Load Image
Advertisement

குவாரிகள் ட்ரோன் மூலம் ஆய்வு: உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு

மதுரை:'தமிழகத்திலுள்ள அனைத்து குவாரிகளையும், ஆறு மாதங்களுக்கு ஒருமுறை கனிமவளத்துறை அதிகாரிகள், 'ட்ரோன்' தொழில்நுட்பம் மூலம் ஆய்வு செய்து, அறிக்கை தாக்கல் செய்வதை,தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும்' என, உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

Latest Tamil News


அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரின் தந்தை ராமசாமி தாக்கல் செய்த மனு: கரூர் மாவட்டம் புகளூர் அருகே அத்திபாளையத்தில் கல் குவாரி நடத்த எனக்கு 2011 முதல், 2016 வரை அரசு அனுமதி வழங்கியது; 2021 வரை நீட்டிக்கப்பட்டது. இந்நிலையில், சட்ட விரோதமாக குவாரி நடத்தியதாக எனக்கு 1.55 கோடி ரூபாய் அபராதம் விதித்து, கரூர் மாடவிலகம் ஆர்.டி.ஓ., 2023 ஜூலை 12ல் உத்தரவிட்டார். முன்னாள் அமைச்சரின் தந்தை என்பதால் அரசியல் காரணங்களுக்காக இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது; அதை ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு ராமசாமி குறிப்பிட்டார்.

மனுவை விசாரித்த நீதிபதி பி.புகழேந்தி நேற்று பிறப்பித்த உத்தரவு: தமிழகத்தில், 1700க்கு மேல், கல் குவாரிகளுக்கு அரசு அனுமதி வழங்கியுள்ளது. ஒரு குவாரியிலேயே சட்ட விரோதமாக 15 கோடி ரூபாய்க்கு விதிமீறல் நடந்துள்ளது எனில், தமிழகத்திலுள்ள மற்ற குவாரிகளில் சட்ட விரோதமாக எந்தளவிற்கு நடந்திருக்கும் என்று தெரியவில்லை.

Latest Tamil News

எனவே, கனிம வளத்துறை அதிகாரிகள் ஆறு மாதங்களுக்கு ஒருமுறை குவாரிகளை கண்காணித்து, விதிகள்படி நடத்தப்படுகிறதா என்பதை கண்டறிய வேண்டும். 'ட்ரோன்' தொழில்நுட்பம் மூலம், ஆறு மாதங்களுக்கு ஒரு முறை குவாரியில் ஆய்வு நடத்த அண்ணா பல்கலையுடன், கனிமவளத் துறை 25 கோடி ரூபாய்க்கு ஒப்பந்தம் செய்துள்ளது.
இது தவிர, ஒவ்வொரு மாவட்டத்திற்கும் சர்வேயர்களைக் கொண்ட சர்வே ஸ்டேஷன் தொழில்நுட்பமும் வழங்கப்படுகிறது. இதன் அடிப்படையில் அவ்வப்போது ஆய்வு நடத்தினால், இவ்வளவு பெரிய அளவில் சட்ட விரோத குவாரி நடத்துவது சாத்தியமில்லை.

இவ்வழக்கில், ஆர்.டி.ஓ., உத்தரவு பிறப்பிக்கும் முன், மனுதாரருக்கு நோட்டீஸ் அளிக்கவில்லை. இயற்கை நீதி மீறப்பட்டுள்ளதால், ஆர்.டி.ஓ.,வின் உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. மனுதாரருக்கு அனுமதிக்கப்பட்ட குத்தகை பகுதியில் எடுக்கப்பட்ட கனிமங்களின் அளவை சர்வே, கனிமவளத் துறையின் உதவியுடன் 'ட்ரோன்' தொழில்நுட்பத்தை பயன்படுத்தி அளவீடு செய்ய கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு உத்தரவிட்டார்.


வாசகர் கருத்து (7)

 • Venkataraman - New Delhi,இந்தியா

  மணல் கொள்ளையில் கடந்த இரண்டாண்டுகளில் மட்டும் 4500 கோடி ரூபாய் அளவுக்கு ஊழல் நடைபெற்றிருப்பதாக அமலாக்கத்துறை, நீதிமன்றத்தில் அறிக்கை கொடுத்திருக்கிறது. இதில் அமைச்சர்கள் முதல் அதிகாரிகள் வரை அனைவரும் ஈடுபட்டிருக்கிறார்கள். அதேபோல கல் குவாரிகள் மூலமாக நடைபெறும் ஊழலிலும் மிகப்பெரிய ஊழல் நடைபெற்று வருகிறது. இதேபோல டாஸ்மாக் கடைகளிலும், ஆவின் பால் நிறுவனத்திலும் ஊழலும் கொள்ளையும் தொடர்ந்து நடைபெறுகிறது. ஆனால் ஊழலை பற்றி பேசுபவர்கள் ஆதாரங்களுடன் நீதிமன்றத்தில் வழக்கு போடுவதில்லை. அதனால் ஊழல், கொள்ளையில் ஈடுபடுபவர்கள் எந்த அச்சமும் இன்றி தொடர்ந்து செய்து வருகிறார்கள். தேர்தலில் வாக்காளர்களுக்கு லஞ்சம் கொடுப்பதற்கு இந்த பணம் பயன்படுகிறது.

 • Sivagiri - chennai,இந்தியா

  ஜட்ஜே நேரடியா பார்த்தாலே கண்டுபிடிக்க முடியாதே - ட்ரோன்-எல்லாம் வேற எங்கயாவது ட்ரோன்-ஐ ஓட்டி படம் புடிச்சு பாத்தீங்களா , தரை எவ்வளவு தெளிவா இருக்கு ? ஒரு பிடி மண் கூட எடுக்கப்படவில்லை-ன்னு காமிச்சுருவாங்க - - எம்ப்டன் பரம்பரை .. . .

 • R. Vidya Sagar - Chennai,இந்தியா

  ட்ரான் வாங்குவதில் ஊழல் செய்ய ஒரு அருமையான வாய்ப்பு

 • பைரவர் சம்பத் குமார் -

  1). மக்கள் இந்த திராவிட கட்சிகளை வரும் தேர்தல்களில் புறம் தள்ள வேண்டும். 2). குறிப்பாக சிறுபான்மையினர் மதம் என்ற கண்ணோட்டத்தில் பார்க்காமல் இனிவரும் காலங்களில் ஒட்டு அளிக்க வேண்டும் என்பது கனிவான வேண்டுகோள். உங்கள் குழந்தைகள் நமது குழந்தை செல்வங்கள் மற்றும் நாட்டின் முன்னேற்றத்துக்கு முன்னுரிமை கொடுத்து வாக்களியுங்கள். 3). மணல் , கல்குவாரி, பால், தயிர் என எல்லாவற்றிலும் கொள்ளை அடிப்பதில் திறமையானவர்கள் இந்த திராவிட தும்பிமார்கள்.4). தப்பித்தவறி மாட்டிக் கொண்டால் இவர்கள் வேறுநாட்டிற்கு ஓடினாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.5). இலங்கை ராஜபக்சே குடும்பம் பாகிஸ்தான் நவாஸ் ஷெரீப் போல் வெளிநாடுகளுக்கு தப்பிவிட்டார் கள்.6). எல்லா நாடுகளிலும் கொள்ளை அடித்த பணத்தை இன்வெஸ்ட்மென்ட் பண்ணி இருப்பதால் அந்த அந்த நாடுகள் இவர்களை மலர் கொடுத்து வரவேற்கும்.7). மக்களாகிய நாம் எங்கும் ஒட முடியாது. நாம் இங்கே பிறந்து வாழ்ந்து மடிய வேண்டியவர்கள். எனவே இந்த திராவிட கட்சிகளை புறம் தள்ள வேண்டும். 8). திராவிட கட்சிகள் தங்களது குடும்பம் மற்றும் வாரிசுகள் நல்லபடியாக வாழ உழைக்கிறார்கள்.9). நாம் செய்ய வேண்டியது ஒன்றே ஒன்றுதான். மோடியின் கரத்தை வலுவாக்கும். அது ஒன்றே நமது குழந்தைகளின் எதிர்காலத்தை உறுதியாக மாற்றும்.10). ஜாதி மதம் மொழி இனம் பாராமல் நல்ல தலைவர்களை தேர்ந்து எடுப்பதில் ஒன்று சேர்வோம்.

 • நக்கீரன் (நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே) - திருநெல்வேலி சீமை,இந்தியா

  ஏறக்குறைய ஒட்டுமொத்த கனிம வளங்களும் சூறையாடப்பட்டு விட்டன. இனி எஞ்சியிருப்பது மிஞ்ச வேண்டுமானால் குற்றமிழைத்தவர்கள், குற்றமிழைப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால், நடப்பது என்ன? நீதிமன்றங்கள் எதோ இப்போதுதான் ஆரம்பிப்பது போல் வருடிக்கொடுத்துக்கொண்டு இருக்கின்றனர். காரணம் நீதிமன்றங்களும் ஆட்சியாளர்களின் குற்ற செயல்களுக்கு துணை போவதுதான். பெரும்பாலான நீதிபதிகளும் கறை படிந்துவிட்டனர். இதுதான் மறுக்க முடியாத வருத்தமான உண்மை. இது மாறாதவரை ஒன்றும் மாறப்போவதில்லை. சீர்திருத்தம் தலைமை இடத்திலிருந்து ஆரம்பிக்கப்பட வேண்டும். முதல்வர் குடும்பம் முதலில் திருந்த வேண்டும்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்