Load Image
Advertisement

அண்ணாமலையாரை அலங்கரிக்க காஞ்சியில் இருந்து மலர் மாலைகள்

 Flower garlands from Kanji to decorate Annamalai    அண்ணாமலையாரை அலங்கரிக்க காஞ்சியில் இருந்து மலர் மாலைகள்
ADVERTISEMENT


காஞ்சிபுரம், திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் திருக்கார்த்திகை தீப திருவிழா இன்று நடக்கிறது. இவ்விழாவிற்காக, காஞ்சிபுரம் காந்தி சாலை ஜவுளி வியாபாரிகள் சங்கம் சார்பில், ஆண்டுதோறும் 7 அடி உயரமுள்ள ஐந்து மாலைகள் மற்றும் பஞ்ச மூர்த்திகளுக்கு தனி மாலைகள், இங்கிருந்து எடுத்து செல்லப்பட்டு சுவாமிக்கு சாற்றப்பட்டு வருகிறது.

சுவாமிக்கு சாற்றப்படும் மாலைகளை, திருவண்ணாமலைக்கு அனுப்பி வைக்கும் நிகழ்ச்சி, காஞ்சிபுரம் ஜவுளி வியாபாரிகள் சத்திரத்தில் நேற்று நடந்தது. இதில், சங்க தலைவர் குமாரகாளத்தி குத்து விளக்கேற்றி வைத்து, மாலைகளுக்கு தீபாராதனை காண்பித்தார்பின், இந்த மாலைகள் திருவண்ணாமலைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

இதுகுறித்து சங்க தலைவர் குமாரகாளத்தி கூறியதாவது:

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் நடக்கும் திருக்கார்த்திகை தீபத்திற்கு, தொடர்ந்து 160 ஆண்டுகளுக்கும் மேலாக காஞ்சிபுரம் ஜவுளிக்கடை சத்திரத்தில் இருந்து மாலைகளை வழங்கி வருகிறோம். இதற்காக, அதிகாலை முதல் மாலை வரை 35 பேர் மாலைகளை உருவாக்கினர். ஒவ்வொரு ஆண்டும் மாலைகள் பாரம்பரிய முறைப்படி தயாரிக்கப்பட்டு வருகின்றன.

சுவாமிக்கும், அம்மனுக்கும் சாற்றப்படும் மாலையின் உயரம் 7 அடி. இந்த மாலைகள் 'மரக்கா' எனும் பாரம்பரிய பெயரில் அழைக்கப்படுகிறது. மொத்த மதிப்பு 1 லட்சம் ரூபாய்.

இவ்வாறு அவர் கூறினார்.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement