Load Image
Advertisement

தெலுங்கானாவில் சத்தியம் வாங்கி ஓட்டுக்கு பணம் விநியோகம்: வீடியோ வெளியாகி பரபரப்பு

Telangana Assembly Elections , Bharat Rashtra Samithi , Chandrasekhara Rao: In Telangana, taking oath and distributing money for voting: Video released and sensational  தெலுங்கானாவில் சத்தியம் வாங்கி ஓட்டுக்கு பணம் விநியோகம்: வீடியோ வெளியாகி பரபரப்பு
ADVERTISEMENT
ஹைதராபாத்: தெலுங்கானாவில் நாளை(நவ.,30) தேர்தல் நடைபெற உள்ள நிலையில், பாரத் ராஷ்ட்ர சமிதி கட்சியை சேர்ந்தவர்கள் வாக்காளர்களுக்கு ஓட்டுக்கு பணம் வழங்கி சத்தியம் வாங்கும் வீடியோ காட்சி சமூக வலைதளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


தெலுங்கானாவில், முதல்வர் சந்திரசேகர ராவ் தலைமையில் பாரத் ராஷ்ட்ர சமிதி ஆட்சி நடக்கிறது. இங்குள்ள 119 சட்டசபை தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக நாளை தேர்தல் நடக்க உள்ள நிலையில், அதற்கான தேர்தல் பிரசாரம் நேற்று மாலையுடன் ஓய்ந்தது.

மாநிலத்தில் மூன்றாவது முறையாக ஆட்சியை பிடிக்க ஆளும் பி.ஆர்.எஸ்., முயற்சிக்கிறது. இதற்கு போட்டியாக, பா.ஜ., காங்கிரஸ், நடிகர் பவன் கல்யாணின் ஜன சேனா, அசாதுதின் ஒவைசியின் ஏ.ஐ.எம்.ஐ.எம்., கட்சிகள் களத்தில் உள்ளன.

இந்நிலையில் விகராபாத் மாவட்டம் புதூர் அடுத்த செலாப்பூர் கிராமத்தில் பாரத் ராஷ்ட்ர சமிதி கட்சி (பி.ஆர்.எஸ்) தலைவர்கள் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கும் வீடியோ பரவி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சாமி படத்தின் முன்பு பணம் வைத்து கார் சின்னத்திற்கு ஓட்டளிப்பேன் என சொல்லி சத்தியம் வாங்கிய பின்னர் பி.ஆர்.எஸ் கட்சியினர் பணம் வழங்குவது வீடியோ காட்சியில் பதிவாகியுள்ளது.

ஒரு ஓட்டுக்கு 1 லட்சமா?தெலுங்கானாவில் வாக்காளர் ஒருவருக்கு 1 லட்சம் ரூபாய் வழங்கியதாக நம்பப்பள்ளி சட்டசபை காங்கிரஸ் வேட்பாளர் பெரோஸ் கான் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அம்மாநில பாஜ., நிர்வாகி அளித்த புகாரின் அடிப்படையில் 171சி, 188 மற்றும் 123 ஆர்பி ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக ஹைதராபாத் போலீசார் தெரிவித்துள்ளனர்.

பல்லடம்: பிரதமர் மோடியின் முழு பேச்சின் வீடியோவாசகர் கருத்து (8)

 • M Ramachandran - Chennai,இந்தியா

  திருமங்கலம் பார்முலா மட்டுமா காளிமுத்து சாதிக்க பாஷா காணாம போனார்களே முன்னவர் காலிய்ய நடையை பயிற்சியில் மஞ்ச துண்டு காலத்தில் பின்னவர் சாதிக் பாஷா ரூமில் தற்கொலையய் என்ற பெயரில் உலகை மனைவியிடம் கூட சொல்லாமல் வெறுத்து சென்று விட்டார். மகா பாரத காலத்தில் பஞ்சமா பாதகங்கள் விளக்க பட்டது. அதெல்லாம் இப்போ ஜுஜுபி

 • partha -

  நீதிமன்றமும் தேர்தல் ஆணையம் என்ன செய்து கொண்டிருக்கிறது...

 • N SASIKUMAR YADHAV -

  தீயமுக அறிமுகப்படுத்திய திருமங்கல ஃபார்முலா பாரதம் முழுவதும் சக்கை போடுப்போடு போடுகிறது உலகத்திலேயே சிறந்த விருது ஏதாவது இருக்குமென்றால் உடனடியாக திமுகவுக்கு கொடுக்கவேண்டும்

 • அப்புசாமி -

  இங்கே செல்லுபடியாகாது. எல்லாம் தி.க. பார்டி.

 • ராமகிருஷ்ணன் -

  திருமங்கலம் பார்முலா தான். பணம் கொடுத்தனர். திராவிடம் இந்தியா முழுவதும் பரவி வருகிறது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்