Load Image
Advertisement

5வது முறையாக பாஜ., ஆட்சி அமைக்கும்: ம.பி முதல்வர் சவுகான் உறுதி

Madhya Pradesh Assembly Election: Shivraj Chouhan Says BJP Will Form Government For 5th Time In Madhya Pradesh 5வது முறையாக பாஜ., ஆட்சி அமைக்கும்: ம.பி முதல்வர் சவுகான் உறுதி
ADVERTISEMENT

போபால்: மத்திய பிரதேசத்தில் 5வது முறையாக பாஜ., ஆட்சி அமைக்கும் என அம்மாநில முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் தெரிவித்துள்ளார்.

மத்தியப்பிரதேசத்தில் உள்ள 230 சட்டசபை தொகுதிகளுக்கும் நவ.,07ம் தேதி ஒரே கட்டமாக ஓட்டுப்பதிவு நடந்தது. 73.71 சதவீத ஓட்டுகள் பதிவாகி உள்ளன என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. தேர்தல் முடிவு டிச.,3 தேதி அறிவிக்கப்பட உள்ளது.

இந்நிலையில், ம.பி முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: டிசம்பர் 3ம் தேதி மத்திய பிரதேசத்தில் 5வது முறையாக பாஜ., ஆட்சி அமைக்கும். ஆட்சி அமைப்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

மாநிலத்தில் பாஜ., செய்த பணிகளுக்கு மக்கள் ஆசி வழங்குவார்கள். இவ்வாறு அவர் கூறினார். ம.பியில் 2003, 2008, 2013 மற்றும் 2020ல் பாஜ., 4 முறை ஆட்சி அமைத்தது குறிப்பிடத்தக்கது.


வாசகர் கருத்து (9)

  • ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா

    எப்படியாவது ஆட்சி அமைக்கும் என்று சேர்த்து சொல்லீருக்கலாம். போன தடவை தான் பார்த்தோமே.

  • venugopal s -

    உங்களுக்கு என்னப்பா, ஊழல் பணம் நிறையவே உள்ளது எப்படியும் எதிர்க்கட்சி எம் எல் ஏ க்களை அமலாக்கத் துறையை வைத்து பயமுறுத்தியோ அல்லது விலைக்கு வாங்கியாவது ஆட்சியை பிடித்து விடுவீர்கள்!

  • அப்புசாமி -

    ஜோதிராதிய சிந்தியாவுடன் சேர்ந்து ஆட்சி அமைச்சது படு கேவலம். அஞ்சாவது முறையாம்.

  • abdulrahim - dammam ,சவுதி அரேபியா

    அதாவது காங்கிரஸ் ஜெயித்தவுடன் காங்கிரஸ் MLA களை திருடி ஆட்சி அமைப்பார் போல.....

  • Vathsan - மும்பை,இந்தியா

    நீங்கள் ஒன்றுமே நல்லது செய்யாவிட்டாலும் மந்திரித்து விட்ட கோழி மாதிரி வோட் போடுவார்கள் படிப்பறிவு குறைந்த ம பி மக்கள். அரசியலில் எவனுமே நல்லவன் கிடையாது, ஒரே கட்சியை ஆட்சியில் வைப்பது மக்கள் செய்யும் மிகப்பெரிய தவறு ஜனநாயகத்தில். பார்ப்போம் ம பி மக்கள் என்ன செயகிறார்கள் என்று.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்