Load Image
Advertisement

கோவை மாநகராட்சியிலுள்ள ஆக்கிரமிப்புகள் கண்ணில் தெரிவது 250... காகிதத்தில் இருப்பது 121

250 visible to the eye... 121 encroachments in Coimbatore on paper... Statistics in the list sent to the government!   கோவை மாநகராட்சியிலுள்ள ஆக்கிரமிப்புகள் கண்ணில் தெரிவது 250... காகிதத்தில் இருப்பது 121
ADVERTISEMENT


கோவை மாநகராட்சியில், 121 பொது ஒதுக்கீட்டு இடங்கள் ஆக்கிரமிப்பில் இருப்பதாகக் கண்டறிந்து, அரசுக்கு பட்டியல் அனுப்பப்பட்டுள்ளது.

அரசு நில ஆக்கிரமிப்புகளைக் கண்டறிந்து, பட்டியலை அனுப்புமாறு, அனைத்து மாநகராட்சி மற்றும் நகராட்சிகளின் கமிஷனர்களுக்கு, நகராட்சி நிர்வாக இயக்குனர் கடிதம் எழுதியுள்ளார்.

இதன்படி, கோவை மாநகராட்சியில் ஐந்து மண்டலங்களில் உள்ள ஆக்கிரமிப்புகள் குறித்த விபரங்கள், நகர அமைப்புப் பிரிவு அதிகாரிகளால் சேகரிக்கப்பட்டு, அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

அதில், மண்டல வாரியாகப் பிரித்து, ஆக்கிரமிப்பு குறித்த பல்வேறு விபரங்களும் தெரிவிக்கப்பட்டுள்ளன.

இதன்படி, ஐந்து மண்டலங்களிலும் சேர்த்து 121 ஆக்கிரமிப்புகள் இருப்பதாகத் தெரியவந்துள்ளது. அதிகபட்சமாக, மேற்கு மண்டலத்தில் 53 ஆக்கிரமிப்புகளும், குறைந்தபட்சமாக தெற்கு மண்டலத்தில் 12 ஆக்கிரமிப்புகளும் உள்ளன.

மத்திய மண்டலத்தில் 22, கிழக்கு மண்டலத்தில் 16, வடக்கு மண்டலத்தில் 18 என்ற எண்ணிக்கையில், ஆக்கிரமிப்புகள் இருப்பதாகக் கணக்கிடப்பட்டுள்ளது.

மேற்கு மண்டலத்தில் உள்ள 53 ஆக்கிரமிப்புகளில் 22, வடவள்ளியிலும், 20 கவுண்டம்பாளையத்திலும், ஒன்பது வீரகேரளத்திலும் உள்ளன. தெலுங்குபாளையம் மற்றும் ஏழாவது வார்டில் தலா ஒரு ஆக்கிரமிப்பு இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது.

வடவள்ளி பேரூராட்சியாகவும், கவுண்டம்பாளையம் நகராட்சியாகவும் இருந்தபோது, இந்த பொது ஒதுக்கீட்டு இடங்கள், அப்போது முக்கியப் பொறுப்பில் இருந்த மக்கள் பிரதிநிதிகள் மற்றும் அதிகாரிகளால், முறைகேடாக விற்பனை செய்யப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. கிழக்கில் 16ல் 14 இடங்கள், காளப்பட்டியில் பகுதியில் உள்ளன. அங்கும் அதே முறைகேடு நடந்துள்ளது.

மத்திய மண்டலத்தில் உள்ள 22 ஆக்கிரமிப்புகளில் 6 இடங்கள், சவுரிபாளையத்திலும், 4 இடங்கள், பாப்ப நாயக்கன் பாளையத்திலும் உள்ளன. வடக்கிலுள்ள 18 ஆக்கிரமிப்புகளில், 6 இடங்கள் கணபதியிலும், தலா இரு இடங்கள் துடியலுார் மற்றும் சின்னவேடம்பட்டியிலும் இருக்கின்றன. தெற்கிலுள்ள 12 ஆக்கிரமிப்புகளில் சரி பாதி இடங்கள், குறிச்சியில் உள்ளன.

ஐந்து மண்டலங்களில் கண்டறியப்பட்டுள்ள 121 ஆக்கிரமிப்புகளில், பல இடங்கள் போலி ஆவணங்களைக் கொண்டு விற்பனை செய்யப்பட்டுள்ளன.

பல இடங்களில் வீடுகள் மற்றும் கடைகள் கட்டப்பட்டுள்ளன. பூங்கா அமைக்க வேண்டிய இடங்கள்தான், பெருமளவில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன.

மொத்தம் 121 ஆக்கிரமிப்புகளில், பல இடங்கள் தொடர்பாக வழக்குகள் நடந்து வருகின்றன. இவற்றைத் தவிர்த்து, 100க்கும் மேற்பட்ட பொது ஒதுக்கீட்டு இடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகள், இந்தப் பட்டியலில் இடம் பெறவில்லை என்பது குடியிருப்போர் நலச்சங்கங்களின் குற்றச்சாட்டாகவுள்ளது. இவற்றின் மொத்த மதிப்பைக் கணக்கிட்டால், 500 கோடி ரூபாய்க்கும் அதிகமாக இருக்கும். உதாரணமாக, கொடிசியா அருகிலுள்ள ஜி.ஆர்.ஜி.,நகரில் மட்டும், ஒன்றரை ஏக்கர் ரிசர்வ் சைட் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. அதன் மதிப்பு ரூ.25 கோடி இருக்கும்.

கிழக்கு மண்டலத்தில், பெர்க்ஸ் பள்ளி அருகில், கோ ஆபரேட்டிவ் காலனியில், ரூ.20 கோடி மதிப்புள்ள 97 சென்ட் ரிசர்வ் சைட், இதுவரை ஆக்கிரமிப்பில்தான் இருக்கிறது.

சாய்பாபா காலனி எஸ்.ஆர்.பி., நகர், சின்னம்மாள் லே அவுட், ராமலிங்கம் கூட்டுறவு காலனி , சரவணம்பட்டி மீனாட்சி நகர், மசக்காளிபாளையம் பாலன் நகர், பீளமேடு பாரதி காலனி, கொங்கு நகர் உட்பட 250க்கும் மேற்பட்ட இடங்கள், ஆக்கிரமிப்பில் உள்ளன. இவற்றை மீட்டால், மாநகராட்சி திட்டங்களுக்கும், பொது மக்களின் பயன்பாட்டுக்கும் ஏராளமான இடம் கிடைக்கும்.

எனவே, இந்த ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு, போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுப்பது காலத்தின் கட்டாயம்.




-நமது நிருபர்-


வாசகர் கருத்து (2)

  • நக்கீரன் (நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே) - திருநெல்வேலி சீமை,இந்தியா

    ஆக்கிரமித்தவர்கள் திருட்டு திராவிட கூட்டம் என்பதால் அவை கண்ணுக்கு தெரிவதில்லை.

  • Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா

    கண்ணில் தெரியாமல் இருப்பது எவ்வளவு?

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்