Load Image
Advertisement

பா.ஜ., - சந்திரசேகர ராவ் கட்சி - ஓவைசி கட்சி மூன்றும் ஒரே அணி: ராகுல் குற்றச்சாட்டு

BJP - Chandrasekhara Raos party - Owaisis party are one team: Rahuls accusation   பா.ஜ., - சந்திரசேகர ராவ் கட்சி - ஓவைசி கட்சி மூன்றும் ஒரே அணி: ராகுல் குற்றச்சாட்டு
ADVERTISEMENT
ஹைதராபாத்: பல மாநிலங்களில் காங்கிரசை சேதப்படுத்தவும், பா.ஜ.,வை ஆதரிப்பதற்காகவும் பாரத் ராஷ்ட்ர சமிதி (பிஆர்எஸ்) வேலை செய்வதாகவும், இந்த இரு கட்சிகள் மற்றும் ஓவைசியின் ஏ.ஐ.எம்.ஐ.எம் ஆகிய மூன்றும் ஒரே அணி என்றும் காங்கிரஸ் எம்.பி., ராகுல் குற்றம் சாட்டினார்.

தெலுங்கானாவில் நாளை மறுநாள் (நவ.,30) சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான தேர்தல் பிரசாரம் இன்று மாலையுடன் ஓய்கிறது. இந்த நிலையில் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து அக்கட்சி எம்.பி., ராகுல் பிரசாரம் மேற்கொண்டார். ஹைதராபாத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் ராகுல் பேசியதாவது: மஹாராஷ்டிரா, அசாம், ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், கோவா ஆகிய மாநிலங்களில் காங்கிரசை சேதப்படுத்தவும், பா.ஜ., ஆதரிப்பதற்காகவும் அவர்கள் (பாரத் ராஷ்ட்ர சமிதி கட்சியினர்) வேலை செய்கிறார்கள்.

டில்லியில் பிரதமர் மோடியை தோற்கடிக்க வேண்டும் என்றால் முதலில் தெலுங்கானாவில் சந்திரசேகர ராவை தோற்கடிக்க வேண்டும். பி.ஆர்.எஸ்., பா.ஜ., மற்றும் ஓவைசியின் ஏ.ஐ.எம்.ஐ.எம் கட்சிகள் அனைத்தும் இணைந்து ஒரே அணியாக செயல்படுகின்றன. ஊழல் மிகுந்த அரசை நடத்தும் சந்திரசேகர ராவுக்கு எதிராக எந்த வழக்குகளும் இல்லை. அதேபோல், அமலாக்கத்துறை, சிபிஐ, வருமான வரித்துறைகள் அவர்களுக்கு எதிராக இல்லை. இவ்வாறு அவர் பேசினார்.


வாசகர் கருத்து (11)

  • பேசும் தமிழன் -

    யார் முதுகிலாவது ஏறி சவாரி செய்யலாம் என்று பார்த்தால்... யாரும் எங்களை கூட்டணியில் சேர்த்து கொள்ள சம்மதிக்க வில்லை... அதனால் இப்படி தான் ஏதாவது சாக்கு போக்கு சொல்ல வேண்டியுள்ளது!!?!

  • குமரி குருவி -

    அட மக்கு காங்கிரஸ் தமிழ்நாட்டில் தி.மு.க.வோடு வைத்துள்ள கூட்டணியை விடமோசம் அல்ல..

  • Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா

    எனக்கு ஒரு சந்தேகம். அது என்னவென்றால் ராகுல் குறிப்பிட்ட சந்திரசேகர ராவ் கட்சி - ஓவைசி கட்சி ஏன் அவர் துவங்கிய அந்த புள்ளி வைத்த I.N.D.I.A. கூட்டணியில் சேரவில்லை என்பதுதான்.

  • இராம தாசன் - சிங்கார சென்னை,இந்தியா

    அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் என்று சொன்னமாதிரி உ பிஸ் க்கு எல்லா கட்சியும் ஊழல் கட்சியாக தான் தெரியும் - தலைவன் எவ்வழியோ தொண்டன் அவ்வழி

  • DVRR - Kolkata,இந்தியா

    எந்த அரசு உளறினாலும் உய்வுண்டாம் உய்வில்லை முஸ்லிம் காங்கிரசின் உளறலுக்கு

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்