Load Image
Advertisement

தமிழக அரசு பாடம் கற்க, இன்னும் எத்தனை மழைக் காலங்கள் வேண்டும்?: அண்ணாமலை கேள்வி

 How many more rainy seasons are needed for Tamil Nadu government to learn its lesson?: Annamalai question    தமிழக அரசு பாடம் கற்க, இன்னும் எத்தனை மழைக் காலங்கள் வேண்டும்?: அண்ணாமலை கேள்வி
ADVERTISEMENT
சென்னை: தமிழக அரசு பாடம் கற்க, இன்னும் எத்தனை மழைக் காலங்கள் வேண்டும்? என தமிழக பாஜ., தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பி உள்ளார்.

இது குறித்து அண்ணாமலை கூறியிருப்பதாவது: சென்னை மாநகரம், உலக அளவில் பல்வேறு துறைகளில் முக்கியமான நகரங்களில் ஒன்று. ஆனால், ஒவ்வொரு ஆண்டும், மழைக்காலத்தில் சென்னை தத்தளிப்பது வாடிக்கை ஆகிவிட்டது. தமிழக அரசின் தவறுகளுக்கு பொதுமக்கள் கொடுத்துக் கொண்டிருக்கும் விலை மிக அதிகம்.

அதிகாரத்தில் இருக்கும் அரசியல்வாதிகள், மழை வெள்ளத்தில் வேட்டியை மடித்துக் கட்டி இறங்கி நடந்தால் மட்டுமே போதும் என்ற எண்ணத்தில் இருப்பதால், ஆட்சி மாறியும் காட்சி மாறவில்லை என்ற நிலையே இருக்கிறது. ஒவ்வொரு அரசும், மழைநீர் வடிகால் பணிகள் என்று கூறி செலவிட்ட பல்லாயிரம் கோடி நிதி என்ன ஆனது என்ற கேள்வியை பொதுமக்கள் கேட்கத் தொடங்கிவிட்டார்கள்.

அதிகாரிகள் கடுமையாக உழைத்தும், நிலைமையை முழுமையாகச் சீர்செய்ய முடியவில்லை என்றால், அடிப்படையிலேயே தவறு இருக்கிறது என்பதுதான் பொருள். சென்னை முழுவதும் பழுதான சாலைகளும், எங்கும் தேங்கி நிற்கும் மழைநீரும், இத்தனை ஆண்டு காலமாக, தமிழக ஆட்சியாளர்கள் செய்ததாகக் கூறிய மழை நீர் வடிகால் பணிகளைக் கேள்விக்குரியதாக்கியிருக்கின்றன. தமிழக அரசு பாடம் கற்க, இன்னும் எத்தனை மழைக் காலங்கள் வேண்டும்?. இவ்வாறு அண்ணாமலை கூறியுள்ளார்.

பல்லடம்: பிரதமர் மோடியின் முழு பேச்சின் வீடியோ



வாசகர் கருத்து (29)

  • K.n. Dhasarathan - chennai,இந்தியா

    அண்ணாமலை எத்தனை நாள் பாடம் நடத்துகிறாரோ அத்தனை நாள் பாடம் கேட்க தயார் ஆனால் ஒரு விஷயம், சென்ற ஆட்சி நடந்த போது, சென்னை, முக்கியமாக மாம்பலம் பாலம் அருகில் தண்ணீர் தேங்கி குளம் நாறி போனது தெரியாதா? அப்போ இவர் எங்கிருந்தார் ? எங்காவது காட்டுக்குள் சாமியாராகி போய்விட்டாரா? அல்லது வெளி நாட்டிற்கு போயி ஒரு விஷயமும் தெரியாதா?

  • g.s,rajan - chennai ,இந்தியா

    ஊழல் பாடத்தில் கண்டிப்பா பெயில் இல்லை....

  • g.s,rajan - chennai ,இந்தியா

    ரொம்ப அதிகமா ரெயின் பெஞ்சா என்ன தான் செய்யறது ....???.

  • அப்புசாமி -

    ஆர்.எஸ்.எஸ் பேரணி ஆளுங்களை அனுப்ப வேண்டியதுதானே?

  • அப்புசாமி -

    இவங்க வந்தா கிழிச்சிடுவாங்களாக்கும்? ஹரியானாவுல வெள்ளம் வந்தபோது குஜராத்ல வெள்ளம் வந்தபோது என்ன செஞ்சாங்க?

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்