Load Image
Advertisement

ராமாயணம், மகாபாரதத்தை பாடத்தில் சேர்க்க பரிந்துரை

NCERT: Social Science Syllabus: Suggestion to include Ramayana, Mahabharata in the subject    ராமாயணம், மகாபாரதத்தை பாடத்தில் சேர்க்க பரிந்துரை
ADVERTISEMENT
புதுடில்லி,:ராமாயணம், மகாபாரதம் போன்ற இதிகாசங்களை சமூக அறிவியல் பாடத்திட்டத்தில் சேர்க்க, என்.சி.இ.ஆர்.டி., குழு பரிந்துரை செய்துள்ளது.

என்.சி.இ.ஆர்.டி., எனப்படும் தேசிய கல்விஆராய்ச்சி மற்றும் பயிற்சி குழு கடந்த ஆண்டு ஏழு பேர் கொண்ட குழுவை அமைத்தது. இந்த குழுவினர் சமூக அறிவியல் பாடத்தில் சிறந்த அடித்தளத்தை அமைப்பதற்கான பல்வேறு பரிந்துரைகளை செய்தது. இது தொடர்பாக என்.சி.இ.ஆர்.டி.,யின் தலைவர் சி.ஐ. ஐசக் கூறியதாவது:

சமூக அறிவியல் பாடத்திட்டத்தில் ராமாயணம் மற்றும் மகாபாரதம் போன்ற இதிகாசங்களை மாணவர்களுக்கு கற்பிக்க இந்த குழு வலியுறுத்தியுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான மாணவர்கள் வெளிநாடுகளில் குடியேறுவதற்கு, அவர்களிடம் தேசப்பற்று இல்லாததே காரணம்.

எனவே, அவர்களுக்கு தேசம் மற்றும் கலாசாரம் குறித்த அறிவை வளர்ப்பது முக்கியம். ஏற்கனவே சில கல்வி வாரியங்கள் ராமாயணம் மற்றும் மகாபாரதத்தை தங்கள் பாடத்திட்டத்தில் கற்பித்து வருகின்றன. இதை விரிவாக கற்றுத் தரவேண்டும். என்.சி.இ.ஆர்.டி., தேசிய கல்விக் கொள்கைக்கு ஏற்ப பள்ளி பாடத்திட்டத்தை திருத்துகிறது. புதிய பாடப்புத்தகங்கள் அடுத்த கல்வி ஆண்டுக்குள் தயாராகும்.இவ்வாறு அவர் கூறினார்.


வாசகர் கருத்து (37)

  • BalaG -

    வாழ்க பாரதம். புதிய நம்பிக்கை பிறக்கிறது

  • r.sundaram - tirunelveli,இந்தியா

    பாரதியார் பாட்டுக்களை பாடத்திட்டத்தில் சேர்த்தால் தானாக தேசபக்தி வந்து வீசிடும்.

  • திகழ்ஓவியன் - AJAX ONTARIO,கனடா

    புனை சுருட்டு வேலை எல்லாம் இருக்கும் இன்று மாணவர்கள் ஏற்பார்களா

  • g.s,rajan - chennai ,இந்தியா

    ஒருவன் வாழ்வில் எப்படிஎப்படி எல்லாம் வாழ வேண்டும் என்பதை ராமாயணம் கூறுகிறது ,ஒருவன் வாழ்வில் எப்படி எப்படி எல்லாமிருக்கக்கூடாது என்பதற்கு மஹாபாரதம் ஒரு நல்ல உதாரணம்.

  • J.Isaac - bangalore,இந்தியா

    சரித்திரமா? புராணமா ?

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement