Load Image
Advertisement

14.24 லட்சம் ஊழல்; பஞ்., தலைவர் பி.டி.ஓ., உள்ளிட்ட 4 பேர் மீது வழக்கு

Perambalur vigilance:14.24 lakh corruption in V Kalathur panchayat; Case registered against Panchayat President PTO, Overseer, Junior Engineer, Contractor  14.24 லட்சம் ஊழல்; பஞ்., தலைவர் பி.டி.ஓ., உள்ளிட்ட 4 பேர் மீது வழக்கு
ADVERTISEMENT
பெரம்பலூர்: வி களத்தூர் பஞ்சாயத்தில் 14 லட்சத்து 24 ஆயிரத்து 408 ரூபாய் ஊழல் நடந்துள்ளதாக பெரம்பலூர் லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

பெரம்பலூர் மாவட்டம் வி களத்தூர் பஞ்சாயத்து தலைவராக உள்ளவர் கோவிந்தன் மகன் பிரபு, 40, இவர், 2020 20201-ஆம் நிதியாண்டில் பஞ்சாயத்துக்கு தெரு விளக்கு, சுகாதாரப் பொருட்கள், குடிநீர் சப்பளை போன்றவற்றில் வேப்பந்தட்டை யூனியன் அலுவலகத்தில் அப்போது பணி மேற்பார்வையாளராக இருந்த மணிவண்ணன், 52, ஜூனியர் இன்ஜினியர் ஆக இருந்த சந்திரசேகர்,57, மற்றும் காண்ட்ராக்டர் ஆன தொண்டபாடி கிராமத்தைச் சேர்ந்த மணிவேல் மகன் தேவா,30, ஆகியோருடன் சேர்ந்து 14 லட்சத்து 24 ஆயிரத்து 408 ரூபாய் நிதி முறைகேடு செய்து ஊழல் செய்ததாக புகார் எழுந்தது.

இதுகுறித்து புகாரின் பேரில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு சென்னை இயக்குனர் உத்தரவுப்படி பெரம்பலூர் மாவட்ட ஊழல் மற்றும் கண்காணிப்பு பிரிவு டி. எஸ்.பி., ஹேம சித்ரா விசாரித்தார். விசாரணையில் ஊழல் நடந்திருப்பது உறுதியானது. இதனை தொடர்ந்து மேற்கண்ட நான்கு பேர் மீதும் ஒழிப்பு போலீசார் வழக்கு பதிந்து மேலும் விசாரிக்கின்றனர்.


வாசகர் கருத்து (6)

 • vns - Delhi,யூ.எஸ்.ஏ

  தமிழகதிற்கு ஜனநாயகம் சரிவராதா அல்லது நாம் சரியான மனிதர்களைத் தேர்வு செய்வதில்லையா? குடும்ப ஆட்சி மூலம் பணத்தில் கொழுத்த படிக்காத ரவுடிகள் மற்றும் கொள்ளையர்கள் மட்டுமே தேர்வாகும் இந்த மாநிலத்தில் ஒரு மாற்றம் தேவை - சர்வாதிகார ஆட்சி வரக்கூடாது அதனால் நாம் சிறந்தோரை தேர்வு செய்ய வேண்டும். 75 வருங்களாக நாம் திருந்தவில்லையே. இத்தனைக்காலமாக எதுகை மோனை கட்சிப் பத்திரிகைகள் காலையும் மாலையும் மக்களை சிந்திக்கத் தெரியாதவர்களாக மாற்றிவிட்டதா? நமக்கு விடிவுகாலம் வரவே வராதா? நல்லாட்சி கிடைக்காதா?

 • குமரி குருவி -

  லட்சங்களில் லஞ்சம் வாங்கிய வரை சுருட்டும் சட்டம்கோடிகளை கொள்ளலயடித்தமலை விழுங்கி களை விட்டுவைத்திருப்பது எப்படி..

 • நக்கீரன் (நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே) - திருநெல்வேலி சீமை,இந்தியா

  திருட்டு நாயகன், கொள்ளையர் கூட்ட தலைவன் திருந்தினால்தான் இந்த லஞ்ச ஊழல்களை ஒழிக்க முடியும். முதல்வர் எவ்வழியோ அரசு அவ்வழி. அதன் ஊழியர்களும் அவ்வழி. மக்கள் புரிந்துகொண்டால்தான் உண்டு. இல்லையேல் ஒருமுறை ஓட்டுக்கு 1000 வாங்கிவிட்டு பின் வாழ்நாள் எல்லாம் துயரம்தான்.

 • Nalla - Singapore,சிங்கப்பூர்

  ஊழலை ஒழிப்பதற்கான வழிகள் :- (1) பொதுமக்களிடம் விழுப்புணர்சி (2) ஓட்டுக்கு பணம் வாங்காமல் இருத்தல் (3) வரிசை முறை (முதல் ஆள் முதல் உரிமை ) (4) மக்களிடையே கல்வியறிவு , நற்பண்புகளை வளர்த்தல் (5) லஞ்சம் வாங்கவும் கூடாது கொடுக்கவும் கூடாது (6) மக்களிடையே சமத்துவத்தை ஏற்படுத்துதல் (7) வேலை வாய்ப்பை அரசு இல்லாத துறைகளில் அதிகப்படுத்துதல் (8) அரசு துறையில் லஞ்சம் வாங்குபவரை மக்களே தண்டிப்பது (9) நீதி துறையை சரிப்படுத்துதல் (குற்றத்திற்கான தண்டனை அதிகபடுத்துதல்) (10) தெரியும் இதில் எதையும் மக்களால் செய்ய முடியாது

 • raja - Cotonou,பெனின்

  ஊழல் ஊழல் ஊழல் எங்கும் எதிலும் ஊழல் இந்த திருட்டு திராவிட மாடல் ஆட்சியில்....

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement