Load Image
Advertisement

வாலிபர் பலிக்கு காரணமான நாய்: வீடு தேடி சென்று மன்னிப்பு கேட்டது

Karnataka, Davanagere, Bike accident, Tippesh: The dog responsible for the youths death went to the house and apologized  வாலிபர் பலிக்கு காரணமான நாய்: வீடு தேடி சென்று மன்னிப்பு கேட்டது
ADVERTISEMENT


தாவணகெரே:சாலையின் குறுக்கே வந்த நாயால், பைக் நிலைதடுமாறி கீழே விழுந்த வாலிபர் உயிரிழந்தார். தன் தவறை உணர்ந்த நாய், வாலிபர் வீட்டிற்கு சென்று, குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

கர்நாடக மாநிலம், தாவணகெரே மாவட்டம், ஹொன்னாளி காசினகெரே கிராமத்தில் வசித்தவர் திப்பேஷ், 21. கடந்த 16ம் தேதி இரவு அனவேரி என்ற கிராமத்தில் இருந்து, காசினகெரே நோக்கி பைக்கில் வேகமாக வந்தார்.

குருபரவித்லபுரா என்ற கிராமத்தில் வந்த போது, சாலையின் குறுக்கே ஒரு நாய் ஓடி வந்தது.

நாய் மீது மோதாமல் இருக்க, திப்பேஷ் பைக்கை திருப்பினார். அவரது கட்டுப்பாட்டை இழந்த பைக், சாலையில் கவிழ்ந்தது.

பைக்கில் இருந்து விழுந்த திப்பேஷ், தலையில் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே இறந்தார். அவரது இறுதிச்சடங்கு நிகழ்ச்சி அடுத்த நாள் நடந்து முடிந்தன.

இந்நிலையில், விபத்துக்கு காரணமான நாய், நேற்று முன்தினம் இரவு திப்பேஷின் வீட்டிற்கு சென்றது. வீட்டில் உள்ள அனைத்து அறைகளுக்கும் சென்று சுற்றி பார்த்தது.

இதன்பின் திப்பேஷின் தாய் முன் சென்ற நாய், மன்னிப்பு கேட்பது போல கால்களை மடக்கி அமர்ந்தது.தன் காலால், திப்பேஷ் தாயின் கையை வருடியது. இதனால், அவர் கண்ணீர் விட்டு அழுதார்.
'நீ எந்த தவறும் செய்யவில்லை; எல்லாம் விதி' என்று, நாயை பார்த்து அவர் ஆறுதல் கூறினார்.

இதை பார்த்து, திப்பேஷின் உறவினர்கள் கண்களும் குளமாகின. பின், அந்த நாய் அங்கிருந்து சென்று விட்டது.தன் தவறை உணர்ந்து, நாய் மன்னிப்பு கேட்டு சென்றதாக கிராம மக்கள் பேசி வருகின்றனர்.


வாசகர் கருத்து (13)

 • thangam - bangalore,இந்தியா

  திருட்டு குராவிடம் நமது மக்களிடம் எப்போது மன்னிப்பு கேட்க்கும்? நாய்க்கு புரிந்தது கூட திருட்டு குராவிடத்துக்கு புரியவில்லை.

 • g.s,rajan - chennai ,இந்தியா

  ஐந்தறிவு கொண்ட ஜீவ ராசிகளுக்குக் கூட சிந்திக்கும் திறன் தவறை ஒப்புக்கொள்ளும் மனப்பக்குவம் உள்ளது மிகவும் ஆச்சரியம் ,ஆனால் ஆறறிவு கொண்ட மனிதனிடம் எதுவும் இல்லை என்பது வேதனை

 • M Ramachandran - Chennai,இந்தியா

  நாய்க்கு உள்ள நன்றி அறிவு விடியலுக்கு இல்லையய இப்போர் போடுமக்காள் அதிகம் உபயோங்கிக்கும் நீளம் மற்றும் பசியானிறை ஆவின் பால் பாக்கெட்டுக்கள். ஆவின் ன்னைய்ய முடக்கும் முயற்சியாகலிய்ய பல வழிகளில் இந்த அரசு செய்கிறது . இப்பொ பச்சையய் நிற கலர் பாக்கெட்டுக்களிய வகியாரும் 16. ஆம் தேதியிலிருந்து நிறுத்த முடிவு செய்துள்ளதாகா ஆவின் பூத் தின் யேஜெண்ட் கூறுகிறார். என்ன இது அயோக்கிய தனம். தனியாரிடம் கைய்ய கூலி பெற்று கொண்டு ஆவினய்யய் முடக்கும் இந்த கும்பல்லை மத்திய அரசு பதவியிலிருந்து விரட்ட வேண்டும் . ஆ தீ மு க்கா ஆட்சியில் மக்கள் விரோத செயல்கள் இவ்வளவு இல்லை.

 • M Selvaraaj Prabu - Kanjikode, Palakad,இந்தியா

  அதிசயம், ஆனால் உண்மை (என்று நம்பலாம்)

 • தஞ்சை மன்னர் - Tanjore,இந்தியா

  தேவர் சினிமா பார்ப்பதுபோல இருக்கு

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement