Load Image
Advertisement

வீடு தேடி உதவும் மனிதநேய ராதா முத்து

Physiotherapy, Trigger Point Therapy: Humanity Radha Muthu helps in finding a home    வீடு தேடி உதவும்  மனிதநேய ராதா முத்து
ADVERTISEMENT
இந்த உலகில் நோயை குணப்படுத்துவதை போன்ற புனித பணி எதுவுமில்லை.

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தை சேர்ந்தவர் பிசியோதெரபி மருத்துவர் ராதா முத்து. 'ட்ரிகர் பாயின்ட்' தெரபி மூலம் சிறப்பு குழந்தைகள், முதுகு தண்டுவட ஜவ்வு விலகல் நபர்களுக்கு குறைந்த கட்டணத்தில் சிகிச்சை அளிக்கிறார். பெருநகரங்களில் இந்த சிகிச்சைக்கு ரூ.10 ஆயிரம் வரை செலவாகும். இவர் ரூ.150 - 200 பெற்று சிகிச்சை செய்கிறார்.

மருத்துவப்பணியோடு சமூக பணியும் செய்யும் இவர் அளித்த பேட்டி...

சொந்த ஊர் ராஜபாளையம் முறம்பு அருகே வாழவந்தாள்புரம். அப்பா முத்து வாழி, அம்மா முத்து குரு, கணவர் செங்குட்டுவன். கோயம்புத்துாரில் முதுகலை எம்.பி.டி., படிப்பும், தனி டிப்ளமோ படிப்புகளாக நியூரோ டெவலப்மென்ட் தெரபி, ட்ரிகர் பாயின்ட் தெரபி படித்தேன்.

2018ல் இருந்து ஆறு ஆண்டுகளாக சிகிச்சை அளித்து வருகிறேன். முறம்பில் கிளினிக் துவங்கினேன். சிறப்பு குழந்தைகளுக்கு உடல் தசை மாற்றங்களால் கை ஒரு பக்கமாகவும், கால் ஒரு பக்கமாகவும் செல்வதை ஆங்கிலத்தில் டிபாமிட்டி என்று கூறுவர். அவர்களுக்கு நல்ல பலன் தரும் சிகிச்சை தான் 'ட்ரிகர் பாயின்ட்' தெரபி, 'நியூரோ டெவலப்மெண்ட்' தெரபி.

இவை மூலம் சிறப்பு குழந்தைகளின் வளர்ச்சிதை மாற்றம் பாதிக்கப்படுவதை தடுக்க அல்லது இன்னும் முன்னேற்றத்திற்கு கொண்டுவரலாம்.

நான் இந்த தெரபியை பெற்றோருக்கும் கற்றுக் கொடுக்கிறேன். நான் அந்த குழந்தையோடு 30 நிமிடம் மட்டுமே பயணிக்க முடியும். பெற்றோர் அவர்களோடு மீதம் இருக்கக்கூடிய 23 மணி நேரமும் இருப்பதால் இப்பயிற்சிகளை அவர்கள் தெரிந்து கொள்வது அவசியம். மாற்றுத்திறனாளிகள், சற்று வேகமாக யாருடைய துணையும் இல்லாமல் நடமாட உதவுவது என்னுடைய குறிக்கோள். இதற்கு குறைந்த விலையில் மாற்றுத்திறனாளிகளுக்கு உபகரணங்கள் கிடைக்க உதவி செய்து வருகிறேன். நன்கொடையாளர்களும் உதவி செய்கின்றனர். சிறப்பு குழந்தைகளை துாக்கி கொண்டு நகரங்களுக்கு வர பெற்றோர் சிரமப்படுவர். இந்த மாதிரியான குழந்தைகளுக்கு அவர்களது வீட்டில் சென்று சிகிச்சை அளிக்கிறேன்.

கடந்த ஓராண்டில் 10 குழந்தைகள் நல்ல நிலையில் நடமாட துவங்கி விட்டனர். முதுகு ஜவ்வு விலகல் சிகிச்சையில் 400க்கும் மேற்பட்டோர் குணமடைந்துள்ளனர்.

வீடு தேடி சென்று ஒரு பாட்டிக்கு சிகிச்சை அளித்து கொண்டிருந்தேன். ஒரு நாள் அவர் சோறு பொங்கவில்லை. ஏன் என கேட்ட போது மின்சாரம் இல்லை என்றால் என்னால் சமைக்க முடியாது. ஆனால் வீட்டு உரிமையாளர் எனக்கு உணவு தந்து விட்டார் என்றார்.

இடுப்பு வலிக்கு சிகிச்சை அளிக்க முடியாததால் உறவினர்கள் பஸ் ஸ்டாண்டில் விட்டு சென்று விட்டனர் என்றும், அவரை அந்த வீட்டின் உரிமையாளர் வாடகையின்றி தங்க வைத்து மின் அடுப்பை ஏற்பாடு செய்து உணவுக்கும் வழி செய்துள்ளார் என்றும் கூறினார்.

இதை கேட்டதுமே எனக்கு நெகிழ்ச்சியாக இருந்தது. அந்த பாட்டிக்கு சிகிச்சை அளிக்க என்னை அழைத்தவர் அந்த வீட்டு உரிமையாளர் தான். இந்த சம்பவத்திற்கு பிறகு அவரிடம் கட்டணம் வாங்குவதை நிறுத்தி விட்டேன்.

நான் சிகிச்சை அளிக்க செல்லும் வீடுகளில் எல்லாம் ஒரு இயலாமையின் சோக கதை இருப்பதை உணர்ந்தேன்.

கை, கால் செயலிழந்து இருந்த பெண் குழந்தைக்கு சிகிச்சை அளித்தேன். ஏற்கனவே ட்ரக்யோஸ்டமி தொண்டை வழி சுவாச சிகிச்சை எடுத்து ஆபத்தான நிலையில் இருந்தார். நான் சிகிச்சை அளித்து இன்று நடக்கும் நிலையில் வந்துள்ளார். நான் வீட்டிற்கு சென்றால் சிலர் உணவு அளிப்பர். அன்போடு நடந்து கொள்வர். இதுவே எனக்கு போதுமானது என்றார்.

இவரை பாராட்ட 63800 00721


வாசகர் கருத்து (1)

  • Alagu Raj - Chennai,இந்தியா

    வாழ்த்துக்ககள் சகோதரி உன்னதமான சேவை. நல்லார் ஒருவர் உளரேல் அவர்பொருட்டு எல்லோர்க்கும் பெய்யும் மழை” பிரதிபலன் பாராமல் அன்பு செலுத்துவோர்களால் தான் அழகாகிறது இந்த உலகு.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement