Load Image
Advertisement

தி.மு.க.,வுக்கு மட்டும் தனி சட்டமா?

 A separate law only for DMK?     தி.மு.க.,வுக்கு மட்டும் தனி சட்டமா?
ADVERTISEMENT
அண்ணாமலை வீடு அருகே கொடிகம்பம் வைக்க எதிர்ப்பு தெரிவித்த தமிழக போலீசார், திருச்செங்கோட்டில், 60 அடி உயர கம்பத்தில் தி.மு.க., கொடியை ஏற்ற அமைச்சர் உதயநிதிக்கு அனுமதி அளித்தது எப்படி என, தமிழக பா.ஜ., கேள்வி எழுப்பி உள்ளது.

தமிழக பா.ஜ., இளைஞர் மற்றும் திறன் மேம்பாட்டு பிரிவு தலைவர் அமர் பிரசாத் ரெட்டி கூறியதாவது:

சென்னை கானத்துாரில், தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை வீட்டு வாசலில் வைக்கப்பட்ட கொடிகம்பத்தை, இரவு, 12:00 மணிக்கு மேல், ஜே.சி.பி., இயந்திரம் வரவழைத்து போலீசார் அகற்றினர். அது தொடர்பாக நடந்த பிரச்னையை மையமாக வைத்து என்னை கைது செய்தனர்.

தி.மு.க., இளைஞர் அணி மாநாட்டுக்கு ஆட்களை திரட்டுவதற்காக, சேலம், கோவையில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட அமைச்சர் உதயநிதி, திருச்செங்கோடு ஒன்றியம், பால்மடை சந்திப்பில், 60 அடி உயர கொடி கம்பத்தில் தி.மு.க., கொடி ஏற்றி உள்ளார்.

பா.ஜ., கொடி கம்பம் அமைத்தது தவறு என்று கூறி, அதை அகற்றி நடவடிக்கை எடுத்த அதிகாரிகள், தி.மு.க., கொடி கம்பத்தை அகற்றுவார்களா? அமைச்சர் உதயநிதி மீது நடவடிக்கை எடுப்பார்களா? அதை செய்யவில்லை என்றால், போலீசார் ஒரு தலைபட்சமாக நடக்கின்றனர் என்றே எடுத்துக் கொள்ள வேண்டும்.

திருச்செங்கோட்டில் கொடி கம்பம் அமைக்க, தி.மு.க., யாரிடமும் அனுமதி பெறவில்லை. அனுமதியின்றி கொடிக்கம்பம் அமைக்க கூடாது என்ற உயர் நீதிமன்ற உத்தரவை, அரசியல் சட்டத்தின் அடிப்படையில், பதவி ஏற்ற அமைச்சர் உதயநிதி மதிக்காமல் செயல்படலாமா? அப்படியென்றால், அவர்களுக்கு மட்டும் தனி சட்டமா?

எங்கள் மீதான வழக்கு விசாரணைக்கு வரும் போது, இந்த விவகாரம் குறித்து நீதிமன்றத்தில் நியாயம் கேட்கப்படும்.


இவ்வாறு அவர் கூறினார்.

- நமது நிருபர் -


வாசகர் கருத்து (36)

  • G.Prabakaran - Chennai,இந்தியா

    முறையாக அனுமதி பெற்றுள்ளார்கள். அந்த பகுதி காவல் ஆய்வாளரிடம் விசாரியுங்க.

  • AMSA - chennai,இந்தியா

    சட்டமா .. தமிழ் நாடே எங்களுக்கு தான் சொந்தம்

  • Duruvesan - Dharmapuri,இந்தியா

    பர்மா பஜார் மூர்கன் கனடா, சரி madarasa டிகிரி அங்க ஒத்து கிட்டாங்க போல

  • MADHAVAN - Karur,இந்தியா

    எதுத்து பேசுனா தேசவிரோதி, இப்படி பேசுனா எச் ராஜா இப்போ என்ன ஆனாருனு தெரியுமா ? சொந்த கட்சிகாரனே அவரை ஹார்ட் அட்டாக் னு சொல்லி பேசாம இருன்னு சொல்லி அடக்கிட்டானுங்க,

  • raja - Cotonou,பெனின்

    சட்டம் எல்லாருக்கும் ஒண்ணுதான்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்