Load Image
Advertisement

அறிவியல் ஆயிரம் மூன்றாவது நாடு

அறிவியல் ஆயிரம்

மூன்றாவது நாடு



அமெரிக்கா, ரஷ்யாவுக்கு அடுத்து மூன்றாவது நாடாக விண்வெளியில் சீனா 'டியாங்யாங்'
சர்வதேச விண்வெளி மையத்தை அமைத்து வருகிறது. இந்நிலையில் முதன்முறையாக அதன் புகைப்படத்தை வெளியிட்டுஉள்ளது. இது பூமியில் இருந்து 340 கி.மீ., - 450 கி.மீ., உயரத்தில்
உள்ளது. இது அளவில் அமெரிக்கா, ரஷ்யா அமைத்துள்ள சர்வதேச விண்வெளி மையத்தில் மூன்றில் ஒரு பங்கு. 2021 ஏப். 29ல் இதற்கான மாடூல் விண்வெளிக்கு அனுப்பப்பட்டது. இதில் 6 விஞ்ஞானிகள் தங்கி பணியாற்றலாம். இது மணிக்கு 7.67 கி.மீ., வேகத்தில் சுற்றுகிறது.

தகவல் சுரங்கம்

உலக எய்ட்ஸ் தினம்



உலகில் 2022 கணக்கின்படி, 4 கோடி பேர் எய்ட்ஸ் பாதிப்புடன் வாழ்கின்றனர். இதில் 2022ல்
மட்டும் 13 லட்சம் பேர் பாதிக்கப்பட்டனர். 6.30 லட்சம் பேர் பலியாகினர். எய்ட்ஸ் பாதிப்பு,
தடுக்கும் முறை பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக டிச. 1ல் உலக எய்ட்ஸ் தினம்
கடைபிடிக்கப்படுகிறது. இது எச்.ஐ.வி., வைரசால் ஏற்படுகிறது. 'சமூகம் வழிநடத்தட்டும்'
என்பதுஇந்தாண்டு மையக்கருத்து. 1988ல் எய்ட்ஸ் பாதிப்புகண்டறியப்பட்டது. உலக அளவில் சுகாதாரஅச்சுறுத்தலாக எய்ட்ஸ் இருப்பதை 2030க்குள் முடிவுக்கு கொண்டு வர ஐ.நா., இலக்கு நிர்ணயித்துள்ளது.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement