Load Image
Advertisement

தெலுங்கானாவில் நாளை ஓட்டுப்பதிவு

 Voting in Telangana tomorrow    தெலுங்கானாவில் நாளை ஓட்டுப்பதிவு
ADVERTISEMENT

ஹைதராபாத்: தெலுங்கானாவில் இரண்டு மாதங்களாக அனல் பறந்த தேர்தல் பிரசாரம், நேற்று மாலை 5:00 மணியுடன் நிறைவடைந்தது. நாளை பலத்த பாதுகாப்புடன் ஓட்டுப்பதிவு நடக்கிறது.

தெலுங்கானாவில், முதல்வர் சந்திரசேகர ராவ் தலைமையில் பாரத் ராஷ்ட்ர சமிதி ஆட்சி நடக்கிறது. இங்குள்ள 119 சட்டசபை தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக நாளை தேர்தல் நடக்க உள்ள நிலையில், அதற்கான தேர்தல் பிரசாரம் நேற்று மாலையுடன் ஓய்ந்தது.

மாநிலத்தில் மூன்றாவது முறையாக ஆட்சியை பிடிக்க ஆளும் பி.ஆர்.எஸ்., முயற்சிக்கிறது. இதற்கு போட்டியாக, பா.ஜ., காங்கிரஸ், நடிகர் பவன் கல்யாணின் ஜன சேனா, அசாதுதின் ஒவைசியின் ஏ.ஐ.எம்.ஐ.எம்., கட்சிகள் களத்தில் உள்ளன.

பி.ஆர்.எஸ்., சார்பில் முதல்வர் சந்திரசேகர ராவ், அவரது மகனும் அமைச்சருமான கே.டி.ராமா ராவ் உள்ளிட்டோர் களத்தில் உள்ளனர். காங்., சார்பில் மாநில தலைவர் ரேவந்த் ரெட்டி போட்டியிடுகிறார். பா.ஜ.,வில் லோக்சபா எம்.பி., பந்தி சஞ்சய் குமார் முக்கிய வேட்பாளராக அறியப்படுகிறார்.

இறுதிகட்ட பிரசாரம் நேற்று மாலையுடன் நிறைவடைந்தது. நாளை நடைபெறும் தேர்தலில் 3.26 கோடி வாக்காளர்கள் ஓட்டளிக்க உள்ளனர். இதற்காக 2.5 லட்சம் பேர் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். நாளை பதிவாகும் ஓட்டுகள் டிச., 3ல் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

தெலுங்கானாவில் முதல் முறையாக இந்த சட்டசபை தேர்தலில் 80 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் வீட்டிலிருந்த படியே ஓட்டுப்பதிவு செய்ய வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.


வாசகர் கருத்து (1)

  • அப்புசாமி -

    திருப்பதி போய் சாமி கும்புட்டாரே...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்