Load Image
Advertisement

பிரதமரை விமர்சித்த ராகுல் :கடுமையாக கண்டித்த பா.ஜ.,

 BJP strongly condemned by Rahul for criticizing the Prime Minister.   பிரதமரை விமர்சித்த ராகுல் :கடுமையாக கண்டித்த பா.ஜ.,
ADVERTISEMENT


புதுடில்லி: 'உலக கோப்பை கிரிக்கெட்டின் இறுதிப் போட்டியில், இந்தியாவின் தோல்விக்கு பிரதமர் மோடியின் கெட்ட சகுனம் காரணம்' என குறிப்பிட்ட, காங்., - எம்.பி., ராகுலுக்கு பா.ஜ., தலைவர்கள் கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளனர்.

ராஜஸ்தானில் வரும் 25ம் தேதி சட்டசபை தேர்தல் நடக்கிறது. அதற்கான இறுதிகட்ட பிரசாரங்களில் காங்கிரஸ் மற்றும் பா.ஜ., தலைவர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

வல்லப்நகர் தொகுதியில் நேற்று காங்., எம்.பி., ராகுல் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசியதாவது:

பிரதமர் மோடி எப்போதும் முக்கிய பிரச்னைகளில் இருந்து மக்களை திசைதிருப்புகிறார்.

சில சமயம், 'டிவி'யில் தோன்றி, ஹிந்து மற்றும் முஸ்லிம் பற்றி பேசுவது, சில சமயம் கிரிக்கெட் விளையாட்டை காணச்செல்வது என, அவரது நடவடிக்கை உள்ளது.

நம் அணியினர் உலக கோப்பையை வென்றிருப்பர். ஆனால் கெட்ட சகுனத்தால் தோற்றுப்போனோம். 'பி எம்' என்றால் கெட்ட சகுனம் என்று அர்த்தம்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதற்கு பதிலடி தரும் வகையில், முன்னாள் மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கூறியதாவது:

பிரதமர் குறித்த ராகுலின் கருத்து கண்டிக்கத்தக்கது. ராஜஸ்தான் மற்றும் பிற மாநில தேர்தல்களில் காங்., தோற்கப்போவதால், அவர் விரக்தியில் இவ்வாறு பேசியுள்ளார். ராகுலின் சாயம் வெளுத்துவிட்டது.

கடந்த, 2007ல் குஜராத் சட்டசபை தேர்தலின் போது, அப்போதைய முதல்வர் மோடியை, மரண வியாபாரி என சோனியா குறிப்பிட்டார். அந்த தேர்தலில் பா.ஜ., மொத்தமுள்ள 182 இடங்களில் 117 இடங்களை வென்றது. காங்., வெறும் 59 இடங்கள் தான் பெற்றது என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். ராகுல் தனது கருத்துக்கு மன்னிப்பு கேட்கவில்லை என்றால், அவரை சும்மா விடமாட்டோம்.

இவ்வாறு அவர் கூறினார்.


வாசகர் கருத்து (37)

 • DARMHAR/ D.M.Reddy - Los Angeles,யூ.எஸ்.ஏ

  பயித்தியக்காரனை சுற்றி பாத்து பேர் அது போலத்தான் ராகுலை சுற்றியும் ஒரு கூட்டம்.

 • M Ramachandran - Chennai,இந்தியா

  1./2. ticket பேச்சுக்கெல்லாம் இவ்வளவு மரியாதையா கொடுப்பீர்கள் . சமயத்தில் மேல் மாடி காலியானதால் வாயிலுள்ள நாக்கு என்ற எழும்பிலதா மற்றொரு பாகம் அது பாட்டுக்கும் ஏதோ பெண்டுலம் போல பெரலும். அப்போ வரும் சத்தம் அது போலா வேறு சில ஓட்டையிகளிருந்து சத்தம் வரும் அதையெல்லாம் காது கொடுத்து கேக்காமல் கை குட்டையய் வைத்து மூக்கை மூடி கொண்டு போவதில்லையா அது மாதிரி போய்க்கொண்டு இருக்கணும்

 • vbs manian - hyderabad,இந்தியா

  இவரின் சகுன மஹிமையை தெரிந்து மத்திய பிரதேசத்துக்கு வர வேண்டாம் என்று சொல்லி விட்டார்கள். பிற இடங்களிலும் இந்த புண்ணியவான் வர வேண்டாம் என்று பிரார்த்திக்கிறார்கள்.

 • karunamoorthi Karuna -

  நல்ல சகுனம் காங்கிரஸ் கட்சிக்கு

 • ஆரூர் ரங் -

  ராகுல் பிரச்சாரத்துக்கு வரவே வேண்டாம் என அவரது கட்சி ஆட்களே தெரிவித்தது நினைவிருக்கலாம்😮‍💨. தலைமைப் பதவி பதவியேற்ற பிறகு பெரும்பாலும் தேர்தல் தோல்வியையே சந்தித்த ராசி.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement