Load Image
Advertisement

5 மாநிலங்களிலும் காங்கிரஸ் ஆட்சி அமைக்கும்: கெலாட் நம்பிக்கை

Assembly Elections 2023, Election Results 2023:Telangana, Rajasthan:Congress to form government in all 5 states: Ashok Gehlot hopes  5 மாநிலங்களிலும் காங்கிரஸ் ஆட்சி அமைக்கும்: கெலாட் நம்பிக்கை
ADVERTISEMENT

ஹைதராபாத்: தெலுங்கானா உட்பட 5 மாநிலங்களிலும் காங்கிரஸ் ஆட்சி அமைக்கும் என ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக, அசோக் கெலாட் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: காங்கிரஸ் எல்லா இடங்களிலும் வெற்றிபெறப் போகிறது, தெலுங்கானா காங்கிரசின் உத்தரவாதங்கள் ராஜஸ்தானைக் காட்டிலும் சுவாரஸ்யமாக உள்ளன. வாக்குறுதிகளை வழங்குங்கள், அதனை நிறைவேற்றுங்கள் என்பது காங்கிரஸ் கட்சியின் மந்திரம். தெலுங்கானா உட்பட 5 மாநிலங்களிலும் காங்கிரஸ் ஆட்சி அமைக்கும்.

தெலுங்கானாவில் காங்கிரஸ் ஆட்சி அமைத்திருந்தால், மாநிலம் மிகவும் முன்னேறியிருக்கும். பாஜ., மற்றும் பி.ஆர்.எஸ் கட்சி இடையே தொடர்பு உள்ளது. தேர்வு வினாத்தாள் கசிவை தடுக்க கடுமையான சட்டங்களை இயற்றிய ஒரே மாநிலம் ராஜஸ்தான். கடந்த 9 ஆண்டுகளில், மத்தியப் பிரதேசம், தெலுங்கானா, குஜராத் என அனைத்து இடங்களிலும் தேர்வு வினாத்தாள் கசிவுகள் நடந்து வருகின்றன.

சி.பி.ஐ., அமலாக்கத்துறை மற்றும் வருமான வரித்துறை போன்ற விசாரணை அமைப்புகள் மீதான நம்பகத்தன்மை நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. அரசியல் நோக்கங்களுக்காகவும் இந்த விசாரணை அமைப்புகள் தவறாகப் பயன்படுத்தக் கூடாது. பொருளாதாரக் குற்றங்களை தடுக்கும் வகையில் தான் விசாரணை அமைப்புகள் செயல்பட வேண்டும். இவ்வாறு அசோக் கெலாட் கூறினார்.


வாசகர் கருத்து (7)

 • Vijay D Ratnam - Chennai,இந்தியா

  உச்சநீதிமன்றம் தலையிட்டு கட்சி பாகுபாடின்றி தேர்தல் வெற்றிக்காக இலவசங்களை அறிவிக்கும் கட்சியை தேர்தலில் போட்டியிட ஆறு ஆண்டுகளுக்கு தடை விதிக்கவேண்டும். உழைக்கும் மக்கள் தரும் வரிப்பணத்தை தூக்கி இலவசங்கள் என்று அறிவிக்கும் கட்சியின் தலைவர், பொதுச்செயலாளர், பொருளாளர் மூவரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையில் தள்ளவேண்டும். உழைத்து சம்பாதிக்கும் நடுத்தர மற்றும் ஏழை மக்களுக்கு தேவைப்படும் மான்யம் கொடுக்கலாம் தப்பில்லை, ஆனால் இலவசம் கொடுப்பது பச்சை அயோக்கியத்தனம். 65 வயதை கடந்த ஆதரவற்ற முதியோர்கள், 16 வயதுக்கும் குறைவான அநாதை குழந்தைகள், உடல் ஊனமுற்றோர்கள், மனநலம் குன்றியோர்கள் போன்றவர்களுக்கு உதவித்தொகை வழங்கலாம். மனிதாபிமானம் வேறு அரசியல் அயோக்கியத்தனம் வேறு. யார் பணத்தை எடுத்து யார் யாருக்குய்யா கொடுக்குறீங்க. யாருய்யா உங்களுக்கு அந்த அதிகாரத்தை கொடுத்தது. சாலைகள், மருத்துவமனைகள், பள்ளி கல்லூரிகள், ஆறு குளம் ஏரி, கால்வாய், மின்சாரம், இதெல்லாம் மேம்படுத்துங்கய்யா. தொழில் துவங்க உகந்த மாநிலம் நம் தமிழகம். இங்கு அரசு தொழிற்பயிற்சி நிறுவனங்கள் (ITI) 30 அல்லது 31 தான் இருக்கும் அதை மூன்று மடங்கு அதிகப்படுத்துங்கய்யா. அதை உட்டுட்டு சாராயக்கடைக்கு போக காசு கொடுக்குறாய்ங்க.

 • விடியல் - ,

  வாக்குறுதிகள் நிறைவேற்ற பணம் எங்கிருந்து வரும் எப்படி நிறைவேற்றுவீர்கள். சோம்பேறிகளாக வேலை வெட்டி இல்லாமல் இருந்தால் போதைப் பழக்கம் தான் வளரும்.முதலில் மக்களை வேலை செய்ய பழக்கப்படுத்தி நல்ல மனநிலை வளரவிடுஙகள்

 • DVRR - Kolkata,இந்தியா

  ஆதி முதல் உளறிரிக்கொண்டெ இருக்கும் காங்கிரசின் உளறலே முதற்றே உளறல்

 • Seshan Thirumaliruncholai - chennai,இந்தியா

  காங்கிரஸ் வெற்றி பெற்றால் அதன் மீது நம்பிக்கை என்று எடுத்துக்கொள்ளக்கூடாது. பி ஜெ பி க்கு மிருக பலம் கொடுத்தால் அதன் விளைவின் தாக்கத்தை குறைக்க ஒரு மாற்று தேவை. மக்கள் எதார்த்த நிலை புரிந்தவர்கள்.

 • ராஜா -

  பேராசை பெரும் நஷ்டம்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்