Load Image
Advertisement

மூளைச்சாவு அடைந்தவரின் உடல் உறுப்புகள் தானம் :அரசு மரியாதையுடன் நல்லடக்கம்

 Organ Donation of Brain Dead Person: State Honorable Disposition    மூளைச்சாவு அடைந்தவரின் உடல் உறுப்புகள் தானம் :அரசு மரியாதையுடன் நல்லடக்கம்
ADVERTISEMENT


தர்மபுரி,: சாலை விபத்தில் மூளைச்சாவு அடைந்த, இளைஞரின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டன.
தர்மபுரி மாவட்டம், காரிமங்கலம் அடுத்த எர்ரசீகலஹள்ளியை சேர்ந்த காளியப்பன் என்பவரது மகன் கவியரசு, 21; கடந்த, 24ல் அதியமான்கோட்டை அருகே பைக்கில் சென்றபோது, சாலை விபத்தில் படுகாயமடைந்தார். அவரை, தர்மபுரி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சேர்த்தனர்.
பின் மேல்சிகிச்சைக்கு சேலம் தனியார் மருத்துவமனையில் சேர்த்த நிலையில், அங்கு பரிசோதித்த மருத்துவர்கள், கவியரசுவின் தலையில் ஏற்பட்ட படுகாயத்தால், சிகிச்சை அளித்தாலும் பலனில்லை என தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து மீண்டும், தர்மபுரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். மூளைச்சாவு அடைந்த கவியரசுவின் உடல் உறுப்புகளை தானம் செய்ய அவரது பெற்றோர் முன்வந்தனர்.
இதையடுத்து நேற்று முன்தினம், அறுவை சிகிச்சையில் எடுக்கப்பட்ட இதயம், நுரையீரல், சென்னைக்கு கிரீன் கார்ட் ஆம்புலன்ஸ் மூலம், பாதுகாப்புடன் எடுத்துச் செல்லப்பட்டது. சிறுநீரகம் கோயம்புத்துார் மற்றும் சேலம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கும், கல்லீரல் தர்மபுரி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கும் அனுப்பி வைக்கப்பட்டன.
இதையடுத்து, உடல் உறுப்புகள் தானம் செய்த கவியரசு உடலுக்கு மருத்துவமனையில் தர்மபுரி மாவட்ட கலெக்டர் சாந்தி, மருத்துவர்கள், மருத்துவக் கல்லுாரி மாணவர்கள், செவிலியர்கள், மலர் துாவி மரியாதை செலுத்தினர். பின்னர் கவியரசு உடல் அவரது சொந்த ஊரில் நேற்று காலை, அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.


வாசகர் கருத்து (2)

  • Srinivasan Narayanasamy - Doha,கத்தார்

    எனக்குத் தெரிந்தபடி, கடந்த வாரம் தமிழகத்தில் இருவர் உடல் உறுப்பு தானம் செய்திருந்தனர். விபத்தின் போது இருவரும் மது அருந்தி உள்ளனர். எனவே வாகனம் ஓட்டும் போது மது அருந்தாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

  • KayD -

    இவர் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன். இவர் parents ku வீர வணக்கம்..

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement