Load Image
Advertisement

பேச்சு, பேட்டி, அறிக்கை

 Speech, interview, report    பேச்சு, பேட்டி, அறிக்கை
ADVERTISEMENT
ம.தி.மு.க., பொது செயலர் வைகோ பேட்டி: இலங்கை தமிழர்களுக்காக போராடிய பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் என்ற எண்ணத்தில், நாங்கள் செயல்பட்டு வருகிறோம். இதை, விடுதலை புலிகளுடன் இருந்தவர்களே கூறியுள்ளனர். பிரபாகரன் திரும்பி வருவார் என்ற நம்பிக்கையுடன் நாங்கள் இருக்கிறோம். அவர் உயிருடன் இருக்கிறார் என்பது எங்கள் கருத்து.

பழ.நெடுமாறன் தன்னந்தனியா பேசிட்டு இருக்காரேன்னு பார்த்தோம்... பக்கவாத்தியத்துக்கு ஆள் சேர்ந்துடுச்சு போல!



பா.ம.க., தலைவர் அன்புமணி அறிக்கை: திருவாரூர் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் ஏற்பட்ட மின்தடையால், வென்டிலேட்டர் செயலிழந்ததில், அமராவதி என்ற பெண் உயிரிழந்தார் என்ற செய்தி அதிர்ச்சி அளிக்கிறது. மருத்துவ கல்லுாரி மருத்துவமனைகளில், 24 மணி நேரமும் தடையற்ற மின்சாரம் வழங்கப்பட வேண்டும் என்பது விதியாகும். மருத்துவ துறையில் தமிழகம் வளர்ந்து விட்டதாக நாம் பெருமை பேசி வரும் நிலையில், இப்படி ஒரு நிகழ்வு நடந்திருப்பது பெரும் அவலம்.
'அந்த பெண்ணுக்கு வேறு பல நோய்கள் இருந்தன... அதனால் தான் இறந்துட்டாங்க' என்று தான் சமாளிப்பாங்களே தவிர, தங்கள் தவறை ஒப்புக்கவே மாட்டாங்க!

அ.ம.மு.க., பொது செயலர் தினகரன் அறிக்கை: மதுரை மாவட்டம், மேலுார் பகுதியில் உள்ள பெரியாறு பிரதான கால்வாயின் கீழ், 85,000 ஏக்கர் நிலங்களும், திருமங்கலம் பிரதான கால்வாயின் கீழ், 20,000 ஏக்கர் நிலங்களும் ஒரு போக பாசன வசதி பெற்று வருகின்றன. இதற்கு திறக்கப்பட்ட நீர், கடந்த 24ம் தேதியுடன் நிறுத்தப்பட்டது. இது, விவசாயிகளை வஞ்சிக்கும் செயல் என்பதை உணர்ந்து, உடனே தண்ணீரை திறந்து விவசாயிகளை பாதுகாக்க வேண்டும்.

கர்நாடகா அரசிடம் தண்ணீர் திறங்கன்னு போராடுற தமிழக அரசு, மறுபக்கம் சொந்த விவசாயிகளையே தண்ணீருக்கு கையேந்த வைப்பது என்ன நியாயம்?

பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் அறிக்கை: கூட்டுறவு சங்கங்களுக்கு, 2,257 உதவியாளர்கள் மற்றும் இளநிலை உதவியாளர்கள், கூட்டுறவுத் துறை வாயிலாக நேரடியாக தேர்ந்தெடுக்கப்படுவர் என, அறிவிக்கப்பட்டு உள்ளது. இப்படி, ஒவ்வொரு துறையும் தனித்தனியாக ஆட்களை தேர்ந்தெடுக்கத் துவங்கினால், டி.என்.பி.எஸ்.சி.,க்கு வேலையில்லாமல் போய் விடும்.

தங்களுக்கு வேண்டியவங்களை டி.என்.பி.எஸ்.சி.,யில நியமிக்க, கவர்னர் தடை போடுறதால, அரசு இந்த முடிவுக்கு வந்துடுச்சோ?


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement