பாலிவுட் நடிகர் வீர் தாசுக்கு எம்மி விருது
புதுடில்லி சிறந்த காமெடிக்கான சர்வதேச எம்மி விருதை, இந்த ஆண்டு பாலிவுட் நடிகர் வீர் தாஸ் பெற்றார். இதேபோல் சிறந்த இயக்குனருக்கான விருதை ஏக்தா கபூர் பெற்றார். இதன் வாயிலாக இந்தியாவுக்கு இரண்டு சர்வதேச எம்மி விருதுகள் கிடைத்துள்ளன.
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் சர்வதேச திரைப்பட விருது வழங்கும் விழா நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் இந்தியாவை சேர்ந்த இருவர் சர்வதேச எம்மி விருதுகளை பெற்று சாதனை படைத்துள்ளனர்.
சிறந்த காமெடிக்கான சர்வதேச எம்மி விருதை, நடிகர் வீர்தாஸ் பெற்றுள்ளார். 'வீர் தாஸ்: லேண்டிங்' என்ற காமெடி நிகழ்ச்சியில் நடித்ததற்காக இந்த விருது அவருக்கு வழங்கப்பட்டது.
இதன் வாயிலாக காமெடி பிரிவில் சர்வதேச எம்மி விருதை வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையை வீர் தாஸ் பெற்றுள்ளார்.
இதேபோல் சிறந்த இயக்குனருக்கான விருதை ஹிந்தி பட தயாரிப்பாளரும், இயக்குனருமான ஏக்தா கபூர் பெற்றுள்ளார்.
சிறந்த இயக்குனருக்கான விருதை பெறும் முதல் இந்திய பெண்மணி ஏக்தா கபூர். சினிமா மற்றும் தொலைக்காட்சி தொடரில் ஆற்றிய சேவைக்காக, அவருக்கு இந்த விருது வழங்கப்படுகிறது.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!