Load Image
Advertisement

முதல்வர் கையெழுத்து மட்டும் போதாது:பணி மாறுதல் விவகாரத்தில் கோர்ட் உத்தரவு

 Chief Ministers signature alone is not enough Court order in the matter of job transfer   முதல்வர் கையெழுத்து மட்டும் போதாது:பணி மாறுதல் விவகாரத்தில் கோர்ட் உத்தரவு
ADVERTISEMENT


பெங்களூரு 'கீழ்நிலையில் உள்ள ஒரு அதிகாரியை, அதற்கு மேற்பட்ட நிலையில் உள்ள பதவிக்கு பணியிடமாற்றம் செய்யும்போது, முதல்வரின் கையெழுத்து மட்டும் இருந்தால் போதாது; காரணமும் தெரிவிக்க வேண்டும்' என, கர்நாடக உயர் நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.

கர்நாடகாவில் முதல்வர் சித்தராமையா தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது.

இங்கு, உணவு வழங்கல் துறையின் கூடுதல் இயக்குனராக, கர்நாடகா நிர்வாக சேவை மூதுநிலை அதிகாரியான பிரஜ்னா அம்மம்பாலாவை நியமித்து, கடந்த, ஜூலை 6ம் தேதி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இதை எதிர்த்து, அந்தப் பதவியில் இருந்த பத்தராஜு, மாநில நிர்வாக தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தார். இதை விசாரித்த தீர்ப்பாயம், இந்த பதவி உயர்வு மற்றும் பணியிடமாற்றத்துக்கு தடை விதித்தது.

இதை எதிர்த்து, பிரஜ்னா அம்மம்பாலா சார்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதை விசாரித்த நீதிபதிகள் கே.சோமசேகர், ராஜேஷ் ராய் அமர்வு பிறப்பித்துள்ள உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது:

இந்தப் பதவிக்கு, பிரஜ்னா அம்மம்பாலாவை பணியிட மாற்றம் செய்து பிறப்பித்த உத்தரவு செல்லும். அந்தப் பதவிக்கான தகுதி அவருக்கு உள்ளது.

அதே நேரத்தில், இதுபோன்று, கீழ் நிலையில் உள்ள அதிகாரிகளை, உயர் நிலை பதவிக்கு பணியிடமாற்றம் செய்யும்போது, அதற்கான கோப்பில், முதல்வரின் கையெழுத்து மட்டும் இருந்தால் போதாது.

எதற்காக அந்த அதிகாரிகளுக்கு பதவி உயர்வு அளித்து, பணியிட மாற்றம் செய்யப்பட்டார் என்பதற்கான காரணம் கோப்பில் தெரிவிக்க வேண்டும்.

இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுஉள்ளது.


வாசகர் கருத்து (2)

  • Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா

    காரணம் ஒன்று: உண்மையிலேயே திறமை உள்ளவராக இருக்கலாம் - பணி செய்வதில். காரணம் இரண்டு: உண்மையிலேயே 'திறமை' உள்ளவராக இருக்கலாம் - எப்படி மேல் அதிகாரிகளை கையில் போட்டுக்கொள்ளலாம் என்கிற 'திறமை'.

  • GMM - KA,இந்தியா

    பணியிட மாற்றம். கோப்பில் முதல்வர் கையெழுத்து மட்டும் இருந்தால் போதாது. நிர்வாக கோப்பில் அமைச்சர் பரிந்துரை மட்டும் தான் செய்ய முடியும். எந்த மாநிலத்திலும் அமைச்சர் அளிக்கும் பதவி உயர்வு, பணியிடை மாற்றம் உத்தரவு செல்லாது. அதற்கு சட்ட விதிமுறைகள் (code) கிடையாது. கூடாது. வழக்கறிஞர்கள் நிர்வாக முறையை தவறாக புரிந்து அமைச்சர் அதிகாரம் கொடுத்து நீதிமன்றத்தில் வாதிட்டு வருகின்றனர். ஊழலுக்கு முக்கிய காரணம் இது தான். அமைச்சர் அதிகார விதி இருந்தால், கட்சி விசுவாசிகள் எண்ணுடன் கருத்து கூறலாம்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement