Load Image
Advertisement

மாணவன் கழுத்தில் கத்தி குத்து: கல்லூரி பஸ்சில் "ஷாக்"

 Student stabbed in neck: "Shock" on college bus   மாணவன் கழுத்தில் கத்தி குத்து: கல்லூரி பஸ்சில் "ஷாக்"
ADVERTISEMENT
கரூர்: திருச்சி மாவட்டம் முசிறி பார்வதிபுரம் பகுதியில் வசித்து வருபவர் நிதீஷ் குமார். இவர் கரூர் மாவட்டம் குளித்தலை அருகே புலியூரில் இருக்கும் செட்டிநாடு இன்ஜினியரிங் என்ற தனியார் கல்லூரியில் எலக்ட்ரானிக் இன்ஜினியரிங் மூன்றாம் ஆண்டு படித்து வருகின்றார்.

மேலும் இவர் தினந்தோறும் முசிறியில் இருந்து கல்லூரிக்கு சொந்தமான பஸ்சில் சென்று வருவது வழக்கம். அதே கல்லூரி வேனில் அவருடன் திருச்சி மாவட்டம் தொட்டியத்தைச் சேர்ந்த எம்பிஏ முதலாம் ஆண்டு மாணவன் அண்ணாமலை என்பவரும் வந்துள்ளார்.

இந்நிலையில் இருவரும் சில நாட்களாக வேனில் பேசி கொள்ளாமல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து அண்ணாமலை இன்று(நவ.,27) கல்லூரிக்கு பஸ்சில் சென்றபோது நிதீஷ் குமாரிடம் கேட்டுள்ளார்.

இதற்கு நிதீஷ்குமார் பதில் அளிக்காமல் அமைதியாக இருந்துள்ளார். அப்போது மறைத்து வைத்திருந்த கத்தியால் நிதீஷ் குமாரை அண்ணாமலை தாக்கியுள்ளார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


வாசகர் கருத்து (4)

  • D.Ambujavalli - Bengaluru,இந்தியா

    அமெரிக்காவில். பள்ளிச்சிறுவர்கள் கூட பையில் துப்பாக்கி வைத்திருப்பது போல, இன்று. கல்லூரி மாணவர்கள் கத்தி வைத்திருக்கிறார்களோ ?

  • Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா

    ஒருவேளை காதல் விவகாரமாக இருக்கலாம்... அதாவது ஒரே பெண்ணை இந்த இருவரும் காதலித்திருக்கலாம். இப்படி எல்லாம் நடக்க முதல் காரணம் இன்றைய சினிமா படங்கள், இன்றைய டிவி சீரியல்கள்.

  • Krishnamurthy Venkatesan - Chennai,இந்தியா

    புத்தியை தீட்ட வேண்டிய மாணவர் கையில் கத்தி. மேலாண்மை படிப்பு அவருக்கு உதவில்லை.

  • தியாகு - கன்னியாகுமரி ,இந்தியா

    அநேகமா அந்த பையன் அகில உலக துணை நடிகர் சூப்பர் ஸ்டார் உதைணாவின் படங்களை அடிக்கடி பார்ப்பவனாக இருப்பான். அவர் படங்களில்தான் இதுபோன்ற கேவலமான காட்சிகள் சர்வ சாதாரணமாக இருக்கும்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement