மாநிலத்தின் வளர்ச்சி கருதி, அரசும், கவர்னரும் இணைந்து ஒத்த கருத்துடன் செயல்பட வேண்டும் என்பது தான் மக்களின் விருப்பமாக உள்ளது. மாறாக, கவர்னரை தமிழக அரசு எதிரியாக பார்ப்பது ஏற்புடையது இல்லை. கவர்னரும், தமிழகத்தின் நலனை முன்வைத்து செயல்பட வேண்டிய நிலை ஏற்பட வேண்டும்.
இந்த அரசின் விவசாய எதிர்ப்பு போக்கு, காவிரி பிரச்னையின்போது பார்த்தோம். ஒருமுறை கூட, காவிரி பிரச்னைக்காக, அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டவில்லை. ஒருமுறை கூட முதல்வரோ அல்லது அமைச்சரோ, கர்நாடக மாநிலத்திற்கு நேரில் சென்று வலியுறுத்த வில்லை. தி.மு.க., அரசு பசுந்தோல் போர்த்திய புலி போல் இருக்கிறது என்பதை. விவசாயிகள் உணர துவங்கி விட்டனர். சட்டம் ஒழுங்கு கெட்டு வருகிறது. காவல் துறையில் சுதந்திரமான செயல்பாடு இருக்க வேண்டும். தவறு செய்பவர்களை இரும்புக் கரம் கொண்டு அடக்க வேண்டும்.
உங்க அப்பா சேர்த்த மரியாதை உன்னால போக போவுது,