Load Image
Advertisement

அமலாக்கத்துறை சம்மனுக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை

Sand Quarry Issue: Chennai High Court Interim Stay on Enforcement Department Summons    அமலாக்கத்துறை சம்மனுக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை
ADVERTISEMENT
சென்னை: சட்ட விரோத மணல் விற்பனை தொடர்பாக மாவட்ட கலெக்டர்களிடம் விசாரணை நடத்த அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனுக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. அமலாக்கத்துறையின் ஆட்சேபனை மனுவிற்கு தமிழக அரசும், கலெக்டர்களும் விளக்கம் அளிக்க 3 வாரம் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் மணல் குவாரிகளில் அரசு நிர்ணயித்த அளவுக்கும் அதிகமாக, மணல் அள்ளி விற்பனை செய்ததாகவும், அதில் கிடைத்த வருமானத்தை, சட்டவிரோதமாக பணப் பரிமாற்றம் செய்ததாகவும் புகார் எழுந்தது. அதைத் தொடர்ந்து, அமலாக்கத் துறை அதிகாரிகள் ஒரே நேரத்தில், 34 இடங்களில் சோதனை நடத்தினர். சோதனையை தொடர்ந்து, நீர்வளத் துறை முதன்மை பொறியாளர் முத்தையா மற்றும் 10 மாவட்ட கலெக்டர்களை விசாரணைக்கு ஆஜராகும்படி, அமலாக்கத் துறை 'சம்மன்' அனுப்பியது.

இதையடுத்து தங்களுக்கு சம்மன் அனுப்பியதை எதிர்த்து, உயர்நீதிமன்றத்தில், பொதுத் துறை செயலர், நீர்வளத்துறை செயலர் மற்றும் திருச்சி, தஞ்சாவூர், கரூர், வேலுார், அரியலுார் மாவட்ட கலெக்டர்கள் சார்பில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்கள் மீதான விசாரணை நேற்று(நவ.,27) சென்னை உயர்நீதிமன்றத்தில் நடந்தது. மனுக்கள் மீது, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர் மோகன் அமர்வு இன்று(நவ.,28) தீர்ப்பு அளித்தது.


இடைக்காலத் தடை




அப்போது உயர்நீதிமன்ற நீதிபதிகள் கூறியதாவது: மாவட்ட கலெக்டர்களுக்கு அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனுக்கு மட்டும் இடைக்காலத் தடை விதிக்கப்படுகிறது. ஆனால் விசாரணைக்கு தடையில்லை. தமிழக அரசு தாக்கல் செய்த வழக்குகள் விசாரணைக்கு உகந்தது தான்.

அமலாக்கத்துறையின் ஆட்சேபனை மனுவிற்கு அரசும், கலெக்டர்களும் விளக்கம் அளிக்க 3 வாரம் அவகாசம் வழங்கப்படுகிறது எனக் கூறி உயர்நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர், சுந்தர் மோகன் அமர்வு விசாரணையை டிச.,19ம் தேதிக்கு ஒத்திவைத்தது.



பாராட்டு

வழக்கு குறித்து குறுகிய காலத்தில் பதிலளித்ததாக அலமலாக்கத்துறைக்கு உயர்நீதிமன்ற நீதிபதிகள் பாராட்டு தெரிவித்தனர்.



வாசகர் கருத்து (26)

  • தாமரை மலர்கிறது - தஞ்சை,இந்தியா

    அமலாக்கத்துறையின் நடவடிக்கைக்கு கடிவாளம் போடுவது, நாட்டில் ஊழலை வளர்த்து விடும் செயல்.

  • Siva Subramaniam - Coimbatore,இந்தியா

    Joint

  • Ramasamy - chennai,இந்தியா

    Super TN . A gift to voters of TN. first time in the history Government is sponsoring/protecting the corrupted to be officials. Super. This shows how the Government is. If Government s clean they should have allowed the enquiry and co operate the department to bring back the money looted. But looting is by xxxxxxxxxxxxxxx What to do . Its fate for the voters who voted for a bribe of Rs 500 to 1000

  • Nandakumar Naidu -

    0 ,,,,

  • GMM - KA,இந்தியா

    ED சம்மன் மீது இடைக்கால தடை விதித்த பின், எப்படி விசாரிக்க முடியும்? கலெக்டர் பதில் தாக்கல் வரை விசாரிக்க முடியாது? அதற்குள் மணலை கயிறாக திரித்து விடுவர். சம்மன், விசாரணை ஒன்றுடன் ஒன்று பிணைந்து இருக்கும். தமிழகம் தாக்கல் செய்த வழக்கு, ED ஆட்சேபணை மனு தனி. நீதிமன்றத்தில் (வழக்கறிஞர் நிதியின்) விளையாட்டு?

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்