Load Image
Advertisement

10 ஆயிரம் சிட்டுக்குருவிகளுக்கு தினமும் உணவளிக்கும் தம்பதி

Sivakasi, Nitya Pandi- Sridevi: A couple that feeds 10,000 sparrows daily  10 ஆயிரம் சிட்டுக்குருவிகளுக்கு தினமும் உணவளிக்கும் தம்பதி
ADVERTISEMENT
சிவகாசி :விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் 10 ஆயிரம் சிட்டுக்குருவிகளுக்கு தினமும் உணவளித்து வருகின்றனர் நித்திய பாண்டி, ஸ்ரீதேவி தம்பதியினர்.
சிவகாசி அருகே பள்ளபட்டி ஊராட்சிக்குட்பட்ட ஓம் சேர்மா நகரில் வசிப்பவர்கள் நித்திய பாண்டி- ஸ்ரீதேவி. பிரிண்டிங் தொழில் செய்து வரும் இவர்கள் கூட்டுக் குடும்பமாக வசிக்கின்றனர். வீட்டைச் சுற்றிலும் மரங்கள், செடி, கொடிகள் ஏராளமாக உள்ளன.
துவக்கத்தில் நித்திய பாண்டி குடும்பத்தினர் தங்களது வீட்டில் 5 ஜோடி காதல் பறவைகளை (லவ் பேர்ட்ஸ்) வளர்த்து வந்தனர். இந்தப் பறவைகளுக்கு தினமும் உணவாக தினையை வைப்பது வழக்கம். அவைகள் உணவருந்திய பின்பு தரையில் தினைகள் சிதறி கிடப்பதை அப்பகுதியில் பறந்து திரிந்த சிட்டுக்குருவிகள் உள்ளிட்ட பல்வேறு பறவையினங்கள் உண்டன. தொடர்ந்து மேலும் பல பறவைகள் வரத் துவங்கியதால் தரையில் சிதறிய தினை அனைத்து சிட்டுக்குருவிகளுக்கும் கிடைக்கவில்லை. இதனை கண்காணித்த அவரது குடும்பத்தினர் அனைத்து பறவைகளுக்கும் உணவளிக்க முடிவெடுத்தனர். அதனைத் தொடர்ந்து நிறைய தினை உணவுகளை வைக்கின்றனர்.
நித்திய பாண்டி, ஸ்ரீதேவி கூறியது: பறவைகளுக்கு தினை உணவு வழங்கும் போது தரையில் நிறைய சிதறியது. கொடைக்கானலுக்கு சுற்றுலா சென்ற போது விடுதியில் பறவைகளுக்கு என பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டிருந்த தொங்கும் உணவு பாத்திரங்களையும், பறவைகள் அதில் லாவகமாக அமர்ந்து இரை எடுப்பதையும் பார்த்தோம்.
உடனடியாக அதுபோன்ற பாத்திரங்களை வாங்கி மாடி பால்கனியில் தினை உணவு இருக்கும் இடத்தில் அமைத்தோம். இதன் பின் அழிந்து வரும் இனங்கள் என்று கூறப்படும் சிட்டுக்குருவிகளும், பல்வேறு பறவைகளும் காலை முதல் மாலை வரை கூட்டம் கூட்டமாக வந்து இரை எடுத்துச் செல்கின்றன.
துவக்கத்தில் 200 கிராம் தினை உணவாக அளிக்கப்பட்டு வந்த நிலையில் தினமும் 5000 முதல் 10 ஆயிரம் வரை பறவைகள் வர துவங்கின. இதனால் தினம் 10 கிலோ தினை உணவு கொடுக்கப்படுகிறது.
மாதம் ரூ. 6 ஆயிரத்து 800 வரை செலவாகிறது. எங்கள் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் வெளியூர் செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டால் உறவினர்களை தினமும் பறவைகளுக்கு உணவு வைக்க செய்வேன்.
பறவையினங்களுக்கு வயிறார உணவளிப்பது எங்களுக்கு மன நிறைவை தருகிறது. எங்களின் அடுத்த தலைமுறையினரும் இதை தொடரும் வகையில் கற்றுக் கொடுக்கின்றோம் என்றனர்.இவர்களைப் பாராட்ட 94431 69876.


வாசகர் கருத்து (7)

 • Suresh kumar - Bangalore,இந்தியா

  மிக சிறந்த சேவை... தலை வணங்குகிறோம்

 • Vinayagam - Bangalore ,இந்தியா

  படத்தோடு அனுப்பியிருந்தால் எல்லோருக்கும் தூண்டுதலாக இருக்கும்.

 • vbs manian - hyderabad,இந்தியா

  தர்மம் தலை காக்கும்.

 • பேசும் தமிழன் -

  அய்யா..... அம்மா... நீங்கள் நல்லா இருக்கனும்..... உங்களை போன்ற நல்லவர்கள்.... பிற உயிர்களை நேசிக்கும் ஆட்கள் இருப்பதால் தான்... மழை பொழிகிறது.

 • GV Ganesan - Chennai,இந்தியா

  மிக மிக தவறான முன் உதாரணம். இப்பறவைகள் சுற்றி திரிந்து இரை தேடும் போது வயல் வெளி மற்றும் மரங்கள் செடி கொடி ஆகியவற்றில் உள்ள புழு பூச்சிகளையும் இரையாக உண்ணும். அயல் மக ரந்த சேர்க்கை க்கும் உதவும். இவை மனித குலம் மற்றும் தானிய உற்பத்திக்கு தேவையான செயல். மேலும் இப்பறவைகள் ஒரே இடத்தில் உணவு கிடைப்பின் அவைகளின் கூட்டம் அங்கேயே தங்கி இருக்கும். பரவாது. மேலும் நாளடைவில் இவற்றின் சந்ததிகள் சுற்றி திரிந்து இரை தேடும் திறமை குறைய ஆரம்பிக்கும். ஓரளவு மட்டும் அவற்றின் பசி போக்க உணவு அளிக்க வேண்டும்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement