Load Image
Advertisement

சேலம் அரசு மருத்துவமனையில் தீ விபத்து

 Salem Government Hospital fire Accident   சேலம் அரசு மருத்துவமனையில் தீ விபத்து
ADVERTISEMENT


சேலம்: சேலம் அரசு மோகன் குமாரமங்களம் மருத்துவக்கல்லூரி மருத்துமனையில் மின்கசிவு காரணமாக முதல் தளத்தில் இன்று(நவ.,22) தீ விபத்து ஏற்பட்டது.


அறுவை சிகிச்சைப்பிரிவில் இருந்த ஏசி மிஷினில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக விபத்து ஏற்பட்டது. அறுவை சிகிச்சைப் பிரிவில் இருந்த நோயாளிகள் அனைவரும் அவசரமாக வெளியேற்றப்பட்டதால் பெரும் உயிர்ச் சேதம் தவிர்க்கப்பட்டது

தீயை அணைக்கும் பணியில் 10க்கும் மேற்பட்ட தீயணைப்பு துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர். இத்தீவிபத்தில் இருவர் காயமடைந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. விபத்து பகுதி முழுவதுமாக புகை மண்டலமாக இருப்பதால் நோயாளிகளுக்கு மூச்சு திணறல் ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்ட்டுள்ளது


வாசகர் கருத்து (5)

  • ராஜா -

    இது நல்ல ராசியா?

  • duruvasar - indraprastham,இந்தியா

    திராவிட மாடல் ஆட்சிக்கு வந்தபின் இரண்டாவது முறையாக நடக்கிறது என்ற ஞாபகம். சரியாக நினைவில்லை.

  • ஆரூர் ரங் -

    முதலில் மருத்துவமனையின் பெயரை மாற்றவும். நாட்டை நேரு குடும்ப ஆட்சியாக ஆக்கிய வில்லன்களில் ஒருவர். 😶 நீதிபதிகள் ஆளும் அரசின் கொள்கைகளை அப்படியே ஏற்று செயல்பட வேண்டும் என்று அராஜகமாக பேசிய ஆளு.

  • Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா

    நல்லவேளை உயிர்ச்சேதம் எதுவும் இல்லை. அதற்காக இறைவனுக்கு முதலில் நன்றி தெரிவிப்போம்.

  • karthikeyan - karur,இந்தியா

    டிவி நியூஸ் பார்த்தேன். அதில் நோயாளிகளை நடக்கவைத்து கூட்டிட்டு போகிறார்கள். அதுவே தனியார் மருத்துவமனையாக இருந்திருந்தால் ஸ்ட்ரெச்சரில் அவசரமாக கூட்டிட்டு வந்திருப்பார்கள். இதுதான் காசு குடுத்து சிகிச்சை பார்ப்பதற்கும் , காசு இல்லாமல் பார்ப்பதற்கும் உள்ள வித்யாசம். அதாவது ஒரு பத்து ஸ்ட்ரெச்சர் வாங்குவதற்கு கூட அரசிடம் காசு இல்லை போல

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்