Load Image
Advertisement

ஓடும் பஸ்சில் மாரடைப்பு பயணியரை காத்த டிரைவர்

 Driver waiting for heart attack passenger in moving bus    ஓடும் பஸ்சில் மாரடைப்பு பயணியரை காத்த டிரைவர்
ADVERTISEMENT
திருக்கோவிலுார்:கடலுார் மாவட்டம், நல்லுார் கிராமத்தைச் சேர்ந்தவர் மாரிமுத்து, 57, விழுப்புரம் கோட்ட அரசு போக்குவரத்து கழகத்தில், விருத்தாசலம் பணிமனையில் டிரைவராக பணியாற்றினார்.

நேற்று முன்தினம் விருத்தாசலத்தில் இருந்து 18 பயணியருடன் திருப்பதிக்கு பஸ்சை ஓட்டிச் சென்றார். நள்ளிரவு 12:00 மணிக்கு, திருக்கோவிலுார், அரும்பாக்கம் அருகே பஸ் சென்றபோது, டிரைவருக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது.

சுதாரித்த டிரைவர் மாரிமுத்து, பஸ்சை சாலையோரம் நிறுத்தி, இருக்கையிலேயே சரிந்தார். உடனே, கண்டக்டர் நேரு, 44, பயணி ஒருவரின் உதவியுடன் பஸ்சை ஓட்டி சென்று, அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு, டிரைவர் மாரிமுத்துவை அழைத்து சென்றார்.

அங்கு அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டது. மேல் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு, அவர் இறந்தார். திருக்கோவிலுார் போலீசார் விசாரிக்கின்றனர்.

நெஞ்சு வலி ஏற்பட்டதும், பஸ்சை சாலையோரம் நிறுத்தி, பயணியரை காப்பாற்றிய டிரைவர் மாரிமுத்துவின் செயல், பயணியை நெகிழ்ச்சி அடையச் செய்தது.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement