங்க என்று பள்ளியில் இருந்து வாட்ஸாப்ப் அனுப்பி விட்டனர் , ஒரு மணிநேரம் தவித்து விட்டோம்

  • J.Isaac - bangalore,இந்தியா

    காங்கிரஸ் ஆட்சி செய்தால் யார் குண்டு வைப்பார்கள் ?

  • Nagarajan D - Coimbatore,இந்தியா

    வெள்ளிக்கிழமை அமைதிமார்க ஸ்பெஷல்...

  • SUBBU,MADURAI -

    Not surprised at all... Karnataka is Congress ruled state!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்