Load Image
Advertisement

வீராணம் புராதன சின்னமாக அறிவிப்பு ஏரியில் படகில் சென்று கலெக்டர் விழிப்புணர்வு

 As an ancient symbol of heroism, go on a boat on the lake and make the collector aware    வீராணம் புராதன சின்னமாக அறிவிப்பு ஏரியில் படகில் சென்று கலெக்டர் விழிப்புணர்வு
ADVERTISEMENT


காட்டுமன்னார்கோவில்: வீராணம் ஏரி புராதன சின்னமாக அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து நடத்தப்பட்ட பிரசாரத்தில், கலெக்டர் படகில் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

கடலுார் மாவட்டம், காட்டுமன்னார்கோவிலில் வீராணம் ஏரி அமைந்துள்ளது. இதை, உலகளாவிய பாசனம் மற்றும் வடிகால் வாரியம், பாரம்பரிய நினைவு சின்னமாக அறிவித்துள்ளது. இதனை மத்திய ஜலசக்தி துறை பாதுகாப்பு விழிப்புணர்வு பிரசாரமாக மேற்கொண்டு வருகிறது.

இதன் ஒரு பகுதியாக, காட்டுமன்னார்கோவில் வீராணம் ஏரிக்கரையில் கந்தகுமாரன் என்ற இடத்தில் பொதுப்பணித் துறை சார்பில் விழிப்புணர்வு பிரசார நிகழ்ச்சி நடத்தப்பட்டது. கலெக்டர் அருண் தம்புராஜ் தலைமை தாங்கி, பேரணியை துவக்கி வைத்தார். சப் கலெக்டர் சுவேதா சுமன், செயற் பொறியாளர் காந்தரூபன் முன்னிலை வகித்தனர். வீராணம் ஏரி உதவி செயற் பொறியாளர் ஞானசேகர் வரவேற்றார். வீராணம் ஏரியின் வரலாற்று சுவடுகள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது. பள்ளி மாணவர்கள் பதாகைகளை ஏந்தி ஊர்வலமாக சென்றனர்.

தொடர்ந்து, கலெக்டர் உள்ளிட்டோர் படகுகள் மூலமாக ஏரியில் பலுான் பறக்கவிட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

நிகழ்ச்சியில் தாசில்தார் தமிழ்ச்செல்வன், உதவி பொறியாளர் ரமேஷ், விவசாய சங்க பிரதிநிதிகள் ரவீந்திரன், ரங்கநாயகி, பாலு, மாவட்ட கவுன்சிலர் மனோரஞ்சிதம் உட்ட பலர் பங்கேற்றனர்.

உதவி பொறியாளர் சிவராஜ் நன்றி கூறினார்.


வாசகர் கருத்து (2)

  • kulandai kannan -

    பொன்னியின் செல்வனுக்கு நன்றி.

  • அப்புசாமி -

    இவுரு படகு சவாரி போனா விழிப்புணர்வு.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement