Load Image
Advertisement

ஜெனரேட்டரை சி.என்.ஜி.,க்கு மாற்ற 85 சதவீத குடியிருப்புவாசிகள் தயக்கம்

புதுடில்லி:சி.என்.ஜி.,யால் இயக்கப்படும் ஜெனரேட்டருக்கு மாறுவதற்கு டில்லி - என்.சி.ஆர்., பகுதிகளில் உள்ள 85 சதவீத குடியிருப்புவாசிகள் தயங்குவது, ஆய்வில் தெரிய வந்துள்ளது.

டில்லி - என்.சி.ஆர்., பகுதிகளில் கடந்த அக்டோபர் 1ம் தேதி முதல் டீசல் ஜெனரேட்டர்களை பயன்படுத்துவதற்கு காற்றின் தர மேலாண்மை ஆணையம் - சி.ஏ.க்யூ.எம்., தடை விதித்துள்ளது. குளிர்காலத்தில் எழும் காற்று மாசுபாடு பிரச்னையை கட்டுப்படுத்துவதற்காக இந்த தடை அறிவிக்கப்பட்டது.

மேலும் டீசல் ஜெனரேட்டர்களை சி.என்.ஜி., வகைக்கு மாற்றுவதற்கு டிசம்பர் 31ம் தேதி வரை அது அவகாசம் அளித்திருந்தது.

இந்தத் தடை உத்தரவை பொதுமக்களும் குடியிருப்பு வளாகங்களும் எந்த அளவில் பின்பற்றுகிறார்கள் என்பது குறித்து சமூக வலைதளம் ஒன்று ஆன்லைனில் ஆய்வு நடத்தியது. சுய விருப்பத்துடன் தகவல்களை பகிரவிரும்புபவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. கருத்துகளை கண்டிப்பான முறையில் கேட்டுப் பதிவு செய்யப்படவில்லை என, அந்த சமூகவலை தளம் விளக்கம் அளித்துள்ளது. 22,000த்துக்கும் மேற்பட்டோரிடம் இருந்து கருத்துகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அது தெரிவித்துள்ளது.

டில்லி, குருகிராம், நொய்டா, பரிதாபாத், காசியாபாத் உள்ளிட்ட தேசிய தலைநகர் பிராந்தியத்தில் வசிக்கும் குடியிருப்புவாசிகளிடம் இந்த கணக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது.

சி.ஏ.க்யூ.எம்., தடையை பின்பற்றுகிறீர்களா? இல்லை என்றால் அதற்கான காரணம் உள்ளிட்ட கேள்விகள் கேட்கப்பட்டிருந்தன. இதில், 85 சதவீதம் பேர் சி.என்.ஜி., ஜெனரேட்டருக்கு மாறும் திட்டமில்லை என்றே பதில் அளித்துள்ளனர்.

இதற்கு நிதி நெருக்கடி ஏற்படுவதாக அவர்கள் கூறியுள்ளனர். 15 சதவீதம் பேரே சி.ஏ.க்யூ.எம்., உத்தரவை பின்பற்றப்போவதாக தெரிவித்துள்ளனர்.

டீசல் ஜெனரேட்டர்களை மாற்றுவதற்கு டிசம்பர் 31 வரை அளிக்கப்பட்டுள்ள அவகாசத்தைப் பற்றி கவலைப்படப்போவதில்லை என்று பலரும் கூறியுள்ளனர்.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement