Load Image
Advertisement

அடுத்த நடவடிக்கை என்ன?

What is the next step?   அடுத்த நடவடிக்கை என்ன?
ADVERTISEMENT
புதுடில்லி: அமலாக்கத்துறை சமீபத்தில் காங்கிரசுக்கு சொந்தமான நிறுவனங்களின் 750 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை முடக்கியுள்ளது. 'நேஷனல் ஹெரால்டு' என்கிற காங்., பத்திரிகை நிறுவனம், சட்ட விரோத பண பரிமாற்றத்தில் ஈடுபட்டது என, வழக்கு தொடரப்பட்டது. 'பல கோடி ரூபாய் மதிப்புள்ள, 'அசோஷியேட்டட் ஜர்னல்ஸ் லிமிடெட்' நிறுவனத்தை, காங்கிரசின், 'யங் இண்டியன்' என்கிற நிறுவனம், வெறும் 90 லட்சத்திற்கு வாங்கியது' என்பது தான் குற்றச்சாட்டு.

இந்த நிறுவனங்களுக்குச் சொந்தமான புதுடில்லி, லக்னோ மற்றும் மும்பையில் உள்ள இந்த சொத்துக்கள், தற்போது முடக்கப்பட்டுள்ளன.

இந்த வழக்கில் சம்பந்தப்பட்டுள்ள சோனியா, ராகுல் தற்போது ஜாமினில் உள்ளனர். அமலாக்கத்துறை இருவரையும் பல முறை விசாரணை செய்து விட்டது.

இவர்கள் கைது எப்போது என்பது தான் இப்போது புதுடில்லி அரசியல் வட்டாரங்களில் உள்ள பரபரப்பு செய்தி. '2024 லோக்சபா தேர்தல் இன்னும் ஐந்து மாதங்களில் நடைபெற உள்ளது. இந்நிலையில் சோனியா, ராகுலை கைது செய்தால், அவர்கள் மீது பரிதாபம் ஏற்படும்; இதனால், தோல்வி அடையும் நிலையில் உள்ள, காங்., வெற்றி பெற வாய்ப்புள்ளது. எனவே, தேர்தலுக்கு முன்பாக கைது இல்லை' என்கின்றனர்.

'பா.ஜ., மீண்டும் ஆட்சி அமைத்தால் உடனே இவர்கள் இருவரும் கைதாக வாய்ப்புள்ளது' என, சொல்லப்படுகிறது. 'வரும், 2024ல் பா.ஜ., கூட்டணி தோற்கிற நிலையில் இருக்கிறது; அப்படியிருக்க எங்கள் தலைவர்கள் கைது என்பது வெறும் கனவு தான்' என்கின்றனர் காங்கிரசார்.

பல்லடம்: பிரதமர் மோடியின் முழு பேச்சின் வீடியோ



வாசகர் கருத்து (1)

  • Chakkaravarthi Sk - chennai,இந்தியா

    தப்பு செய்தவனுக்கு தண்டனை நிச்சயம் உண்டு. உத்தமர்கள் மகாத்மாக்கள் என்று யாரும் தன்னை தானே பாராட்டிகொள்ள கூடாது. அதை மற்றவர்கள் தான் சொல்ல வேண்டும்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்