Load Image
Advertisement

தென்பெண்ணை ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு கரையோர பகுதி மக்களுக்கு எச்சரிக்கை

 Warning for the people of the coastal area due to the increase in water flow in Tenpenna river    தென்பெண்ணை ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு கரையோர பகுதி மக்களுக்கு எச்சரிக்கை
ADVERTISEMENT


திருக்கோவிலுார்; சாத்தனுார் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படுவதால் தென்பெண்ணை ஆற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்திருக் கும் நிலையில், தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே திருவண்ணா மலை மாவட்டத்தில் உள்ள சாத்தனுார் அணை திறக்கப்பட்டுள்ளது.

நேற்று மாலை 4:00 மணி நிலவரப்படி அணையின் மொத்த கொள்ளளவான 119 அடியில், அதாவது 7,321 மில்லியன் கன அடியில், 117.05 அடி உயரத்திற்கு, 6,886 மில்லியன் கன அடி நீர் இருப்பு உள்ளது.

அணைக்கு வினாடிக்கு 1,640 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. அணை யிலிருந்து வினாடிக்கு 2,330 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.

இதன் காரணமாக தென்பெண்ணையாற்றில் நீர்வரத்து அதிகரிக்க துவங்கியுள்ளது.

திருக்கோவிலுார் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக, ஏரி குளங்களில் இருந்து வெளியேறும் உபரி நீரும் சேர்ந்து அதிகப்படியான தண்ணீர் தென்பெண்ணையில் பெருக்கெடுத்துள்ளது.

அணையிலிருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவும் அதிகரிக்க கூடும் என்பதால், தென்பெண்ணை ஆற்றின் கரையோர மக்களுக்கு வருவாய்த்துறை மற்றும் பொதுப்பணித்துறை சார்பில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து நேற்று திருக்கோவிலுார் நகராட்சியில், வருவாய் துறையினர் ஒலிபெருக்கி மூலம் தென்பெண்ணை ஆற்றை ஒட்டி இருக்கும் பகுதிகளில் எச்சரிக்கை அறிவிப்பு செய்தனர்.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement