Load Image
Advertisement

உ.பி.,யில் தாயின் உடலுடன் ஓராண்டாக வாழ்ந்த மகள்கள்

Varanasi, Sisters: Daughters lived with their mothers body for a year in Uttar Pradesh  உ.பி.,யில் தாயின் உடலுடன்  ஓராண்டாக வாழ்ந்த மகள்கள்
ADVERTISEMENT
வாரணாசி: உத்தர பிரதேசத்தின் வாரணாசியில், இறந்த தாயின் உடலை, சகோதரிகள் இருவர் ஓராண்டாக வீட்டுக்குள் பூட்டி வைத்து, உடன் வாழ்ந்து வந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

உ.பி.,யின், வாரணாசியில் உள்ள லங்கா பகுதியைச் சேர்ந்த சகோதரிகள் ஒரு வாரமாக வீட்டை பூட்டிவிட்டு வெளியே வராமல் இருந்தனர். இது தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

போலீசார் வந்து வீட்டின் கதவை தட்டி பார்த்தனர். யாரும் கதவை திறக்காததால், கதவை உடைத்து உள்ளே சென்றனர். அங்கு அவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது.

அந்த வீட்டின் அறையில் பெண் ஒருவரின் சடலம் கிடத்தப்பட்டிருக்க, அதே அறையில் சகோதரிகள் இருவர் அமர்ந்திருந்ததை கண்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

இது பற்றி போலீசார் மேலும் கூறியதாவது:

சகோதரிகள் பல்லவி திரிபாதி, 27, மற்றும் வைஷ்விக் திரிபாதி, 18 ஆகியோர் அந்த வீட்டில் வசித்து வருகின்றனர். இவர்களது தாய் உஷா திரிபாதி, 52, நீண்ட காலமாக நோய்வாய்ப்பட்டு இருந்த நிலையில், கடந்த ஆண்டு டிசம்பரில் உயிரிழந்தார்.

இவர்களது தந்தை இரண்டு ஆண்டுகளுக்கு முன் இவர்களை விட்டு பிரிந்து சென்றுவிட்டார். இந்நிலையில் சகோதரிகள் இருவரும், உயிரிழந்த தாய்க்கு இறுதிச் சடங்கு செய்து எரியூட்டாமல், வீட்டிலேயே ஒரு அறையில் உடலை பூட்டி வைத்துவிட்டு உடன் வசித்து வந்துள்ளனர்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.


வாசகர் கருத்து (4)

  • Vathsan - மும்பை,இந்தியா

    மூட நம்பிக்கையின் உச்சம். உ பி யில் இது நடப்பது ஆச்சரியமில்லை.

    • Sathyasekaren Sathyanarayanana - Kulithalai ,இந்தியா

      உடனே உ. பி மக்களை திட்ட வேண்டியது இல்லை, தமிழகத்தில் கூட சில மாதங்களுக்கு முன்னாள் அந்நிய நாட்டு மதத்தை சார்ந்த போலீஸ் பெண் அதிகாரி, அவரது அம்மா இறந்த பின்னும் இயேசு உயிரெழுப்புவர் என்று உயிரற்ற உடலை வைத்து இருந்தார்.

    • வேற்றுமையில் ஒற்றுமை - Perth,ஆஸ்திரேலியா

      நாராயணா பி ஜே பி'குணா என்னமா முட்டு குடுக்கறீங்க.

    • Pandi Muni - Johur,மலேஷியா

      மூட நம்பிக்கை இல்லை. பாசப்போராட்டம்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்