Load Image
Advertisement

தென் மாவட்டங்களில் துணை ராணுவம்; கிருஷ்ணசாமி கடிதம்

 Krishnasamys letter to Amit Shah, paramilitary in southern districts  தென் மாவட்டங்களில் துணை ராணுவம்; கிருஷ்ணசாமி கடிதம்
ADVERTISEMENT
சென்னை:'தென் மாவட்ட மக்களின் பாதுகாப்புக்கு துணை ராணுவ படையை அனுப்ப வேண்டும்' என, புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, கவர்னர் ரவி ஆகியோருக்கு நேற்று, அவர் எழுதியுள்ள கடிதம்:

தமிழகத்தில், 2021ல் தி.மு.க., ஆட்சிக்கு வந்த பின், 1995ல் நடந்தது போன்ற கலவரச் சூழல், தென் மாவட்டங்களில் ஏற்பட்டுள்ளது.

அரசியல் லாபம்கடந்த ஓராண்டில் மட்டும், தென் மாவட்டங்களில், 50க்கும் அதிகமான கொலைகள் நடந்துள்ளன. இதில் பாதிக்கப்பட்டவர்கள், பட்டியலினத்தைச் சேர்ந்தவர்களாக இருக்கின்றனர்.

தன் சொந்த நிலத்தில் உழைத்துப் பிழைக்க வழியில்லாமல், அஞ்சி வாழ வேண்டியிருக்கிறது அல்லது அங்கிருந்து வெளியேற வேண்டிய சூழல் உள்ளது.

காவல் துறையில், ஒரு குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள், 90 சதவீதம் இருப்பதே இதற்கு காரணம்.

தென் மாவட்டங்களில் கலவரம் வெடித்தால், அதை வைத்து அரசியல் லாபம் தேடலாம் என, தி.மு.க., அரசு நினைக்கிறது.

எனவே, தென் மாவட்டங்களில் நடந்த ஜாதி ரீதியான அடக்குமுறைகள், மனித உரிமை மீறல்கள், பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான சமூக கொடுமைகளை முறையாக விசாரிக்க, மத்திய உள்துறை சிறப்புக் குழுவை அனுப்ப வேண்டும்.

இடமாற்றம்மத்திய உள்துறை இணை அமைச்சரை, தென் மாவட்டங்களுக்கு அனுப்பி, உண்மை நிலையை கண்டறிய வேண்டும்.

தென் மாவட்ட மக்களுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில், சிறிது காலத்திற்காவது துணை ராணுவப் படையை அங்கு நிறுத்த வேண்டும்.

வரும் லோக்சபா தேர்தலில், அனைவரும் அச்சமின்றி தேர்தல் பணிகளைச் செய்யும் சூழலை உருவாக்க வேண்டும்.

சமூக விரோதிகளுக்கு துணையாக இருக்கும் காவல் துறையினரை இடமாற்றம் செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.வாசகர் கருத்து (20)

 • தஞ்சை மன்னர் - Tanjore,இந்தியா

  இவரை போன்றாரோ பதவியில் நீடிக்க கலவரத்தை தூண்டிவிட்டு பின்பு ஒன்றிய அரசு மாநில அரசு என்று பிதற்ற வேண்டியது என்றைக்கு இவர் சாதி மத கட்சியான பி சே பி பின்னாடி போனாரோ அன்றே இவரின் சுய ரூபம் தெரிந்து விட்டது இவரை சார்த்தோர் விழித்து கொள்ளவேண்டும் இவர் கலவரம் செய்ய பாதுகாப்பு தேடுகிறோரோ என்னவோ

 • J.Isaac - bangalore,இந்தியா

  கர்நாடகாவில் ஹிந்துத்துவா கொள்கைகளை விமர்சித்த இந்து சமூக ஆர்வலர்கள் கெளரி லகேஷ், கல்புர்கி டபோல்கர் போன்றோர் கொலை செய்தது யார் என்று இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை

 • தமிழ் -

  தென்மாவட்டங்களில் இன்றும் ஜாதிப்பிரச்சனை தொடர்வதற்கு இவன்மதிரியான ஆட்களே காரணம்.

 • S Regurathi Pandian - Sivakasi,இந்தியா

  ஒரு குறிப்பிட்ட சமூகத்தினர் 90 விழுக்காடு காவல்துறையில் உள்ளனர் என்று இவர் கூறுவதன் மூலம் ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் மீது பழியை போட்டு கலவரம் செய்ய இவர் தயாராகிறாரோ என்றே சந்தேகம் வருகிறது. இன்று எந்த தரப்பு மக்களும் கலவரம் செய்யும் மனநிலையில் இல்லை ஆனால் இவரை போன்றவர்கள் கலவரம், கலவரம் என்று பேச தொடங்கியுள்ளனர். மணிப்பூர் போல இங்கும் ஏதாவது செய்ய எத்தனிக்கார்களோ என்று சந்தேகம் வருகிறது. சாமானிய மக்கள், குறிப்பாக இளைஞர்கள், ஒற்றுமையாக இருந்து கலவர புத்தி உடையவர்களை தள்ளி வைக்க வேண்டும்.

 • N.Purushothaman - Cuddalore,மலேஷியா

  விடியலும் நாற்பது திருடர்களும் ஆட்சி நடத்தினால் வேறெப்பிடி இருக்கும் ?

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்