Load Image
Advertisement

மன்னிப்பு கேட்க முடியாது: நடிகை குஷ்பு திட்டவட்டம்

 Cant apologize actress Khushbu plan    மன்னிப்பு கேட்க முடியாது:  நடிகை குஷ்பு திட்டவட்டம்
ADVERTISEMENT


சென்னை: ''சேரி என்பது தவறான வார்த்தை கிடையாது. அந்த வார்த்தையை பயன்படுத்தியதற்கு மன்னிப்பு கேட்க முடியாது'' என, தேசிய மகளிர் ஆணைய உறுப்பினரும், நடிகையுமான குஷ்பு தெரிவித்து உள்ளார்.

நடிகை த்ரிஷா, நடிகர் மன்சூர் அலிகான் இடையேயான பிரச்னை குறித்து, எக்ஸ் வலைதளத்தில் விவாதம் நடந்தது.

அதில், குஷ்புவிடம் மணிப்பூர் பிரச்னை குறித்து சர்ச்சையான முறையில் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், 'சேரி மொழியில் பேசுவதற்கு எல்லாம் பதில் தர முடியாது' என்று கூறினார். அது, பெரும் சர்ச்சையானது.

இந்த சூழ்நிலையில், சென்னை விமான நிலையத்தில் நேற்று குஷ்பு அளித்த பேட்டி:

என் சமூக வலைத்தளம் பதிவில் தெளிவாக போட்டிருக்கிறேன். நான் அந்த பதிவு, தி.மு.க.,வுக்கு தான் கொடுத்திருந்தேன். ஆனால், காங்கிரசார் அதை எடுத்துக் கொண்டு, என் வீட்டு முன் போராட்டம் முற்றுகை என்றெல்லாம் அறிவித்தனர்.

தி.மு.க.,வுக்கு போட்ட பதிவுக்கு, காங்கிரஸ் பொங்கிக் கொண்டு வருவது ஏன்? ஜனாதிபதியாக திரவுபதி முர்மு பதவியேற்ற போது, அதை தாங்கிக் கொள்ள முடியாமல் விமர்சனம் செய்தவர்கள் தான், இந்த காங்கிரசார்.

வேளச்சேரி என்பதற்கு என்ன அர்த்தம்? வேள ஏரி அல்ல. வேளச்சேரி தான். அதைப்போல அரசு ரெக்கார்டிலும், அந்த வார்த்தை உள்ளது.

எனவே நான் பேசியதில் தவறு இல்லை. இதனால், நான் வருத்தம் தெரிவிக்க மாட்டேன். நான் பேசியது ஒன்று; அதைத் திரித்து தவறுதலாக கூறுகின்றனர். எந்தப் பகுதி மக்களாக இருந்தாலும், அவர்கள் நமக்கு சமமாக உட்கார்ந்து வாழ்வதற்கு அனைத்து உரிமைகளும் உள்ளது.

நான் தமிழகத்துக்கு வந்து இத்தனை ஆண்டுகளில், யாரையும் தகாத வார்த்தைகளால் இழிவாக பேச மாட்டேன். பிரெஞ்சு மொழியில் சேரி என்றால் அழகு என்று அர்த்தம். அவ்வாறு நான் பேசுவது தவறா? மணிப்பூர் குற்றவாளிகளுக்கு துாக்கு தண்டனை விதிக்க வேண்டும் என முதலில் கூறியது நான் தான்.

மணிப்பூர் சம்பவத்திற்கு, தேசிய மகளிர் ஆணையம், மே மாதமே நடவடிக்கை எடுத்து விட்டது.

நடிகை திரிஷா விவகாரத்தில் புகார் வந்த பின், தான் நடவடிக்கை எடுத்தோம். நடிகை காயத்ரி ரகுராம், எங்களிடம் இதுவரை புகார் எதுவும் கொடுக்கவில்லை. ஆந்திர அமைச்சரான நடிகை ரோஜா, அவருக்கு ஏற்பட்ட பாதிப்பு குறித்து, எங்களுக்கு எழுத்து வாயிலாக புகார் அளித்தார். உடனே நாங்கள் நடவடிக்கை எடுத்தோம்.

நான் தற்போது போட்டுள்ள பதிவுகளை நீக்கப்போவது இல்லை. விளையாட்டு வீராங்கனைகள், பா.ஜ., - எம்.பி., மீது கொடுத்த புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கடந்த ஆண்டு நவ., முதல் இந்த நவ., வரை, 450 பட்டியல் இனப் பெண்களுக்கு எதிராக பாதிப்பு நடந்து உள்ளதாக, எங்கள் ஆணையத்துக்கு புகார்கள் வந்துள்ளன. அதில் எத்தனை புகார்களுக்கு எதிராக, விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் குரல் கொடுத்துள்ளனர்.

தேசிய மகளிர் ஆணையம் பல ஆண்டுகளாக இருக்கிறது. ஆனால், தற்போது நான் உறுப்பினரான பின் தான், தேசிய மகளிர் ஆணையத்தை பற்றி எல்லாரும் பேசுகிறீர்கள். இதுவரை பேசாதது ஏன்?

இவ்வாறு அவர் கூறினார்.


வாசகர் கருத்து (28)

  • Matt P - nashville,tn ,யூ.எஸ்.ஏ

    நானே சேரி பொண்ணு தான் . அப்படியிருக்கும்போது தவறான எண்ணத்தில் பேசுவேனா என்று சொல்லி பாருங்கள். மன்னிப்பு கிடைக்கலாம்....

  • Matt P - nashville,tn ,யூ.எஸ்.ஏ

    பிரெஞ்சு மொழியில் சேரி என்றால் அழகு என்று பொருள். நம்புகிறோம். சேரி மொழியில் பேசினால் பதில் சொல்ல மாட்டேன் என்கிறீர்கள். உங்க கூற்றுப்படி அழகு மொழியில் பேசினால் பதில் சொல்ல மாட்டேன் என்றல்லவா வருகிறது.சேரி என்றால் சேர்ந்து வாழும் இடம் என்று இருக்கலாம். ...சேரி என்று சொன்னது தப்பஅல்ல. சேரி மொழி உங்களுக்கு புரியாதது அதனால் நான் பதில் சொல்ல மாட்டேன். நான் யார் தெரியுமா? என்று உங்களையே உயர்த்தி நினைப்பது மாதிரி தொனிக்கிறது.

  • Godyes - Chennai,இந்தியா

    ஃபைல் பேடை பார்த்தால் நாடாதான் கண்ணுக்கு தெரிகிறதா.அதில் என்ன இருக்கிறது என்பது தெரியாதா.அதே ஞாபகம்.

  • Godyes - Chennai,இந்தியா

    நாடாவை அவிழ்த்தால் தெரியும் என்று சொன்ன நபரிடம் குஷ்புவாக இருந்தால் கோவணத்தை அவிழ்த்தால் என்ன தெரியுமோ அதேதான் இங்கேயும் தெரியும் என தைரியமாக பதில் சொல்லி வாயை அடைத்திருப்பார்.

  • Godyes - Chennai,இந்தியா

    இப்போ தாழ்த்தப்பட்டவர் என எவரும் இல்லை.ஒருகாலத்தில் அப்படி இருந்தவர்களை வெள்ளைக்காரன் மதம் மாற்றி சிறுபான்மை இன மக்களாக மாற்றி விட்டான். மீதமிருந்த சிலர் பணக்காரர்களாக மாறி உயர் நிலை பெற்று விட்டனர்.இல்லாததை வைத்து அரசியல் தெரியாத காங்கிரஸ் காரன் ஏதேதோ சொல்லி டபாய்க்கிறான்

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்