Load Image
Advertisement

சீனாவில் பரவும் நோய்: ஏற்றுமதியாளர்கள் அச்சம்

புதுடில்லி: சீனாவில் தற்போது பரவி வரும் சுவாச நோய் தொற்று குறித்து கவலையடைந்துள்ள இந்திய ஏற்றுமதியாளர்கள், அது குறித்து உன்னிப்பாக கவனித்து வருவதாக தெரிவித்துள்ளனர்.

Latest Tamil News


கொரோனா தொற்றுக்குப் பிறகு, தற்போது சீனாவில், சுவாச நோய் தொற்று விரைவாகப் பரவி வருகிறது. இது கொரோனா தொற்றின் போது ஏற்பட்டது போல், மீண்டும் உலகளாவிய வினியோகத் தொடரையும், வர்த்தகத்தையும் பாதிக்கலாம் என்பதால், நிலைமையை எச்சரிக்கையுடன் உன்னிப்பாக கவனித்து வருவதாக இந்திய ஏற்றுமதியாளர்கள் தெரிவித்துள்ளனர்.


சீனாவின் தற்போதைய நிலைமை கவலைக்கிடமான வகையில் இல்லையென்றாலும், கொரோனா போன்று உலகின் பிற பகுதிகளுக்கு பரவினால், உலக வர்த்தகத்தில் பாதிப்பை உண்டாக்கும் என ஏற்றமதியாளர்கள் கருதுகின்றனர்.

இந்தியாவின் முக்கிய வர்த்தக கூட்டாளியாக சீனா உள்ளது. நடப்பாண்டு ஏப்ரல் - அக்டோபர் காலகட்டத்தில், சீனாவில் இருந்து இறக்குமதி 4.98 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது. முந்தைய ஆண்டில் இதே காலகட்டத்தில், 5 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது. கடந்த நிதியாண்டில், சீனா உடனான இருதரப்பு வர்த்தகம், 9.45 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது.


வாசகர் கருத்து (2)

  • Sampath Kumar - chennai,இந்தியா

    சீனாவிற்கு உண்மையில் சோதனை தான் உலகத்தில் இனி சீனாதான் அணைத்தாள் டாப் இதனால் அடுத்தநாடுகள் அலங்கோல படுவது உறுதி

  • Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா

    ஏன் சீனாவுக்கு மட்டும் இதுபோன்ற சோதனை? அங்கிருந்து வேறு நாடுகளுக்கு செல்லும் மக்களால், அந்த நாடுகளுக்கும் பிரச்சினை. சீனா வேண்டுமென்றே இப்படி செய்கிறதா அல்லது உண்மையிலேயே அவர்களுக்கு சோதனையா?

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்