Load Image
Advertisement

செந்தில் பாலாஜி ஜாமின் மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்

Supreme Court dismissed Senthil Balajis bail plea    செந்தில் பாலாஜி ஜாமின் மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்
ADVERTISEMENT
புதுடில்லி: செந்தில் பாலாஜியின் ஜாமின் மனுவை திரும்பப் பெற அனுமதித்து மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. கீழமை நீதிமன்றத்தில் ஜாமின் பெற மனுதாக்கல் செய்ய செந்தில் பாலாஜி தரப்புக்கு உச்சநீதிமன்றம் அறிவுரை வழங்கி உள்ளது.


அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்து புழல் சிறையில் அடைத்தது. சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் அவருக்கு ஜாமின் வழங்க மறுத்தது. இதனைத் தொடர்ந்து மருத்துவ காரணங்களை சுட்டிக்காட்டி உச்சநீதிமன்றத்தில் ஜாமின் கேட்டு செந்தில் பாலாஜி தரப்பில் தாக்கல் செய்யப்பட்டது. மனு உடன் செந்தில் பாலாஜியின் மருத்துவ சிகிச்சை தொடர்பான அறிக்கை உச்சநீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது.


செந்தில் பாலாஜி தரப்பு வாதம்




இந்த மனு மீதான விசாரணை இன்று(நவ.,28) உச்சநீதிமன்றத்தில் நடந்தது. அப்போது, செந்தில் பாலாஜி தரப்பில், இதயம், மூளை, நரம்பு சம்பந்தமான பிரச்னைகளுக்கு மருத்துவமனையில் வைத்து உரிய சிகிச்சையளிக்க வேண்டும். இருதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதால் மருத்துவமனையில் சிகிச்சையளிக்க வேண்டும் என வாதிடப்பட்டது.



சீரியஸாக இல்லை




இதையடுத்து உச்சநீதிமன்ற நீதிபதிகள் கூறியதாவது: செந்தில் பாலாஜியின் உடலில் இருக்கும் பிரச்னைகளை மருத்துகள் மூலம் குணப்படுத்தலாமே. chronic பிரச்னைகளை மருத்துகளால் தீர்க்க முடியும் என்று கூகுளில் படித்துள்ளேன். தேவையான பரிசோதனைகளை செய்துவிட்ட நிலையில் நீங்கள் முன்வைப்பது போன்று எதுவும் சீரியஸாக இல்லை என நீதிபதிகள் தெரிவித்தனர்.


கீழமை நீதிமன்றத்தை நாடுங்க




இந்த மனு மீதான விசாரணை முடிவடைந்த நிலையில், மருத்துவ காரணங்கள் அடிப்படையில் ஜாமின் வழங்க முடியாது என உச்சநீதிமன்றம் இன்று(நவ.,28) அவரது ஜாமின் மனுவை தள்ளுபடி செய்தது. கீழமை நீதிமன்றத்தில் ஜாமின் பெற மனுதாக்கல் செய்ய செந்தில் பாலாஜி தரப்புக்கு உச்சநீதிமன்றம் அறிவுரை வழங்கி உள்ளது.

பல்லடம்: பிரதமர் மோடியின் முழு பேச்சின் வீடியோ



வாசகர் கருத்து (71)

  • தாமரை மலர்கிறது - தஞ்சை,இந்தியா

    பத்து ரூவா பாலாஜி இனி ஐநா கோர்ட்டில் ஜாமீன் கேட்கலாம். பாலாஜிக்கு கெளுத்தி, வஞ்சரை என்று அணைத்து மீன்களும் ஜெயிலில் கிடைக்கிறது. ஜா மீன் மட்டும் தான் கிடைக்க மாட்டேங்குது.

  • Kalyan Singapore - Singapore,சிங்கப்பூர்

    பாலா அவர்களே தீய மு க வேரறுக்க வேண்டும் என்று கூவியது சாதனத்தை அல்ல ( அது தனி ) சனாதனத்தை திருவிளையாடல் வசனம் " பேசும்போது வக்கணையா பேசு எழுதும்போது கோட்டை விட்டு விடு " நினைவுக்கு வருகிறது

  • venugopal s -

    தலைப்புக்கும் செய்திக்கும் சம்பந்தம் இல்லையே! செந்தில் பாலாஜி தமது ஜாமீன் மனுவை திரும்ப பெற்றுக் கொள்ள உச்ச நீதிமன்றம் அனுமதி என்று தானே செய்தி!

  • Sathyam - mysore,இந்தியா

    உக்காருங்க ந உமக்கு மகா ஏழரை ஆரம்பம் சீக்ரம் திமுக கதறி கதறி ரத்தம் கக்கி அழிய போகிறது அது இறுதி உறுதி

  • Karthikeyan K Y - Chennai,இந்தியா

    ஒரு ஊழல் குற்றவாளியை அமைச்சராக தமிழக அரசு காப்பதை நீதிமன்றம் கண்டித்து அமைச்சர் பதவியில் மக்கள் வரி பணத்தில் நீடிப்பதை தடுக்க முடியாதா

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement