Load Image
Advertisement

தெலுங்கானாவில் ஊழல் தலைவிரித்தாடுகிறது: பிரியங்கா

Telangana Assembly Election: Corruption rampant in Telangana: Priyanka Gandhi  தெலுங்கானாவில் ஊழல் தலைவிரித்தாடுகிறது: பிரியங்கா
ADVERTISEMENT
ஹைதராபாத்: தெலுங்கானாவில் ஊழல் தலைவிரித்தாடுகிறது. அனைத்து அரசு திட்டங்களிலும் கமிஷன் எடுக்கப்படுகிறது என காங்.,பொதுச்செயலாளர் பிரியங்கா குற்றம் சாட்டியுள்ளார்.

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் தேர்தல் பிரசாரத்தில் பிரியங்கா பேசியதாவது: தெலுங்கானாவில் காங்கிரஸ் ஆட்சி அமைந்தால் நேர்மையாக மக்கள் நலனுக்காக செயல்படுவோம். தெலுங்கானாவில் 10 ஆண்டுகளாக பாரத் ராஷ்ட்ர சமிதி (பிஆர்எஸ்) அரசு உள்ளது. உங்களுக்கு வேலை கிடைத்ததா?. இந்த அரசு பெண்களுக்கு ஏதாவது செய்திருக்கிறதா?

சந்திரசேகர ராவ் தனது குடும்ப உறுப்பினர்களை அமைச்சர் ஆக்கினார். பெரிய அரண்மனைகளை கட்டினார். ஆனால் பொதுமக்களுக்கு எதுவும் செய்யவில்லை. நாட்டிலேயே பண்ணை வீட்டில் இருந்து இயங்கும் முதல் அரசு இதுவாகும். தெலுங்கானாவில் ஊழல் தலைவிரித்தாடுகிறது. அனைத்து அரசு திட்டங்களிலும் கமிஷன் எடுக்கப்படுகிறது.

ஆயிரக்கணக்கான கோடிகள் கொள்ளையடிக்கப்படுகின்றன. மக்கள் அனைவரும் உங்கள் குழந்தைகளின் எதிர்காலத்திற்காக புத்திசாலித்தனமாக ஓட்டளிப்பது உங்கள் பொறுப்பு.
காங்கிரசுக்கு ஓட்டளியுங்கள்; இதன் மூலம் உண்மையான அரசாங்கம் எவ்வாறு இயங்குகிறது என்பதை நாங்கள் உங்களுக்குக் காட்ட முடியும். இவ்வாறு பிரியங்கா பேசினார்.


வாசகர் கருத்து (9)

  • Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா

    பிரியங்கா தலையில் அவர் கூந்தல் முடி கட்டுக்குள் வராமல் விரிந்து ஆடுகிறது. ஏதோ காங்கிரஸ் ஆட்சியில் ஊழலே செய்யாமல் இருந்ததுபோல பிரியங்கா, ராகுல் பேசுவதை பார்த்தால் சிரிப்புத்தான் வருது. அவர்கள் ஆட்சியில் கோடிக்கணக்கில் ஊழல் செய்துதான் இன்று அந்த கட்சி மூழ்கும் நிலையில் உள்ளது.

  • panneer selvam - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்

    Priyanka Madame, just visit Tamilnadu for a day and check with your party members about corruption in Tamilnadu , you will get confirmation that present government will out beat BRS government on corruption in every sphere of activities.

  • rsudarsan lic - mumbai,இந்தியா

    இவங்களுக்கு யாராவது சினிமா சான்ஸ் கொடுத்தால் பரவாயில்லை

  • ravi -

    இதையெல்லாம் நீங்க பேசறீங்க பாருங்க அதுதான் சகிக்கல. இதையெல்லாம் பேசறதுக்கு உங்க குடும்பத்தில் யாருக்கும் தகுதி கிடையாது

  • பேசும் தமிழன் -

    50 ஆண்டுகள் ஆட்சி செய்த.... கான் கிராஸ் கட்சியை சேர்ந்த உங்களுக்கு தானே தெரியும்.... எப்படி எல்லாம் கொள்ளை அடிக்க முடியும் என்று !!!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்