Load Image
Advertisement

ராகுல் அரச குடும்பத்து இளவரசர்: சந்திரசேகர ராவ் மகள் கிண்டல்

Telangana Assembly Elections: Rahul Gandhi is a royal prince: Chandrasekhara Raos daughter kavitha ராகுல் அரச குடும்பத்து இளவரசர்: சந்திரசேகர ராவ் மகள் கிண்டல்
ADVERTISEMENT
நிஜாமாபாத்: ‛நாங்கள் எப்போதும் சந்திக்கும் ஆட்டோ ஓட்டுநர்கள், துப்புரவு பணியாளர்களை ராகுல் இன்று புதிதாக சந்திக்கிறார். அவர் ஒரு அரச குடும்பத்து இளவரசன்; ஆனால், நாங்கள் சாமானியர்கள்' என தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் மகள் தெரிவித்தார்.

தெலுங்கானாவில் 30ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. இதற்காக அங்கு சென்றுள்ள காங்கிரஸ் எம்.பி., ராகுல், ஆட்டோ ஓட்டுநர்கள், துப்புரவு பணியாளர்களை சந்தித்து உரையாடினார். இது தொடர்பாக ஆளும் பாரத் ராஷ்ட்ர சமிதி கட்சியின் தலைவர் சந்திரசேகர ராவின் மகள் கவிதா கூறியதாவது: நாங்கள் எப்போதும் ஆட்டோ ஓட்டுநர்கள், துப்புரவுப் பணியாளர்களை சந்தித்து வருகிறோம். ஆனால் ராகுல் இன்று அவர்களுடன் உரையாடல் நடத்தியுள்ளார்.
ராகுலுக்கு இது புதிது. அவர் ஒரு அரச குடும்பத்து இளவரசர்; ஆனால், நாங்கள் சாமானியர்களே!. நாங்கள் 100 இடங்களில் வெற்றிப்பெற இலக்கு வைத்துள்ளோம். நிச்சயம் 100 இடங்களில் வெற்றி பெறுவோம் என நம்புகிறேன். நாங்கள் எங்கு சென்றாலும் மக்கள் வரவேற்பு அமோகமாக உள்ளது, நாங்கள் நல்ல பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சிக்கு வருவோம் என்று உணர்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.


வாசகர் கருத்து (7)

  • பேசும் தமிழன் -

    தங்க ஸ்பூனில் சாப்பிடும்.... இத்தாலி இளவரசர் அவர்.... திருமணம் செய்யாமல்.... அடிக்கடி பட்டாயா போய் சாப்பிட்டு விட்டு வரும் ஆள் அவர் !!!

  • Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா

    அப்பா நீ, உன் சகோதரர் எல்லாம் யாரு?

  • Arul Narayanan - Hyderabad,இந்தியா

    இந்த அம்மையார் மட்டும் என்ன கட்சியில் உழைத்து படிப்படியாக உயர்ந்தாரா? அப்பா ஆட்சி அமைக்கும் தருணம் பார்த்து அமெரிக்க வேலையை விட்டுவிட்டு ஹைதராபாத் வந்து எம்பி ஆகி விட்டார்.

  • ஆரூர் ரங் -

    ஒரு காலத்தில் அடிக்கடி நான் சாமானியன் என்று கூறுவார் கட்டுமரம்😶. இப்போ ஆசியப் பணக்காரர் பட்டியலில்?

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்