Load Image
Advertisement

வாகனத்தில் ரேஷன் பொருள் வினியோகம் நிறுத்தப்பட்டதால் ஜம்பேரியில் அவஸ்தை

திருக்கழுக்குன்றம்:திருக்கழுக்குன்றம் அடுத்த அமணம்பாக்கம் ஊராட்சி, ஜம்பேரி பகுதியில், 75க்கும் மேற்பட்ட குடும்ப அட்டைதாரர்கள் உள்ளனர்.

இவர்கள், அரிசி, சர்க்கரை உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை, 2 கி.மீ., தொலைவில் உள்ள அமணம்பாக்கம் ரேஷன் கடைக்குச் சென்று வாங்கி வந்தனர்.

அவர்களின் சிரமத்தை போக்கும் வகையில், இரண்டு ஆண்டுகளாக வாகனத்தில் கொண்டுசென்று, அவர்களுக்கு ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டன.

அது தற்போது நிறுத்தப்பட்டு, மீண்டும் அமணம்பாக்கம் ரேஷன் கடைக்குச் சென்று வாங்கிக்கொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இது குறித்து, அப்பகுதியினர் கூறியதாவது:

ஜம்பேரியில் ரேஷன் கடை இல்லாமல், அமணம்பாக்கம் கடையில் பொருட்கள் வாங்கினோம். துாரம் கருதி, இரண்டு ஆண்டுகளாக வாகனத்தில் பொருட்களை கொண்டுவந்து கொடுத்தனர்.

இரண்டு மாதமாக, வாகனத்தில் பொருட்கள் கொண்டு வருவது நிறுத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே பொருட்கள் வாங்கிய ரேஷன் கடைக்கே வரவழைக்கின்றனர்.

அங்கு எப்போது பொருட்கள் வழங்கப்படும் என்பதே தெரியவில்லை. பெரும்பாலோர் வாங்குவதில்லை. மீண்டும் வாகனத்தில் கொண்டு வந்து வழங்க, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement