Load Image
Advertisement

குறைப்பிரசவத்தை அதிகரிக்க வைக்கும்பல் ஈறு நோய்த்தொற்றுகள் இந்தியாவில் பல் மருத்துவத்தில் முதல் டாக்டரேட் ஜெய்தீப் தகவல்

Dr jaideep mahendra, Indias first doctorate in dentistry, reports on gum infections increasing prematurity   குறைப்பிரசவத்தை அதிகரிக்க வைக்கும்பல் ஈறு நோய்த்தொற்றுகள் இந்தியாவில் பல் மருத்துவத்தில் முதல் டாக்டரேட் ஜெய்தீப் தகவல்
ADVERTISEMENT
மதுரை: ''ஈறுகளில் நோய்த்தொற்று அதிகரித்தால் கர்ப்பிணிகளுக்கு குறைபிரசவத்திற்கான வாய்ப்புகள் அதிகம் ஏற்படும்'' என இந்தியாவில் பல் மருத்துவத்தில் முதல் 'டாக்டரேட் ஆப் சயின்ஸ்' பட்டம் பெற்ற சென்னையைச் சேர்ந்த டாக்டர் ஜெய்தீப் மகேந்திரா தெரிவித்துள்ளார்.

இவர் பல் மருத்துவத்துறையில் முதுநிலை படிப்பை முடித்தவர். இந்தியாவில் முதன்முறையாக பல்மருத்துவத்துறையில் 'டாக்டரேட் ஆப் சயின்ஸ்' பட்டம் பெற்ற பெண் டாக்டர். அமெரிக்காவில் உள்ள மெக்சிகன் ஸ்டேட் பல்கலையில் 'ஸ்டெம் செல்கள்' தொடர்பான முதுகலை முனைவர் பட்ட ஆராய்ச்சியை மேற்கொண்டுள்ளார். தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மாநில மன்றம் சார்பில் 2019ல் மருத்துவ அறிவியலில் தமிழ்நாடு விஞ்ஞானி விருது வழங்கப்பட்டது.

சர்வதேச இதழ்களில் 248 ஆராய்ச்சி முடிவுகளை வெளியிட்டுள்ள ஜெய்தீப் மகேந்திரா கூறியதாவது: பாதிக்கப்பட்ட ஈறுகளில் இருந்து பாக்டீரியாக்கள் ரத்தநாளங்கள் வழியாக ரத்தத்தில் நுழைந்து நோய் எதிர்ப்பு மண்டலத்தை பாதிப்படையச் செய்கிறது. நீரிழிவு, இருதய நோய், சுவாச நோய், எலும்பு சம்பந்தப்பட்ட நோய்களின் வீரியத்தை அதிகப்படுத்துகிறது.

ஈறுநோயானது நோய் எதிர்ப்பு மண்டலத்தை பலவீனப்படுத்துவது மட்டுமின்றி நீரிழிவு, இதய நோய் மற்றும் புற்றுநோய் வருவதற்கும் மாரடைப்பு, பக்கவாதம் ஏற்படுவதற்கு இரட்டிப்பு காரணியாகவும் செயல்படுகிறது. ஈறுகளில் நோய்த்தொற்று அதிகரித்தால் கர்ப்பிணிகளுக்கு குறைபிரசவத்திற்கான வாய்ப்புகள் அதிகம் ஏற்படும்.

மாதவிடாய் நின்ற பெண்களுக்கு குறிப்பாக உடலில் கால்சியம் அளவு குறைவால் எலும்பின் அடர்த்தி குறைந்து வாயை சுற்றியுள்ள திசுக்கள் (பெரிடோண்டல்) நோயால் பாதிக்கப்படுவதற்கு வாய்ப்புகள் அதிகமாக உள்ளது என்பதையும் நிரூபித்துள்ளேன்.

பல் நோய்களுக்கும் நாள்பட்ட சிறுநீரக நோய்களுக்கும் இடையே தொடர்பு உள்ளது என்பதை கண்டறிந்துள்ளேன். பொதுவான உடல்நலப் பிரச்னைகள் வாய்வழி ஆரோக்கியத்தை பாதிப்படைய செய்யும் என்பதே ஆய்வின் நோக்கம். ஊட்டச்சத்து நிலையும் வாய் ஆரோக்கியமும் ஒன்றுக்கொன்று தொடர்புடையது வாயில் உள்ள திசுக்களின் ஆரோக்கியம், உடல் நலம் பராமரிக்க ஊட்டச்சத்து உணவுகளை தொடர்ந்து சாப்பிட வேண்டும்.

ஊட்டச்சத்து குறைபாட்டின் ஆரம்ப அறிகுறி முதலில் வாயில் தென்படுகிறது. பல் அறுவை சிகிச்சை நிபுணர்கள் ஊட்டச்சத்துக் குறைபாட்டு அறிகுறிகளை முதலில் கண்டறிந்து விடுவர்.
வழக்கமான பரிசோதனையில் ஈறுநோய் கண்டறியப்பட்டால் நீரிழிவு நோய் இருப்பதை சந்தேகிக்கலாம். ஈறு சிகிச்சை மேற்கொண்ட நீரிழிவு நோயாளிகள் சிகிச்சைக்கு பின் அவர்களின் உடல் நலத்தில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதை ஆய்வில் உறுதி செய்துள்ளேன்.

நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்துவதற்கு உணவு, உடற்பயிற்சியைப் போலவே வாய் ஆரோக்கியமும் அவசியம். ஈறு நோய்களுக்கான சிகிச்சையில் ஜின்கோபிலோபா, மஞ்சள், மங்குஸ்தான் கூழ்மம், சுருள்பாசி கூழ்மம் போன்ற மூலிகைகளை பயன்படுத்தி வருகிறேன். ஆண்டுக்கு ஒருமுறை பல் டாக்டரை அணுகி பரிசோதனை செய்வதன் மூலம் ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தையும் பாதுகாக்கலாம் என்றார்.


வாசகர் கருத்து (2)

  • Arul Narayanan - Hyderabad,இந்தியா

    இதேபோல் வேறு ஒரு பல் மருத்துவர் ரிவர்ஸ் திசையிலும் கூறினார். பேறு காலத்தில் உட்கொள்ளும் சில மருந்துகள் கருவில் இருக்கும் சிசுவிற்கும் அதே சமயத்தில் தாய்ப்பால் அருந்தும் குழந்தைக்கும் பல் சம்பந்தப்பட்ட சில குறைபாடுகளை ஏற்படுத்தலாம் என்றார். ஆனால் அவர் சொன்னது ஐம்பது ஆண்டுகளுக்கு முந்தைய மருந்துகள் பற்றி. இப்போது எப்படியோ?

  • DVRR - Kolkata,இந்தியா

    அறிவுபூர்வமான கண்டுபிடிப்பு உலகில் டாக்டர்கள் இல்லவே இல்லை எல்லோரும் பிசினஸ் ஒன்றே பணம் செய்வது ஒன்றே மனதில் கருத்தில் உள்ள மருத்துவ வியாபாரிகள்

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement