Load Image
Advertisement

பூத் கமிட்டிக்கு ஆளில்லை கமல் கட்சியில் திணறல்

 There is no one for the booth committee, Kamal is stuck in the party      பூத் கமிட்டிக்கு ஆளில்லை  கமல் கட்சியில் திணறல்
ADVERTISEMENT

நடிகர் கமலின் மக்கள் நீதி மய்யத்தில், பல மாவட்டங்களில் பூத் கமிட்டிக்கு ஆள் கிடைக்காமல், நிர்வாகிகள் திணறுவதாக தகவல் வெளியாகி உள்ளது.


மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல், சமீபத்தில் தன் 69வது பிறந்த நாளை, சென்னையில் பிரமாண்டமாக கொண்டாடினார். கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் பங்கேற்றனர். விழாவில் பேசிய கமல், 'அரசியலில் நமக்கு சாதகமான சூழல் ஏற்பட்டுள்ளது. இனிதான் உங்களுக்கு நிறைய வேலை இருக்கிறது' என்றார்.
இந்நிலையில், விருந்து முடித்த கையுடன் ஊர் திரும்பிய நிர்வாகிகளுக்கு, கமலுடன் ஒவ்வொருவரும் தனித்தனியே எடுத்துக் கொண்ட புகைப்படம் வாட்ஸாப் வாயிலாக அனுப்பப்பட்டது.

அதன்பின், ஒவ்வொரு மாவட்டத்திலும், லோக்சபா தேர்தலுக்கு நிர்வாகிகள் தயாராகுமாறு கேட்டு கொள்ளப்பட்டனர்.இதில், முதற்கட்டமாக மாவட்ட வாரியாக பூத் கமிட்டிகள் அமைக்க வேண்டும் என, நிர்வாகிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. ஆனால், பெரும்பாலான மாவட்டங்களில், பூத் வாரியாக தங்களுக்கு போதுமான ஆட்கள் இல்லாமல், மாவட்ட செயலர்கள் திணறுவதாக தகவல்கள் வெளியாகிஉள்ளன.

மாவட்ட பொறுப்பில் மட்டுமே நிர்வாகிகள் உள்ளதாகவும், அடுத்த நிலைகளில், ஓட்டுச்சாவடி வாரியாக போதுமான நிர்வாகிகள் இல்லாததால், பூத் கமிட்டி அமைப்பதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது.பூத் கமிட்டி அமைக்க ஆளில்லாமல், தேர்தல் கூட்டணியில் மட்டும் எப்படி பங்கேற்க முடியும்? எனவே, முடிந்தவரை ஆட்களை பிடித்து, பூத் கமிட்டி உறுப்பினர்களை நியமிக்குமாறு, மாவட்ட நிர்வாகிகளுக்கு, மாநில தலைமை அறிவுறுத்தி உள்ளதாக கூறப்படுகிறது.


வாசகர் கருத்து (25)

  • venugopal s -

    என்ன கமல் கட்சியும் தமிழக பாஜக போலாகிவிட்டது!

  • sankaranarayanan - Chennai-Tamilnadu,இந்தியா

    பூத் காமிட்டிக்கு ஆளில்லை என்பார் பிறகு அவரே அங்கெ பூதம் வந்துவிட்டது என்பார் சம்பாதித்த பணத்தை ஏழை எளிய மக்களுக்கும் வயதானவர்களுக்கும் பகிர்ந்து கொடுத்து வாழ்க்கையை மன நிம்மதியுடன் நடத்துங்கள் நல்ல பெயருடன் நிம்மதியாக வாழ்ந்து எஞ்சிய வாழ்க்கையை மனது நிம்மதியுடன் கழியுங்கள் பணத்தை வீண் விரயம் ஆக்காதீர்கள்

  • V GOPALAN - chennai,இந்தியா

    Booth committee people will take Rs.4000 and give only Rs.1000 to each voters. That is why he is worried

  • sridhar - Chennai,இந்தியா

    Why does he need men for booths. Who is going to vote for him.

  • HoneyBee - Chittoir,இந்தியா

    இவன் பேசாமல் இருந்து கவுரவத்தை காப்பாற்றி கொண்டு இருக்கலாம். இப்ப பணத்துக்காக சோரம் போய் விட்டான்

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement