Load Image
Advertisement

2015க்கு பிறகு சென்னையில் அதிக கன மழை: 19 செ.மீ கொட்டியது

 Heavy rains continue in Chennai; Today is a holiday for 4 district schools  2015க்கு பிறகு சென்னையில் அதிக கன மழை: 19 செ.மீ கொட்டியது
ADVERTISEMENT
சென்னை: சென்னையில் நேற்று முதல் பெய்து வரும் கனமழை காரணமாக நகரின் பல பகுதிகளில் வெள்ள நீர் தேங்கியுள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு அடைந்தது. மீனம்பாக்கத்தில் அதிகப்பட்சமாக மழை பதிவாகி உள்ளது.

நீர் வரத்து அதிகரிப்பு காரணமாக செம்பரம்பாக்கம், புழல் ஏரிகளில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. மேற்கு மாம்பலம், தி.நகர் பகுதியில் இருவர் உயிரிழந்தனர். 2015க்கு பிறகு சென்னையில் 19 செ.மீ அளவு அதிக கனமழை பெய்துள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென்கிழக்கு வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வுநிலை வலுவடைந்து வருவதால் தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் அடுத்த 4 அல்லது 5 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை மையம் அறிவித்தது.

Tamil News
Tamil News
Tamil News
Tamil News
இந்நிலையில் நேற்று இரவு முதல் சென்னையில் பெய்து வரும் பலத்த மழை காரணமாக கொளத்தூர் அஞ்சல் நகர், தியாகராய நகர் உள்ளிட்ட பகுதிகளில் வீடுகளில் நீர் புகுந்ததால் மக்கள் அவதிக்கு உள்ளாகினர். சாலைகளில் தேங்கிய மழை நீரால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர்.

ராயப்பேட்டை மெயின் ரோட்டில் மழை நீர் தேங்கியுள்ளதால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு அடைந்துள்ளது.. சுமார் ஒரு கிலோ மீட்டருக்கும் அதிகமான தூரத்தில் மழை நீர் தேங்கியுள்ளது.


புழல் ஏரி
புழல் ஏரியில் உபரி நீர் திறப்பு வினாடிக்கு 1,000 கனஅடியில் இருந்து 2,000 கன அடியாக அதிகரித்துள்ளது. நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் புழல் ஏரிக்கு நீர்வரத்து 400 கனஅடியாக உள்ளது. செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவை 6 ஆயிரம் கன அடியாக அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.


8 விமானங்கள் ரத்து
சென்னை விமான நிலையத்தில் இருந்து புறப்பட வேண்டிய 4 விமானங்கள், சென்னைக்கு வர வேண்டிய 4 விமானங்கள் என மொத்தம் 8விமானங்கள் ரத்து செய்யப்பட்டது.


புகார் எண்கள்
சென்னை மநகராட்சி மக்கள் மழையினால் பாதிக்கப்பட்டிருந்தால், 1913, எண்கள் 04425619204, 04425619206 என்ற எண்ணை தொடர்பு கொண்டு தங்கள் புகார்கள் தெரிவிக்கலாம் என சென்னை மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மழைநீர்கொரட்டூர் அரசு மருத்துவமனைக்குள் வெள்ளநீர் புகுந்தது. இதனால், நோயாளிகள் அவதிக்கு உள்ளாகினர்.

மாநகராட்சி கமிஷனர் பேட்டி
சென்னையில் பெரும்பாலான இடங்களில் மழைநீர் தேங்கவில்லை என்று மாநகராட்சி கமிஷனர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். மேற்கு மாம்பலம், தி. நகரில் பசுல்லா சாலை, வடக்கு உஸ்மான் சாலை ஆகிய இடங்களில் தண்ணீர் தேங்கியுள்ளது. மாம்பலம் கால்வாயில் உள்ள பிரச்சனையே மழை நீர் தேங்க காரணம் என்று ராதாகிருஷ்ணன் கூறினார்.

வரும் டிசம்பர் 2, 3 தேதிகளில் வட மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இன்று(நவ.,30) சென்னையில் மேக திரட்சி காரணமாக மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது.

பள்ளிகளுக்கு விடுமுறைகன மழை காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை வழங்கப்படுவதாக மாவட்ட கலெக்டர்கள் உத்தரவிட்டுள்ளனர்.

தாழ்வான பகுதிகளில் தேங்கியுள்ள மழை நீரை வெளியேற்றும் பணியில் மாநகராட்சி தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. பொதுமக்கள் அவரவர் வீட்டில் பாதுகாப்பாக இருக்கும் படி மாநகராட்சி அறிவுறுத்தி உள்ளது.

முதல்வர் ஆய்வுசென்னை மாநகராட்சி அலுவலகமான ரிப்பன் மாளிகையில் அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு மையத்தை முதல்வர் ஸ்டாலின் ஆய்வு செய்தார். மழை பாதிப்பு, எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்தார். சென்னை மாநகராட்சி கமிஷனர் மற்றும் அதிகாரிகள் ஸ்டாலினுக்கு விளக்கம் அளித்தனர். அவருடன் அமைச்சர் சேகர்பாபு, மேயர் பிரியா ஆகியோர் உடன் சென்றனர்.

சுரங்கப்பாதை மூடல்வேளச்சேரி ரயில்வே சுரங்கப்பாதையில் மழைநீர் தேங்கி உள்ளதால் போக்குவரத்து தடை செய்யப்பட்டு உள்ளது. இதனால் தரமணி பெருங்குடியில் இருந்து செல்வோர் பல கி.மீ., தூரம் சுற்றி செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டு உள்ளது.


4 பேரிடர் மீட்பு குழுவினர் வருகை
தொடர் கன மழையால் மீட்பு பணிகளை மேறகொள்வதற்காக 4 பேரிடர் குழுவினர் தமிழகம் வருகின்றனர். இதில் 2 குழுவினர் செங்கல்பட்டு மாவட்டத்திற்கும் 2 குழுவினர் விழுப்புரம் மாவட்டத்திற்கும் விரைகின்றனர்.வாசகர் கருத்து (59)

 • rajen.tnl - tirunelveli,இந்தியா

  சென்னைல ஒரு சொட்டு தண்ணி கூட தேங்கலை... சத்தியமா நான் தி மு க கிடையாது. 200 ரூவா வாங்கிட்டு பொய் சொல்லலை

 • AMSA - chennai,இந்தியா

  4000 கோடி எங்கப்பா ?

 • sridhar - Chennai,இந்தியா

  தண்ணி வரல என்று யாரும் அரசை குறை சொல்ல முடியாது . வீட்டுக்குள்ளேயே தண்ணி வந்தாச்சு .

 • தமிழன் - Chennai ,இந்தியா

  இதை காரணமாக காட்டி, முதல்வர் ஸ்டாலின், தார்மீக பொறுப்பு ஏற்று பதவி விலக வேண்டும். இப்படி செய்தா,ல், ஊழல் வழக்கில் மாட்டி இருக்கும் அமைச்சர்கள் தப்பிக்கவும் வாய்ப்பு கிடைக்கும். கட்சிக்கு நல்ல பெயர் கிடைக்கும். அடுத்த தேர்தலில் மக்கள் விரும்பினால் மீண்டும் ஆட்சிக்கு வரலாம்.

  • தமிழன் - Chennai ,இந்தியா

   விரும்பாமல் ஓட்டு போடுவான்

 • தமிழன் - Chennai ,இந்தியா

  மாம்பலம் கால்வாயில் உள்ள பிரச்சனையே மழை நீர் தேங்க காரணம் என்று ராதாகிருஷ்ணன் கூறினார்....///இதுவரை ஆட்சி செய்த திமுக ஏன் இதை கவனிக்கவில்லை.இப்போ தானா இவுங்க ஆட்சிக்கு வந்து இருக்காங்க.. மக்கள் பணி செய்ய தவறிய முதல்வர் ஸ்டாலின், தார்மீக பொறுப்பு ஏற்று பதவி விலக வேண்டும்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்